Translate

வெள்ளி, 1 ஜூன், 2012

மறந்து விட்டதாய் நினைப்பவளுக்கு....




கடற்கரை கடந்த பின்னும்
காய்ந்து போன செருப்புக்குளே
மிஞ்சி  போன மணலின் குறுகுருப்பாய்
உன் நினைவுகள்...!




நதிக்கரை மணலில்
விதைத்து  வைத்தோம்
காதலையும்  கவிதைகளையும்....
காதலோடு.. நீயும் உன் கணவனும்
கவிதையோடு... நானும் என் காதலும் மட்டும்  !!





புதுக்கவிதை போல
காதலித்தாய் !
கல்யாணம் என்றதும்
ஏனடி தோழி மரபானாய்?



மணிக்கணக்காய் காத்திருப்பாய்
மன்னித்து போவாய் ..
முகூர்த்த நேரத்திற்கு
முன்னமே வந்து விட்டேன்
ஏனடி  தோழி முறைக்கிறாய்?


விட்டு கொடு என்றேன்
விட்டு விடு என்றல்ல...!








ஓலமிட்டு  கடந்து விட்டாய் நீ
ரயில் போல ...
மௌனமாய் சகித்து கிடக்கிறேன்
தண்டவாளமாய்..!!








கண்கள் கண்டதும் பொய்
உதடுகள் தீண்டியதும் பொய் -உன்
கல்யாண செய்தி மட்டும் மெய்.



உன்னை பற்றி எழுதப்பட்ட
கவிதைகள் போலத்தான் நீயும்  ..
அனைத்தும் பொய்!!



7 கருத்துகள்:

  1. \\மிஞ்சி போன மணலின் குறுகுருப்பாய்
    உன் நினைவுகள்...!\\

    இது சூப்பர்..

    பதிலளிநீக்கு
  2. நன்றாக உள்ளது! சொந்த அனுபவமோ?! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் காதல் மனைவி என்னை மறந்து போவதை கற்பனை செய்ததன் விளைவாய் 2003ல் எழுதியது இதெல்லாம்.வருகைக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  3. நண்பா!

    மயிலிறகு உரசியது போல் -
    உணர்வு உங்கள் கவிதை -
    வாசித்ததில் !

    பதிலளிநீக்கு
  4. // காதலோடு.. நீயும் உன் கணவனும்
    கவிதையோடு... நானும் என் காதலும் மட்டும் !!//

    //புதுக்கவிதை போல
    காதலித்தாய் !
    கல்யாணம் என்றதும்
    ஏனடி தோழி மரபானாய்?//


    அண்ணா உங்களுக்குள் இவ்வளவு திறமைகளா
    என்னால் நம்பவே முடியவில்லை... அதிலும் புதுகவிதை மரபுக் கவிதை என்று தமிழைக் கொண்டும் கவி பாடியது அருமை. நீங்கள் இன்னும் பல புதுக் கவிதைகளை முயலுங்கள் கண்டிப்பாக வெளிச்சம் பட வேண்டிய கவிதைகள். சூப்பர்

    பதிலளிநீக்கு
  5. ஓலமிட்டு கடந்து விட்டாய் நீ
    ரயில் போல ...
    மௌனமாய் சகித்து கிடக்கிறேன்
    தண்டவாளமாய்..!!


    Nice Lines...
    Adhum Andha pic Vera Super ah irukku
    Padikura appa something yetho oru ganatha feelings nenjukulla...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....