சமீபத்திய முகநூல் பதிவுகளில், இணையங்களில் தமிழர்,திராவிடர் சண்டைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.பொது வாக்கெடுப்பு மூலம் தமிழ் ஈழத்தை உருவாக்குவதும்,மகிந்தாவுக்கு தண்டனை பெற்று தருவதுமான இரு முக்கிய நோக்கங்களை முன்னிட்டு உலகெங்கும் பல போராட்டங்கள் நடை பெற்று கொண்டிருக்க இங்கு தாய் தமிழகத்தில் தமிழர்,திராவிடர் போர் தறி கெட்டு நடக்கிறது.
ஈழம் என்ற ஒரு கொள்கையின் கீழ் ஒன்று பட்டு குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் ஒருவரையொருவர் குற்றம் சொல்லி குறை சொல்லி செல்ல வேண்டிய வழி தவறி செல்லா காசாகும் நிலை நிரம்பவே கவலையை தருகிறது.
திமுக,,அதிமுக போன்ற கட்சிகளின் தொண்டர்கள் கட்சி தலைமைக்காகவே கூடுவதும் கலைவதும் கொண்டது போலவே ஈழத்திற்க்கும் தனி தனி அமைப்புகளின் கீழ் அங்கும் இங்குமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன.எவன் ஒருவன் தமிழன், தன் கட்சி தவிர்த்து ஈழம் மட்டுமே பிரதான எண்ணமாக கொண்டு வருவானோ அவன் திராவிடனோ தமிழனோ இல்லை சிங்களவனோ யாராக இருந்தாலும் வரவேற்க பட வேண்டியவனே.
முகநூலில் இணையங்களில் திராவிடர்,தமிழர் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள் கலவரத்தை தருகிறது.தரம் கெட்ட தகாத வார்த்தைகள் மூலம் நாம் நமக்குள் சண்டையிடுவதும் சரிதானா?
கட்சிகளின் கொள்கை என்பது வெறும் வெற்று வார்த்தைகள் என்பதே உண்மை.அதிமுக எனும் கட்சி எம்ஜிஆர் காலத்தில் அவரின் மன நிலை பொறுத்து ஈழத்திற்கு ஆதரவாக இருந்தது.அதே கட்சி அம்மா வசம் இருக்கும்போது விடுதலை புலிகளை தடை செய்ய சொல்கிறது.கட்சி தலைவரின் விருப்பங்களே கட்சியின் கொள்கையாகும் நிலைதான் இங்கு.திமுக பற்றி சொல்லவே வேண்டாம்.கொஞ்ச நஞ்ச ஆட்சிக்காக லட்சம் உயிர்கள் பலியாக துணை போய்விட்டு இப்போது டெசோ என்று படம் காட்டுகின்றார்.ஒரு பக்கம் கவிதை வடித்து மறுபக்கம் சகோதர சண்டை என்று பிதற்றுவார்.அவரின் மன நிலையை பொறுத்தே திமுக செயல்படும்.
ஏற்கனவே நமது ஊடகங்களும் பத்திரிகைகளும் நமது மக்களை வெறும் பொழுதுபோக்கு பயனாளராகவே வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்கும் சூழ்நிலையில் சிறிய கூட்டமாக கூடி போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி விழிப்புணர்வை கொண்டு வரும் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் தனி தனியே திட்டி கொண்டிருந்தால்......... ஈழம் இல்லை ....ஒரு ஈ கூட கிடைக்காது.
கட்சிகளுக்குள் மூழ்கி கிடப்பவர்களை ஈழம் நோக்கிய போராட்டத்தில் இணைக்கும்போது கூடும் கூட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் காணும் போது மட்டுமே உலகமும்,செவிட்டு இந்திய அரசும் திரும்பி பார்க்கும்.
ஒன்று கட்சிகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு தொண்டனும்ஒன்றிணைந்து போராட வரவேண்டும்.இல்லையெனில் கட்சி தலைவர்கள் தமது ஈகோ மறந்து ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.தலைவன் வாக்கே பொன் வாக்காய் நினைக்கும் தொண்டர்கள் எளிதில் கூடி விடுவார்கள்.ஈகோ பிடித்த தலைவர்களிடம் இதை எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.நாம் ஒன்று கூடும் பட்சத்தில் ஓட்டுக்காகவாவது நம்மை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தலைவர்கள் தள்ளப்படலாம்.அப்படிப்பட்ட வாய்ப்பாக தற்போதைய தமிழகஅரசியல் சூழ்நிலையில் ஈழம் ஒரு தவிர்க்க முடியா சக்தியாக இருப்பதை பயன்படுத்தி கொள்ளாமல் பிரிந்து நின்று போராடுவது முட்டாள்தனமான செயல் இல்லையா?
திராவிட கட்சிகளுக்குள் இருப்பது தமிழர்கள் என்பதையும்,தமிழர்களுக்கு சுயமரியாதை கற்று தந்தது தந்தை பெரியார் என்பதையும் நினைவில் கொள்வோமாக.தனி தனி கொடி பிடிக்கும் கட்சி தலைவர்களின் மனதில் ஈழத்தை மீறி ஈகோ உள்ளது என்பதையும் நினைவில் கொள்வோமாக.
லட்சம் பேரின் உயிர் தியாகங்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?

| Tweet | |||||

உண்மையான கருத்துக்கள் அண்ணா. ஆனால் முகப் புத்தகதிற்குள் நடக்கும் விவாதங்களுக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள் அங்கே எழுத்துப் புலிகள் தான் அதிகம். செயல் வீரர்களோ முகம் காட்டுபவர்களோ கிடையாது.
பதிலளிநீக்குஈழம் பற்றிய உங்கள் வெளிப்பாடு அருமை. அஆனல் அதை வைத்து ரசியல் செய்யும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நம்மால் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியாது
நன்றி சீனு...
பதிலளிநீக்கு