பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவித்த பின் எல்லா தொலைகாட்சிகளிலும் முதல் இடம் பிடித்த மாணவர்களின் கொண்டாட்டங்கள் தூள் பறக்க மற்றொரு உலகமான தேர்ச்சி பெறா மாணவர்களும்,மதிப்பெண் குறைந்த மாணவர்களும் இந்த சமூகத்தின் முன் கற்பை இழந்த பெண்ணை போல் கூனி குறுகி மருகுகின்றனர்.
சொந்தக்காரன்,பக்கத்து வீடு என யாரும் மதிப்பெண் கேட்டு விட கூடாது என்று மனம் பதறுகின்றனர்.தனது நண்பன்,பக்கத்து வீட்டு பையன்,அத்தை பொண்ணு,மாமன் மவன் யார் நம்மை விட கூடுதல் மார்க் குறைந்த மார்க்குனு கணக்கு பண்ணி அடுத்த ஒரு வாரத்துக்கு கலவரமான மனதோடு இருக்கும் இவர்களில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் தற்கொலை முடிவுகள் இவர்களா எடுத்தார்களா? இல்லை.. ..நாம் எடுக்க தூண்டினோமா?
நாமக்கல்லில் 12ம் வகுப்பு தேர்வில்முதலிடம் வந்த மாணவர்கள்விருது நகரை சேர்ந்தவர்கள் என்றும் நன்கு படிக்கும் வசதி குறைந்த மாணவர்களை பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து கல்வி செலவை தாமே ஏற்று பன்னிரெண்டாம் வகுப்பில் ரேங்க் வாங்க வைத்து அதன் மூலம் தன் பள்ளியின் பெருமையையும் கட்டணத்தையும் அதிகரிக்கிறார்கள் என்று கேள்விபட்ட போது அதிர்ந்து போனேன்.
பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற மாணவன் நான் டிவி பார்ப்பதில்லை என்று சொல்லியிருந்தான். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இப்படி படிக்க வைக்கும் மாணவர்களுக்கு தன் பக்கத்து வீட்டு அசம்பாவிதங்கள் கூட செய்தியாக மட்டுமே தோணும் என்று நினைக்கிறேன். இவர்கள் பெற்றோர் தனது மகனின் படிப்பிற்கு தியாகம் செய்வதாக எத்தனை நல் விடயங்களை தவற விட்டிருப்பர்?.முள்ளிவாய்க்கால் ரத்தங்களை யார் துடைப்பார்?சமூக நிகழ்வுகள் மதிப்பெண் எடுக்க மட்டுமே பயன் பட்டு பாழாயப் போகுமோ என்ற அச்சம் வருகிறது.
இன்றைய தினம் நம் பள்ளிகளில் இறந்து போன திண்டுக்கல் மாணவி காயத்ரியை யோசித்திருப்பார்களா என்பது சந்தேகமே. சிறகடிக்க கூடிய வயதில் மாலை முரசில் தலைப்பு செய்தியாக மட்டுமே உணரப்படும் காயத்ரி நமது மதிப்பெண் முறைக்கும் அதை கொண்டாடும் நமக்கும் உரைக்கும் உண்மையை உணராதது போலவே வேஷம் கட்டுகின்றோம்.
கல்லூரி ,பல்கலைகழகங்களில் நிகழும் தற்கொலைகளை ஒப்பிடும்போது பள்ளி மாணவர்கள் தற்கொலை அதிகமாகவே இருக்கும் என்று தோணுகிறது.கூர்ந்து கவனித்தால் அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் முதலாம் இடங்களை கைப்பற்றி ஒரு மாயையை உருவாக்குகிறது என்றே தோணுகிறது.
ஒருவன் உயர்த்தப்படும்போது மற்றொருவன் தாழ்த்தப்படுகிறான்.இதுதானே நிஜம்.பள்ளி படிப்பை ஒரு மாபெரும் சக்தியாக நினைக்கும் வரை தனியார் பள்ளிகளின் கொள்ளையும் மாணவர்களின் தற்கொலைகளும் தொடரத்தான் செய்யும்.

| Tweet | |||||
சமுக கண்ணோட்டத்துடன் கூடிய அருமையான பதிவு அண்ணா. ஒவ்வொரு பெற்றோரும் திருந்த வேண்டும். கல்வி மட்டுமே வாழ்கை இல்லை. அதையும் தண்டி உலகம் என்று உள்ளது எனபதைப் புரிய வைக்க வேண்டும்
பதிலளிநீக்குஒருவன் உயர்த்தப்படும்போது மற்றொருவன் தாழ்த்தப்படுகிறான்.இதுதானே நிஜம்.!!!!!!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மிகவும் நன்றி இராஜஇராஜேஸ்வரி....
நீக்குநீங்களும் நானும் செய்த கொலை-காயத்ரி. பதிவின் தலைப்பே அருமை அண்ணா
பதிலளிநீக்குநன்றி சீனு....இணைந்திருப்போம்.
பதிலளிநீக்குNALLA PAKIRVU!
பதிலளிநீக்குநல்ல நடுநிலைமையான பதிவு.கருத்துகளும் ஆழமாக இருக்கு.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி!! சீனி,மணிமாறன் நண்பர்களுக்கு....
பதிலளிநீக்கு" நண்பன்,பக்கத்து வீட்டு பையன்,அத்தை பொண்ணு,மாமன் மவன் யார் நம்மை விட கூடுதல் மார்க் குறைந்த மார்க்குனு கணக்கு பண்ணி அடுத்த ஒரு வாரத்துக்கு கலவரமான மனதோடு இருக்கும்"
பதிலளிநீக்குஉண்மையான வரிகள்
நல்ல வேலை ஏன் நண்பனும் நானும் ஒரே மார்க் எது விட்டோம் என்ற சந்தோசத்தில் இருக்கும் போது
என் உறவுக்கார பையன் ஒருவன் என்னை விட ஒரு மார்க் அதிகம் வாங்கியது
-- என்னுள் என் நினைவுகள்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....உங்களின் நினைவுகளின் ஒரு துளியை தீண்டியது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது...நன்றி நண்பரே..
நீக்கு