Translate

சனி, 2 பிப்ரவரி, 2013

டேவிட்-விக்ரமும் அவரின் முட்டாள் ரசிகர்களும் ....

விக்ரம்,ஜீவா நடித்து வெளியான டேவிட் தமிழ் பேசும் திரைகளை கதற கதற கிழித்து கொண்டிருக்கும் வேளையில் இன்னும் நம்மளை கதிகலங்க வைத்துள்ளனர் விக்ரம் ரசிகர்கள்


 ராஜபாளையம் சாந்தி திரையரங்கில் மக்களை ஓட ஓட விரட்டியடிக்கும் டேவிட் படத்தை  தினமும் ஆட்டோ ஓட்டும் இளையராஜா என்பவர் "சூப்பர்"  படம் என்று சீரியஸாக  காமெடி ஆட்டோ ஓட்டியிருப்பார்  போல.விடுவார்களா பொழுதுபோக்கு தீவிரவாதிகள்?

பிரபல நடிகர்களின் முதல் நாள் ஷோவை தமது முதலிரவை போல பாவிக்கும் ரசிக தீவிரவாதிகள் நிரம்பிய தியேட்டரில் படம் பார்க்க போனதும் இல்லாமல் ஒன் வே ரூட்டில் வண்டிய உட்டுகிட்டு  எதுத்தாப்ல வர்றவன பார்த்து சவுண்ட விட்டா சும்மா விடுவார்களா? 

இளையராஜா என்னும் அந்த ஓட்டுனர் அடித்து துவைக்கப்பட்டு ஆடைகளின்றி சாலையில் வீசப்பட்டார்.ஆணாக இருந்தா என்ன ? மானம் கொண்ட சமூகம்  கொண்டுதானே ஆடைகள் அணிந்திருந்தார்......அந்த சமூகத்திலேயே சமூகத்தாலேயே  அது உரியப்பட்டது.

அதிலும் இந்த ஒரு ஆளை அடிக்க உதைக்க அவுத்து விட என்று கிட்டத்தட்ட முப்பது பேர் கொண்ட ரசிக தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளனர்.அதில் பத்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது.மிச்ச தீவிரவாதிகளை தண்ணியில்லா குளத்தில் வலை வீசி தேடுவதாக சன் செய்திகள்  சொல்கிறது.

நான் ஏன் அடித்து போட்ட அந்த விக்ரம் ரசிகர்களை முட்டாள்கள் என்று சொல்ல வேண்டும்? 
நானும் அந்த டேவிட் படத்தை இரவு பார்க்க சென்றிருந்தேன்.எனக்கு மூன்று வரிசை மேலே விக்ரம்,எமி ஜாக்சன்,இயக்குனர் சங்கர்,அவரின் மனைவி,மற்றும் உடன் பணிபுரிவர் என "ஐ" பட குழுவும் படம் பார்க்க வந்திருப்பது  எங்களுக்கு தெரியாது.


மிக மெதுவாக நகர்ந்த படத்தால் கடுப்பான என் நண்பன் இடைவேளை வரவும் தன குடும்பத்தோடு வெளிநடப்பு செய்வதாக கூறினான்.படம் மொக்கைதான் இருந்தாலும் முழுசா பார்ப்போம் என்ற சமாதான பேச்சையும் மீறி கிளம்பி விட்டான்.வெளியே அநியாயகார்ன்(பாப்கார்ன்) வாங்க மற்றும் அவனை வழியனுப்ப வாசல் வரை வந்த போதுதான் விக்ரம் & குழு உள்ளே உள்ளதை அறிய முடிந்தது.

இந்த படத்தை நாங்கள் விமர்சித்ததையும் அதை தொடர்ந்து நண்பன் கிளம்புவதையும் விக்ரமும் அவர் குழுவும் கவனிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை.அவர் என்ன எங்களை அடித்தாரா?இல்லை குறைந்த பட்சம் முகத்தைத்தான் திருப்பி கொண்டாரா?படம் முடியும் போது கடுப்பாயி போக கிளம்பி போகாம  திரும்புன  நண்பன் தன் குடும்பத்தோடு விக்ரமோடு புகைப்படம் எடுத்து கொண்டான்.

நாங்க பேசுன விமர்சனத்திற்கு அவரே ஒன்னும் சொல்லல....அவரே எந்த ஆணியையும் புடுங்க வேண்டாம்னு சொன்னாலும் தன்னை போல அன்றாடம் வேலைக்கு சென்று வாழ்வை ஓட்டும் ஒரு ஆட்டோ ஓட்டுனரை அடித்து உதைத்து அசிங்கம் செய்தால் முட்டாள்னு சொல்லாம முழங்கால் போட்டு கும்பிடவா முடியும்?


மாறி மாறி முதல்வர்களை தரும் ரசிக தீவிரவாதிகளும் மதுவை தரும் முதல்வர்களும் இருக்கும் வரை நாளை இது போன்ற ஒன்றுமில்லா காரணங்களுக்கு கொலை கூட விழலாம். 

பின் குறிப்பு : பொதுவாக இது போன்ற சம்பவங்களில் மது ஒரு முக்கிய இடம் வகிக்கும்.தவிர கைது செய்யப்பட்டவர்களும் நம்மை போல சாதாரண மக்கள்தான்.இனி காவல்துறைக்கு பணம்,கோர்ட்டு,கேஸ்,தண்டனை  என்று எத்தனை அலைச்சல்? மன உளைச்சல் ? இது தேவைதானா?

நீங்க தைரியமான ஒரு டேவிட்டா இருந்தா இந்த மாணிக்கமும் ஆட்டோ ஓட்டுறவர்தான்...முடிஞ்சா அடிச்சி பாருங்கடா  :) :) :) :) :)


இன்றைய எனக்கு பிடித்த வெளிச்சம் விழாத பழைய பதிவர் :
              

 மோ.சி.கவிதைகள் என்று பெயர் சூட்டலாம்.அருமையான கவிதைகள் படைக்கிறார்.தொடர்ந்து எழுதுவதில்லை...நீங்கள் உற்சாகம் கொடுத்தால் இன்னும் ஜொலிக்கும் கவிதைகள்.முக்கியமான விஷயம் என்னனா இவர் 2008லிருந்து எழுதுகிறார். கீழ் காணும் இந்த பருக்கை அவருடையதே...

லிமரிக் - மங்கை

பொன் வண்டாடவே மலர்ப் பொய்கை
ஆண் திண்டாடவே மாதர் செய்கை
        வங்கமாக் கடலலை போல் பிடிவாதம்
        தங்கமாய் காகிதத்தை மாற்றும் இரசவாதம்
மங்கை கண்ணசைவில் செய்யும் சைகை

15 கருத்துகள்:

  1. இப்படி ஒரு கொடுமை வேற நடந்திருக்கா...திருந்தாத மக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேத்திக்கு படம் பார்த்துட்டு வந்தா சன் டீவில இந்த செய்தி...விமர்சனம் எழுத நினைத்து உட்காந்தவன திருப்பி விட்டுடுச்சு செய்தி.

      நீக்கு
  2. எப்படி சினிமா வந்தாலும் பிரச்சனை எந்த ரூபத்திலும் வரும் போல...

    ஆக... இனி தமிழ் திரையுலகம் பயணிக்கும் பாதை பஞ்சு மெத்தையாக இருக்கப் போவது இல்லை என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரையுலகினர் எப்பவும் போல அவங்க எடுக்குறத எடுத்துட்டுதான் இருக்காங்க.....நாமதான் நாமளா இருக்கணும் அண்ணே....தூக்கி வைச்சு கொண்டாடியது போக அதனால கூட உள்ளவனை தூக்கி போட்டு மிதிக்கிறதுலாம் சத்தியமா முடியல...

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா.

      நீக்கு
  3. //நீங்க தைரியமான ஒரு டேவிட்டா இருந்தா இந்த மாணிக்கமும் ஆட்டோ ஓட்டுறவர்தான்...முடிஞ்சா அடிச்சி பாருங்கடா :) :) :) :) :)//

    ஹிஹிஹிஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஒரு வில்லத்தனம் .....ஒரு அப்பாவியை போட்டு அடிச்சுட்டு போலீஸ் ஸ்டேசன்ல ஜாமீன் கேக்குறதுலாம் என்ன நியாயம்?

      வருகைக்கு நன்றி குருவே !

      நீக்கு
  4. ரசிகர்களின் கொலைவெறியை கண்டிக்க வேண்டும் விக்ரம்! அறிமுக பதிவரின் கவிதை அழகு! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. இதுலாம் கூட அவர் சொல்லித்தான் கேட்கணுமா அண்ணா? சொந்தமா அறிவு வேண்டாம்? அவ்வளவுக்கா சினிமா கதாநாயகன் மேல பைத்தியமா இருக்கணும்?

    வருகைக்கு நன்றி அண்ணா...

    பதிலளிநீக்கு
  6. Ref 1 : பிரபல நடிகர்களின் முதல் நாள் ஷோவை தமது முதலிரவை போல பாவிக்கும் ரசிக தீவிரவாதிகள்

    Ref 2 : நானும் அந்த டேவிட் படத்தை இரவு பார்க்க சென்றிருந்தேன்.

    Irony?
    Correct yourself before commenting on others.

    பதிலளிநீக்கு
  7. தெரியாமல் படத்துக்கு போய்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே கடலுக்கும் போயிட்டு வந்துடுங்க தலைவா ..:) இப்ப உள்ள நிலையில் புது நடிகர்கள்,புது இயக்குனர்கள்......இவங்களை நம்பி தாராளமா போகலாம் போல...

      வருகைக்கு நன்றி பாஸ்

      நீக்கு
  8. ஹூம்!என்னத்தச் சொல்ல?ரசிக்கக் குஞ்சுகள்?!?!?!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல நண்பரே.....நிலைமை பரிதாபம்தான் ..

      நீக்கு
  9. சரியி

    தம்பி mobile வீவ் வச்சா என்னய மாதிரி ஆளுங்களுக்கு
    படிக்க எளிதாகும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....