Translate

வியாழன், 29 மார்ச், 2012

முஸ்தபா ....முஸ்தபா....

                1999 ம் ஆண்டில் கல்லூரி படிப்பு முடித்த நேரம் ஆளுக்கு ஒவ்வொரு டைரி எடுத்து கொண்டு ஆட்டோக்ராஃ ப் வாங்கி திரிந்தது பசுமையான நினைவாக  உள்ளது.காதலையும் மோதலையும் காணாமல் போக செய்யும் இந்த மந்திரத்தை எப்போதும் போல் இல்லாமல் மாற்றி எழுதி கேட்ட போது என் நண்பனுக்கு எழுதியது....
               வலையுலகில் பிரபலமான ட்வீட்டர் அன்று காகிதத்தில் இப்படித்தான் உலவியிருக்கும் என்று தோன்றுகிறது. ஒன்றிரண்டு மட்டுமே நியாபகத்தில் உள்ளது.அவையும் மறக்கும் முன்னே   உங்கள் முன்னே.....

முஸ்தபா ...முஸ்தபா...

நண்பர்களாக பிரிவோம்
எதிரிகளாய் சந்திப்போம்
ஏதேனும்....
நேர்முக  தேர்வில்!


என் ஆட்டோக்ராஃ ப்  டைரியும்
உன்  ஆட்டோக்ராஃ ப்  டைரியும்
சந்திக்கலாம்...
பழைய புத்தக கடைகளினில்!



குறைந்த பட்சம்
மறக்கும் வரையாவது
நினைவில் வைத்திரு !



கல்யாண அழைப்பிதழ் வேண்டாம்
எனது காதலி
உன் மனைவியாய் இருக்கலாம்!!



எனது மகளுக்கு
உன் மனைவி  பெயரும் ..
உன் மகனுக்கு
என் பெயரும்...
எப்பவும் போல
புரியாமலே இருந்துவிடு !



என்னை  மறந்தாலும்
எனக்கு  தரவேண்டிய
ரூ 235ஐ
மறந்து  விடாதே ...




உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யவும்...மறக்காமல் ஷேர் செய்யவும்
நன்றி.



8 கருத்துகள்:

  1. experience pesutho? nalla irukku.

    பதிலளிநீக்கு
  2. nalla irukku but already engeyo ketta madiri irukku.,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா இதை எழுதி பல வருடங்கள் ஆக்கினாலும் கிறுக்கி கிறுக்கி எழுதிய பேப்பர்கள் இன்னும் என்னிடம் உள்ளது.இடைப்பட்ட வருடங்களில் இதே போன்ற எண்ணத்தில் வந்திருக்கலாம்.நன்றி நண்பா.

      நீக்கு
  3. // என் ஆட்டோக்ராஃ ப் டைரியும்
    உன் ஆட்டோக்ராஃ ப் டைரியும்
    சந்திக்கலாம்...
    பழைய புத்தக கடைகளினில்!// முற்றிலும் உண்மையான வார்த்தைகள்

    பதிலளிநீக்கு
  4. //கல்யாண அழைப்பிதழ் வேண்டாம்
    எனது காதலி
    உன் மனைவியாய் இருக்கலாம்!!//

    ஆஹா ... இப்படிலாம் யோசிக்க வேண்டி இருக்கு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் சிலரோட அனுபவத்திலே கிண்டலிலே கிடைப்பது நண்பரே..

      நீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....