Translate

புற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 அக்டோபர், 2012

நானும் அரவாணியே- இப்படிக்கு புற்கள்

ஒவ்வொரு ரயில் பயணங்களிலும் TTE யை சந்திக்கிறேனோ இல்லியோ கட்டாயம் நான் சந்தித்த மனிதர்கள் அரவாணிகள். சமூகத்தின் பார்வையில் கேலியாகவும்,விபச்சாரமாகவும் மட்டுமே கவனிக்கப்படும் இவர்களை நீங்கள் அங்கீகரிக்காத வரை நீங்களும் நானும் ஒரு வகையில் சமூக விரோதிகளே.


இனி  கவிதை (??!!)  இந்த கவிதை அரவாணிகளை பார்த்து புற்கள் பேசுவதாக புனையப்பட்டுள்ளது.( புரியணும்லா )

பனிப்பூக்கள் என்மேல் படுத்துறங்கும் 
மழைத்துளி சற்று இறங்கி பார்க்கும்
சுள்ளென்ற வெயிலும் 
சுகமாய் பரவிக்கொள்ளும் நான் புற்கள்.

ரோஜாப் பெண்ணின் முகமில்லை 
முள்ளைப் போன்ற முரடன் இல்லை 
இறைவன் படைப்பில் நான் 
ஒன்பதாம் பிறவி!

பாதம் பதித்துப்பார் கிச்சு முச்சு 
படுத்து கொஞ்சம் உறங்கு- 
நான் பட்டு மெத்தை 
விலை என்ன கேக்காதே 
நான் செல்லாக்காசு!

புயலுக்கும் தென்றலுக்கும் ஈடு செய்வேன் 
வெள்ளத்து நீருக்கும் விடை சொல்வேன் 
புணர்கின்ற அளவு ஏனோ 
யாரும் புரிவதில்லை.

பூமி பெண்ணின்  பச்சைதாவணி என்றாலும் 
பூலோகம் மதிக்கா எச்சை துணி 
எறும்பும் புழுவும் ஏறி நின்று 
கொக்கரிக்கும்!

மதித்து நடப்பவர் யாருமில்லை 
மிதியடி கீழே இன்னும் விடியலில்லை 
கூட்டமாய் இருந்தும் 
தனியே தவிக்கிறேன் 

உனக்கும் எனக்கும் பேதமென்ன அரவாணா?
பூஜையில் இல்லையென்றாலும் 
சூடும் பூக்களோடு சூடிக்கொள் 
என்னை நீயாவது...!!

                                                                           -இப்படிக்கு புற்கள் (2001)

2001ல் எழுதிய இந்த கவிதைக்கு தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய மறந்துடாதிங்கப்பு..... 

கொசுறா ஒரு சின்ன கவிதை(?)

ஏய் யாரங்கே 
கண்தானம் செய்யுங்கள் 
இந்த இறைவனுக்கு!!
                                                    -2001

2001ல் எழுதிய இந்த ஒன்றே கால் கவிதைக்கு தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய மறந்துடாதிங்கப்பு..... இந்த சொல் குத்தம் பொருள் குத்தம் எதுனாச்சும் கண்பிடிச்சிங்கனு வைங்க.அதுக்கெல்லாம்  நண்பன் ஹாரியின் கேள்வி பதில்கள் பதிவுகளில் என் சார்பில் தம்பி சீனு விளக்கம் தருவார்.(சீனு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்)