SNIPER...எதிரியை குறிபார்த்து அடிக்கும் மிகத்திறமையான பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடுபவனைதான் இப்படி SNIPER என்று கூறுவர்.அப்படி சுடுபவரை பொதுவா மார்க்மேன் என்பார்கள்.ஆனா இந்த SNIPER கள் கொஞ்சம் விசேஷம்.
இந்த SNIPER என்பது SNIPE என்ற ஒரு வகையான பறவையை குறிப்பதாகும்.வேட்டையாடுவர்களிடம் சுலபமாக அகப்படாமல் தப்பி செல்லும் இந்த பறவையை போல இந்த SNIPER களும் எதிரிகளின் கண்களுக்கு புலப்படாமல் தனது குறியை சரியாக தீர்த்து விட்டு தப்புவது இவர்களின் சிறப்பு.(காக்கா கூடத்தான் தப்பிக்குது அதோட பேர் ஏன் வைக்கலன்னு கேக்க கூடாது )
கண்களுக்கு புலப்படாமல் என்றால் எப்படி?இப்படித்தான்
சரி ,இந்த மாதிரி குறிபார்த்து சுட அதற்கு தக்க ஆயுதமும் வேண்டாமா? பிஸ்டலை வைச்சிகிட்டு ஐநூறு மீட்டர் தூரத்துல இருக்கிற டார்கெட்டை சுடுன்னா அந்த பிஸ்டலை கண்டுபிடிச்ச பெருமாளே வந்தாலும் முடியாது.
இந்த SNIPER களின் தேவைக்கு தக்க ஆஸ்திரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிதான் Sniping SSG-69.இதோட முழு நாமம் STEYER MANNLICHER SSG-69....SSG னா ?SHARP SHOTTER GUN-MODEL 1969.கடந்த நாப்பது ஆண்டுகளுக்கு மேலாக SNIPING RIFILE வகையில் தனக்கென தனி இடம் வைத்துள்ளது இந்த RIFLE.TELESCOPE பொருத்தப்பட்ட இந்த துப்பாக்கியில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள டார்கெட்டை துல்லியமாக சுடமுடியும்.
பொதுவாக பல நாடுகளில் போலீஸ்,மற்றும் ராணுவத்தினர் இந்த துப்பாக்கியை பயன்படுத்தவது போல இந்தியா,பாகிஸ்தான் இரண்டு நாட்டிலுமே இதை ராணுவத்தினர் பயன்படுத்துகிறனர்.பாகிஸ்தானில் கொஞ்சம் அதிகப்படியா ராணுவத்தினரை தவிர பல ஆயுத குழுக்களும் பயன்படுத்துகின்றனர்.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் சில இடங்களில் இது போல பாக் ஆசிர்வாதத்துடன் SNIPER மூலம் இந்திய வீரர்கள் மீது இல்லை விவசாயிகள் மீது திடிரென தாக்குதல் நடக்கும்.பதிலுக்கு இந்திய தரப்பில் இருந்து பதில் தாக்குதல் தொடங்கும்.பாகிஸ்தானும் தனது ட்ரிக்கரை அழுத்த ஆரம்பிக்கும்.அங்கேயும் இங்கேயுமாக பகைக்கும் புகைக்கும் நடுவே மெசேஜ்கள் பறக்கும்.அப்புறம் தாக்குதல் நிறுத்தப்படும்.
அடுத்த நாள் நடக்கும் FLAG MEETING ல் நீங்கதான் சுட ஆரம்பிச்சிங்க என்று பாகிஸ்தானும்,இல்ல நீங்க சுட்டதால்தான் நாங்க சுட்டோம்னும் இந்தியாவும் கதற.....ஒரு வழியா கை குலுக்கிட்டு கிளம்புவாங்க.

இந்த மாதிரியான SNIPER கள் தங்களை நிலப்பரப்பின் தன்மைக்கு தக்க மாற்றி கொள்ளும் முறை மிக முக்கியமானது.மரத்தோடு மரமாக,புதரோடு புதராக மாறிக்கொண்டு காத்திருந்து சரியான நேரத்தில் தனது குறியை முடிப்பது திறமையான ஒரு சவால்தான்.
பொதுவாக பல நாடுகளில் போலீஸ்,மற்றும் ராணுவத்தினர் இந்த துப்பாக்கியை பயன்படுத்தவது போல இந்தியா,பாகிஸ்தான் இரண்டு நாட்டிலுமே இதை ராணுவத்தினர் பயன்படுத்துகிறனர்.பாகிஸ்தானில் கொஞ்சம் அதிகப்படியா ராணுவத்தினரை தவிர பல ஆயுத குழுக்களும் பயன்படுத்துகின்றனர்.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் சில இடங்களில் இது போல பாக் ஆசிர்வாதத்துடன் SNIPER மூலம் இந்திய வீரர்கள் மீது இல்லை விவசாயிகள் மீது திடிரென தாக்குதல் நடக்கும்.பதிலுக்கு இந்திய தரப்பில் இருந்து பதில் தாக்குதல் தொடங்கும்.பாகிஸ்தானும் தனது ட்ரிக்கரை அழுத்த ஆரம்பிக்கும்.அங்கேயும் இங்கேயுமாக பகைக்கும் புகைக்கும் நடுவே மெசேஜ்கள் பறக்கும்.அப்புறம் தாக்குதல் நிறுத்தப்படும்.
அடுத்த நாள் நடக்கும் FLAG MEETING ல் நீங்கதான் சுட ஆரம்பிச்சிங்க என்று பாகிஸ்தானும்,இல்ல நீங்க சுட்டதால்தான் நாங்க சுட்டோம்னும் இந்தியாவும் கதற.....ஒரு வழியா கை குலுக்கிட்டு கிளம்புவாங்க.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக இது போன்ற ஒரு SNIPER தாக்குதலில் இந்திய விவசாயிகள் இரண்டு பேரின் மேல் குண்டுகள் பாய
பதிலுக்கு எனது பட்டாலியன் மிக கடுமையான ஒரு பதிலடி கொடுத்தது.அந்த பகுதியில் பாகிஸ்தான் இதற்க்கு முன் சந்திக்காத அதிரடி அது.கிட்டத்தட்ட அனைத்து ஆயுதங்களாலும் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது எனது பட்டாலியன்.

இப்படியான தாக்குதலில் தாக்குதல் முடிந்த பின் சுட்டவற்றிர்க்கு கணக்கு காட்ட வேண்டியிருக்கும்...அது ஒரு தலைவலி பிடித்த வேலை..அது போக ஏன் இவ்வளவு குண்டுகளை வீணடித்திர்கள் என்று வேறு கேள்வி வரும்.இதற்கு பயந்தே தாக்குதல்களை ஒரு அளவாக பல பட்டாலியன்களின் கமாண்டன்ட்கள் வைத்து கொள்வார்கள்.இதை அறிந்தே பாகிஸ்தானும் சீண்டி கொண்டே இருக்கும்.
ஆனால் இந்த அதிரடி பதிலடிக்கு பின் நடந்த FLAG MEETINGல் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் எனது பட்டாலியன் COMMANDANT விஜய் பால் சிங் இவ்வாறு கூறினார் "அனைத்து ஆர்டர்களும் எனது பாக்கெட்டில் வைத்துள்ளேன்....டெல்லியை கேட்டு அதன் பின் தாக்குதல் நடத்துவேன் என்று நினைக்க வேண்டாம்.எனது பட்டாலியனின் பகுதியில் ஒரு சிறிய அசம்பாவிதம் நடந்தாலும் பதிலுக்கு மிகப்பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடுவீர்கள் என்று எச்சரிக்கிறேன்""
SSG-69 குறித்து மேலும் விரிவாக அறிய மற்றும் படங்களுக்கு இங்கே மற்றும் இங்கேயும் சுட்டுங்கள்.தவிர விக்கியிலும் காணலாம்.SNIPERகளின் புகைப்படங்களை கூகுளாண்டவரிடம் கேட்டால் அள்ளித்தருவார்...கீழே உள்ள படம் நான் கிளிக்கியது.
இன்னும் நெறைய எழுதலாம்......இந்த பதிவிலேயே எதிரி எவ்வளவு தூரத்தில் இருக்கிறான் என்பதை எப்படி கணிப்பது போன்ற கேள்வி வரும்போது அடுத்த பதிவு தர தோணுகிறது.வரும் திங்களில் நான் டியூட்டியில் சேர வேண்டும்.அதற்குமுன் நேரம் அமைந்தால் மற்றுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே.
பதிவுகள் குறித்த பின்னூட்டங்கள்,கேள்விகள்,வசைகள் மற்றும் ஓட்டுகள் வரவேற்க்கப்படுகின்றன.

| Tweet | |||||

நல்ல தெளிவான பதிவு... ஸ்நிப்பர்கள் பற்றி புதுமையான விசயங்களும். எல்லைத் தாக்குதலில் இந்திய நிலைமைகளும் அறிந்து கொண்டேன்..
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு......யோவ் என்னனமோ நாடகம் மாதிரி இருக்குய்யா பின்னூட்டம்.வெளுத்துப்புடுவேன் சீனு .....
பதிலளிநீக்குஹா ஹா ஹா அது சும்மாத்தாம்னே நீங்க ரொட்டிய தான் சுடுவீங்கன்னு எனக்கு தெரியும், ரொட்டிய சுடும் போதே பயபுள்ள இந்தா பேச்சு பேசுதே, அப்போ உண்மையிலேயே ஸ்நிப்பார் வச்சி சுட்டா என்னா பேச்சு பேசும்னு தின்க் பண்ணி பார்த்தேன்..
பதிலளிநீக்குகாலக்கொடுமை இது.......ரொட்டிக்கு வந்த சத்திய சோதனை இது...அதுலாம் இருக்கட்டும் இந்த மாதிரி பதிவு கேட்ட வசுவை எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே? எங்கே?
பதிலளிநீக்குசமிபத்தில் ஒரு ஆங்கில படத்தில் இது போல சுடும் வீரனை பார்த்தேன் . நாட்டை காக்கும் தங்க்களுக்கு நன்றி ..
பதிலளிநீக்குநன்றி வாத்தியாரே......பல நூறு எதிர்கால சமூகத்தை படைக்கும் உமது பணி முன்னாள் நாமெல்லாம் ஒன்னும் இல்லை சார்..
நீக்கு/// ஏன் இவ்வளவு குண்டுகளை வீணடித்தீர்கள்... ///
பதிலளிநீக்குஇது வேறு உண்டா...? சிரமம் தான்...
ஸ்னீப்பர்கள் பற்றியும் இராணுவம் பற்றியும் அறிந்திராத அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குநீண்ட நாள்களுக்கு பிறகு உங்களை கண்டதில் மகிழ்ச்சி அண்ணா....மிகவும் நன்றி
நீக்குசெய்தாலும் தப்பு......செய்யலன்னாலும் தப்பு....எப்ப எது பேசுவாங்கன்னே தெரியாது /......
பதிலளிநீக்குநன்றி திருக்குறள் அண்ணா...
நீங்க ராணுவ வீரரா
பதிலளிநீக்குஎல்லை பாதுகாப்பு படையில் சிப்பாயாக உள்ளேன் ....
நீக்கு//இந்தியா பாகிஸ்தான் எல்லையில் சில இடங்களில் இது போல பாக் ஆசிர்வாதத்துடன் SNIPER மூலம் இந்திய வீரர்கள் மீது இல்லை விவசாயிகள் மீது திடிரென தாக்குதல் நடக்கும்.பதிலுக்கு இந்திய தரப்பில் இருந்து பதில் தாக்குதல் தொடங்கும்.பாகிஸ்தானும் தனது ட்ரிக்கரை அழுத்த ஆரம்பிக்கும்.அங்கேயும் இங்கேயுமாக பகைக்கும் புகைக்கும் நடுவே மெசேஜ்கள் பறக்கும்.அப்புறம் தாக்குதல் நிறுத்தப்படும்.
பதிலளிநீக்குஅடுத்த நாள் நடக்கும் FLAG MEETING ல் நீங்கதான் சுட ஆரம்பிச்சிங்க என்று பாகிஸ்தானும்,இல்ல நீங்க சுட்டதால்தான் நாங்க சுட்டோம்னும் இந்தியாவும் கதற.....ஒரு வழியா கை குலுக்கிட்டு கிளம்புவாங்க.//
ஹூம்...
என்ன கொடுமை சகோ இது..?
அரசின் கைகளில் இராணுவத்தினர் எனப்படுவோர்...
உயிரற்ற உணர்ச்சியற்ற ஜடப்பொருட்களாய்...!
உண்மைதான் சகோ ....இராணுவத்தினரின் சித்திரவதை வன்கொடுமை தவிர அவர்களும் ஒரு வித அடிமைகளே....அதற்க்காக எண்களின் தவற்றை நியாயம் செய்ய இயலாது.ஆனால் இரு பக்கமும் இறப்பது ஏழைகளே..இங்கு சிப்பாய் வேலைக்கு வருபவன் அம்பானியின் மச்சானாக இருக்க வாய்ப்பில்லியே...
நீக்குநல்ல பகிர்வு,,,
பதிலளிநீக்குஅரசியல் பொருளாதார நிலைமைகள் மட்டுமல்லாமல் ராணுவம், அதன் பின்புலம் என்று அனைத்து அடிப்படைகளும் ஒவ்வொரு குடிமகனும் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்,,,,,,,
அந்த வகையில் உங்கள் பங்களிப்பு மிகவும் பாராட்டக்கூடியதே!!!!!! வாழ்த்துகள்,,,,,,!
தொடருங்கள்,,,,,,,,,,,,!!
வருகைக்கும் உங்களது வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி சகோ....மீம்டும் தங்களின் செயல்பாடுகள் ,எழுத்துக்கள் தொடர்ந்து வர விரும்புகிறேன். நன்றி.
நீக்குDear Sathish,
பதிலளிநீக்குPlease note that, with or with out your knowledge you are sharing related to your work which are highly confidential (for you and our nation).
Review & Filter it thoroughly before posting.
Your blog is very informative and thanks for writting.
With thanks,
Arun Prasath J
மிகவும் யோசித்துதான் பதிவிடுகிறேன் அண்ணா,இது குறித்து முன்பே இணையத்தில் ,பத்திரிகைகளில் வந்துள்ளதா என்று பார்க்கிறேன்.இந்த தகவல்கள் மூலம் தவறான பாதைக்கு யாரும் சென்றுவிடக்கூடாது என்றும் கவனத்தில் வைத்துள்ளேன்.
நீக்குஉதாரணத்திற்கு மோப்ப நாய்கள் குறித்த தகவல்கள் உண்டு.ஆனால் அது தவறு செய்பவர்களுக்கு உதவியாக முடியும் என்பதால் அதை குறித்து பதிவிடவில்லை.இதே போல குண்டு வைப்பது குறித்தும்.....
தங்களின் அக்கறையான மனதிற்கு மிகவும் நன்றி அண்ணா.....
ராணுவம் தொடர்பான பல செய்திகளை வெளியிட்டு வருகிறீர்கள்... வாழ்த்துகள். சிறப்பான பதிவு. பணியில் பாதுகாப்பாக வேலை செய்யுங்கள்... வாழ்த்துகள், தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள் நண்பா...
பதிலளிநீக்குஆமாம் நண்பா, இந்த ராணுவம், எல்லை, ரகசியம், அன்னியன் இதெல்லாம் இல்லாமல் நாடுகளால் வாழ முடியாதா?
பதிலளிநீக்குஎதற்காக இவ்வளவு பொருட்செலவு மற்றும் உயிர் சேதம்?
(ஏதோ நமக்கு வந்த டவுட்டு நைனா! முட்ஞ்சா பதில் சொல்லுபா)
எல்லையில் நிகழும் நிகழ்வுகளை தெளிவாக கூறி இருக்கிறீர்கள். எந்த சூழ்நிலையில் பணிபுரிகிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். பெரும்பாலும் முதல் தாக்குதல் நம்முடையதாக இருக்காது என்றே என் போன்றவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
பதிலளிநீக்குவிஜய்பால் சிங் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
theriyaatha thakaval nantri!
பதிலளிநீக்கு//////இப்படியான தாக்குதலில் தாக்குதல் முடிந்த பின் சுட்டவற்றிர்க்கு கணக்கு காட்ட வேண்டியிருக்கும்...அது ஒரு தலைவலி பிடித்த வேலை..அது போக ஏன் இவ்வளவு குண்டுகளை வீணடித்திர்கள் என்று வேறு கேள்வி வரும்./////
பதிலளிநீக்குஎன்ன இது அநியாயமா இருக்கு? நமது தாக்குதல் திறனையே இது பாதிக்குதே?