கூடங்குளம் போராட்டத்தை வன்முறையாக்க வழிதேடுகிறது அரசு.வெளிநாட்டு சதி என்ற படம் ஓடாமால் ஊத்திக்கொண்ட நிலையில் நக்சலைட்டுகளை சேர்த்து அதிரடி காவியம் படைக்க முயல்கிறது.
இந்த அரசின் நிலைப்பாடுதான் என்ன?அமைதியான போராட்டம் என்றாலும் சரி ஆயுத போராட்டமாக இருந்தாலும் சரி அரசு எடுக்கும் ஒரே முடிவு அடக்குமுறை மட்டுமே.பேச்சு வார்த்தைகள் வெறும் பேச்சுக்காகவே பேசப்படுகிறது.பேசமுடியா நிலைகளில் துப்பாக்கி மூலம் பேசுவதில் எந்த தயக்கமும், வெட்கமும் நமது அரசுக்கு கிடையாது.பெண்களிடம் பேசும் துப்பாக்கிகளுக்கு ஸ்ரீலங்கா,காஷ்மீர் என்று எந்த பேதமும் இல்லை.ஜனநாயக போர்வைக்குள் சர்வாதிகார மிருகங்களை தேர்தெடுக்கும் வாய்ப்பு மட்டுமே நமக்கு.
சிறுகுழந்தை கேள்விக்கு விடை தெரியாமல் அடித்து உதைத்து அடக்கும் கொடுங்கோல் தகப்பனாக இருக்கிறது இந்த அரசு.தன் வீட்டு பிள்ளைகளை தானும் அடித்து பத்தாது என்று இலங்கைக்கும் காவு கொடுத்து எந்த ஜனநாயகத்தை சமூக உரிமைகளை நிலை நாட்டுகிறது?
பட்டாளத்தில் எனக்கு கற்பிக்கப்பட்ட ஒவ்வொரு ஆபரேஷனும் சொல்லும் முக்கியமான விஷயம் பொது மக்களின் மனதில் பாதுகாப்பான மன நிலையை உருவாக்க வேண்டும்.என்ன நடக்குது இங்கே?பொதுமக்களை காக்க வேண்டிய காவல்துறை வெறி கொண்டு திரிகிறது,குதறி கடிக்க ஒரு காரணம் தேடுகிறது.
இத்தனை அடக்குமுறையின் கோரம் தெரிந்தும் இந்த மக்கள் போராடுவது நிம்மதியாக சுவாசிக்க மட்டுமே.
மாவோயிஸ்ட்டுகள்தொடர்பு என்று அரசு முகிலன்,வன்னியரசு,மற்றும் சதீஷ் என்று மூவரை கைது செய்துள்ளது. மூவர் பற்றிய தகவல்களை உண்மைகளை நீங்கள் தமிழ் நாட்டின் விக்கிலீக்ஸ் என்று அழைக்கப்படும் சவுக்கு.நெட் மூலம் அறியலாம்.http://www.savukku.net/home1/1517-2012-03-24-17-54-53.html.
மெழுகுவர்த்தி எடுத்து கொண்டு ஊர்வலம் செல்லும் பரபரப்பு போராட்டம் இல்லை இது.எட்டு மாதமாக மிக வலிமையுடன் நடத்தப்படும் போராட்டமிது.அப்துல் கலாம் முதல் பலரின் முகமூடிகளை கிழித்து எறிகிறது இந்த போராட்டம். ஆற்று மணல் அள்ளுவதை தடுத்த மதிப்பிற்குரிய திரு.நல்லக்கண்ணு போன்ற நேர்மையான அரசியல் தலைவர்கள் இந்த போராட்டத்தை கட்சி அணுகுமுறை தாண்டி எதிர்கால சந்ததியை மனதில் நிறுத்தி ஆதரிக்க வேண்டும்.
திரு.உதயகுமாரின் கடிதம் படிப்பவர்களுக்கு உண்மையின் வீரியமும் மக்களின் நிலையும் புரியும்.கடிதம் படிக்க..http://www.savukku.net/home1/1519-2012-03-25-14-55-47.html.மெழுகுவர்த்தி எடுத்து கொண்டு ஊர்வலம் செல்லும் பரபரப்பு போராட்டம் இல்லை இது.எட்டு மாதமாக மிக வலிமையுடன் நடத்தப்படும் போராட்டமிது.அப்துல் கலாம் முதல் பலரின் முகமூடிகளை கிழித்து எறிகிறது இந்த போராட்டம். ஆற்று மணல் அள்ளுவதை தடுத்த மதிப்பிற்குரிய திரு.நல்லக்கண்ணு போன்ற நேர்மையான அரசியல் தலைவர்கள் இந்த போராட்டத்தை கட்சி அணுகுமுறை தாண்டி எதிர்கால சந்ததியை மனதில் நிறுத்தி ஆதரிக்க வேண்டும்.
உயிர்களுக்கு மதிப்பில்லா தேசத்தில் போராடும் இவர்களை ஆதரிக்க முடியவில்லை என்றாலும் தூற்றாமலாவது இருக்கலாமே...
| Tweet | |||||
100% உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.. அதுவும் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தினமும் மட்டமான முறையில் இந்த போராட்டத்தை விமர்சிக்கும்போது கோபம் கொப்பளிக்கிறது.
பதிலளிநீக்குநன்கு எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
word verification எடுத்துவிடுங்கள்..
மற்றவருடன் அறிமுகம் பெற சில எளிய வழிகள்.
பதிலளிநீக்குதமிழ்மணம், udaanz போன்ற திரட்டிகளில் இணைந்து கொள்ளுங்கள். அது எளிது.
மற்றவர் பதிவில் சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்..
தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் மிகவும் நன்றி.word verification எப்படி எடுப்பது என்று தெரியவில்லை.தமிழ்மணத்தில் இணைந்துள்ளேன்.இன்னும் நிறைய விஷயங்கள் புரியாமல் உள்ளது.எல்லாமே trail and (t)errorதான்.
பதிலளிநீக்குநல்ல கருத்துக்கள் சதீஷ்... தொடர்ந்து எழுதுங்கள்..தொடர்கிறேன்..
பதிலளிநீக்கு