அவர்கள் தேவதைகள்விலைக்கு பேசப்படும்
உயிருள்ள தேவதைகள் ..
வாடகைக்கு படைக்கப்பட்ட
சிகப்பு விளக்கு தேவதைகள்...
மேனி தழுவும் புடவை
நூலை விட
யோனி தழுவிய ஆணின்
குறி அதிகம்..
இரவு உலகத்தின்
கட்டிலினில்
விற்பனைக்கு விரிக்கப்பட்ட
பொம்மைகள்
இந்த தேவதைகள்
சரித்திரம் தொட்டு
தரித்திரம் தவிர்க்க
தகர டப்பா சில்லரைக்கு
தங்கமான உடல் கொடுக்கும்
தானத்தின் தலைமகள்கள்.
அரைமணி உறவுகள்
ஆயிரம் ஆயிரம் ....
கூட்டி கழித்து கணக்கு பார்த்தால்
மொத்த உலகும்
இவர்கள் சொந்தம்!

அழித்து அழித்து
கிறுக்கப்படும்
காமத்து கிறுக்கல்களை
கிழியாமல் தாங்கி கொள்ளும்
திறந்த உடல் புத்தகங்கள்.
கலையரசி காணா
கலை புரிந்து
கண்டவனுக்கும்
மடி புரண்டு படி அளக்கும்
இவர்கள் கோயில் இல்லா சிலைகள்.ஆயிரம் பாட்டெடுத்து
அருமையாக பாடினாலும்
அதிகாரத்தின் ஆளுமையில்
அவர்கள்....
தீண்டும் வரை தேவதைகள்
தூரம் வந்தால் ..வேசிகள்...விபச்சாரிகள்!!
| Tweet | |||||
