Translate

சனி, 24 மார்ச், 2012

சிறு வயது அழகிக்கு...

உனக்காகவே டிவி வாங்கப்பட்டது!
ஒலியும் ஒளியும் காண
நீ வரவேண்டும் என்பதால் ....


 அம்மாவோடு தண்ணீர் எடுக்க
 நானும் வருவேன்..
 குழாயடி முன்னே
 உன் வீடு இருந்ததினால்!



விடையறிந்தும் தெரியாது என்றேன்
உன்னோடு
வகுப்பறை வெளியே
ஒன்றாக நிற்பதற்க்கு...



நிகழ்காலம்
நீ கடித்து தந்த
புளிப்பு மிட்டாயாய் இருக்கிறது
புளிப்பாகவும்...
எச்சில் நினைவுகளின் சுவையாகவும்..!

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....