சமீப காலமாக திரைப்படங்கள் தொலைத்த ஒரு கருமத்தை மறுபடியும் தேடி தந்துள்ளது சுந்தரப்பாண்டியன் திரைப்படம்.
சில குறிப்பிட்ட தலைவர்களை குறிப்பிட்ட ஜாதியின் தலைவர்களாகவே நம்பும் நம்ப வைக்கப்படும் தமிழ் சமுதாயத்தில் அதை மேலும் மேலும் வளர்த்து விடுவதும் ஒரு தனி களை(கலை?).அதை சிறப்பாக செய்துள்ளது சுந்தரப்பாண்டியன் திரைப்படம்.
இந்த படத்தின் பெயரே சற்று உறுத்தலாக உள்ளது என்று சொன்ன மனைவி பேச்சை மீறி படத்தை பார்க்க ஆரம்பித்த உடனேயே ஊர்ப்பெருமை அறிமுகம் ஆகிறது.பின்னணி குரல் ஊர்ப்பெருமையை சொல்லும் அதே நேரம் காட்சிகள் சாதி பெருமையை தூக்கிப் பிடிக்கின்றன.உசிலம்பட்டியில் வேறு போஸ்டர்களுக்கு இடம் இல்லியாம் கார்த்திக்கும் பிரபுவும் மட்டும்தான் நாயகர்களாம்.
நான் கொஞ்சம் ஜெர்க்காகி உசிலம்பட்டி நண்பனுக்கு போனை போட்டால் இல்லை மாப்ளே எங்க ஊர்ல அப்படில்லாம் இல்லை.படம் எடுத்தவன் அவன் சாதி பெருமையை காட்டதுக்கு அப்படி வைச்சிருக்கலாம் என்றான்.அப்படியும் இருக்குமோ?ஏன் இந்த சாதி வெறி?
கார்த்திக்கும் பிரபுவும் இவர்களின் பிடித்த ஹீரோக்களாம். ஏன் அப்படி ஊர்ல உள்ள மத்த ஹீரோக்களை விட இவங்களுக்கு பிடிக்கும்னா சாதிப் பாசம்னு சொன்னா சரியா?பாசம் இருக்கட்டும் ...அதை தமிழ நாடு மொத்தமும் பரப்புர அளவுக்கு இந்த படத்தில என்னதான் அவசியமோ?
எங்க ஊர்ல இப்படி கதாநாயகனை சாதி பிரித்து அவனுங்களுக்கு வால்போஸ்டர் அடித்தே பல சண்டைகள் சாதி கலவரமாக மாறி உள்ளன.இப்போதான் கொஞ்ச வருசமா MR கார்த்திக்கையும் பசும்பொன் பிரபுவையும் சற்று மறந்த நேரமா பார்த்து ஏன் இந்த கொலை வெறி?(இப்பலாம் கல்யான் ஜுவல்லரி பிரபுனுதான் பேர்)
தேசத்துக்கு தந்தை காந்திதான் என்றாலும் இவங்களுக்கு நேதாஜிதான் பிடிக்குமாம்.கூடவே தேவர் படமும் சேர்ந்து காட்டப்படுகிறது.நேதாஜியை தேவர் சாதியாக மாற்றின பெருமையை நான் கண்ணாராக கண்டுள்ளேன்.அதுக்கு காரணம் இது போன்ற அறிமுகங்களும் போஸ்டர்களும்..
எனது தம்பியின் பெயர் நேதாஜி.கலவர காலத்தில் எனது பள்ளி பருவத்தில் பாளையம்கோட்டை முருகன் குறிச்சி(வீரங்க ஏரியாவாம் ) பஸ் ஸ்டாப்பில் என் தம்பியின் பெயர் கேட்ட சிலர் "நேதாஜி" என்றதும் எலேய் இவன் நம்மாளுடா என்று உருகி கொண்டார்கள்.என் தம்பி வீட்டில் வந்து கேட்கிறான் நேதாஜி என்னாளும்மா?(அவர் என்ன சாதிப்பா?யாராவது சொல்லிடுங்க ப்ளீஸ்)
இதற்கு காரணம் என்ன? நேதாஜியை சாதி பட்டியலில் இணைத்து கார்த்திக்கோடும் தேவரோடும் போஸ்டர் அடித்தது காணாது என்று .இப்போது சினிமாவிலுமா?
இதற்கு காரணம் என்ன? நேதாஜியை சாதி பட்டியலில் இணைத்து கார்த்திக்கோடும் தேவரோடும் போஸ்டர் அடித்தது காணாது என்று .இப்போது சினிமாவிலுமா?
பாசமும் கோபமும் என்று குரல் ஒலிக்கும்போது தேவர் அய்யாவை ஜூம் செய்த காமிராக்கள் காமராஜர்,வ உசி ,அம்பேத்கார்,இப்படி யாரையும் காட்டாமல் குருடான காரணம் என்ன? என்ன சொல்ல விரும்புகிறது படம்?நட்பும் துரோகமும் ?இதிலே இந்த வரலாறுக்கும் காட்சிகளுக்கும் அவசியம் என்ன வந்தது? பெருமை பேசி பெருமை பேசி இளம் ரத்தங்களை தூண்டிவிட்டு எதை சாதிக்க நினைக்கிறீர்கள்?
இங்கே பெண் பிள்ளைகளை காதல் அது இதுன்னு மனசை கெடுத்தா (விரல் சூப்ப தெரியாத பச்சை பிள்ளைங்க பாருங்க) கள்ளிக்காட்டுல கொலை செய்து போட்டுவிடுவார்களாம். கவுரவ கொலைகளை எவ்வித வெட்கமும் இன்றி பெருமையாக அறிமுகம் செய்கிறது இந்தப்படம்.அப்பா இல்ல நான் மட்டும்தான் வீட்டை காப்பாற்றணும் என்னும் வாலிபனை இரக்கமே இல்லாமல் குல கவுரவம் என்று கொன்று போடும் வக்கிர கவுரவ கொலைகளை எவ்விதத்திலும் ஒத்து கொள்ளவே முடியாது.ஆனால் அதை நியாயப்படுத்தும் குரலாகவே பெருமைப்படுத்தும் குரலாகவே ஒலிக்கிறது சுந்தரப்பாண்டியன்.
இந்த தேவை இல்லாத அறிமுகம் இல்லாமலேயே படத்தை படைத்திருக்கலாம்.யாரை விட்டது சாதி? தேவர் மகன்,பசும்பொன்,கவுண்டர் வீட்டுப் பொண்ணு,சின்னக்கவுண்டர்,என்று பல படங்கள் தேவையே இல்லாமால் சாதிகளை தூக்கி திரிவதன் மர்மம் என்ன?
எந்த ஒரு மனிதனுக்கும் தான் செய்யும் தவறுகளை பெருமைப்படுத்தி காட்டும் சினிமாக்களை புறம் தள்ளி ஒதுக்கும் பழக்கம் அவசியம் வேண்டும்.தேவர் சாதி என்றால் இப்படிதான் என்று கவுரவ கொலைகளை காட்டும் இந்த திரைப்படத்தை தேவர் சாதியினரே பெருமையாக பார்க்கிறார்கள் என்றால் என்ன சொல்வது? வலையுலகத்தின் விமர்சனங்களில் இதை பற்றி எதுவும் பேசாமல் படத்தை மட்டும் பேசி மௌனமாக சென்றதன் காரணம் என்ன? ஊர் வம்பு வேண்டாம் என்றா?ஹிட்ஸ் பாதிக்கும் அபாயமா?
பத்திரிகைகளில் சாதி பற்றி பேசவில்லை என்றாலும் குறைந்த பட்சம் கவுரவ கொலைகளின் வசனங்களை கூட கண்டிக்காமல் மறந்த மர்மம் என்ன?கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 12 கவுரவ கொலைகள் நடந்துள்ளதாக ஆகஸ்ட்டில் எவிடென்ஸ் அமைப்பின் கதிர் தெரிவித்துள்ளார்.கவுரவ கொலைகளை பற்றிய குற்ற உணர்ச்சிகளை உருவாக்காமல் வரும் இது போன்ற படங்கள் தொடர்ந்து வரும் பட்சம் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்.
ஆதிக்க சாதிகளின் இப்படிப்பட்ட படங்கள் அந்த சாதிக்குள்ளேயே இருக்கும் பல நல்ல உள்ளங்களை கூட சாதி பெருமையை கிளறி விட்டு இன்னொருவனை கீழ்த்தரமாக பார்க்கத் தூண்டும் என்றால் மிகையில்லை.ஏற்கனவே அப்படி இருக்கும் நெஞ்சங்களுக்கு இது பூஸ்ட் என்றுதான் சொல்லணும்.
திருநெல்வேலினா முதுகுல அருவாவை சொருகிட்டு திரிவாங்க என்று முட்டாள்தனமாக காண்பித்த யோசிக்க வைத்த ஹரியை போலத்தான் இருக்கிறது சுந்தரப்பாண்டியன். அறிமுக காட்சிகளுக்காகவே புறந்தள்ள வேண்டிய திரைப்படம் சுந்தர பாண்டியன்.
இது குறித்து விமர்சனங்களை தேடும் போது வினவு மட்டுமே சுந்தரப்பாண்டியனுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.மிக விரிவாக சுந்தரப்பாண்டியனை தோலுரிக்கும் அந்தப் பதிவை படிக்க இங்கே சுட்டுங்கள்
குறிப்பு: இல்லை இல்லை எங்க ஜாதி நாங்க எப்படினாலும் எடுப்போம் வேணும்னா பாரு இல்லைனா மூடிட்டு போ ன்னு சொன்னால் ......சுந்தரப்பாண்டியன் தலைப்பில் பாண்டியன் என்ற பெயரை எடுத்து விட்டுதான் படம் எடுக்க வேண்டியிருக்கும்.வினவு விமர்சனத்தின் மறுமொழிகளில் இதற்கான காரணங்களை காணலாம்.
என்ன பதிவுக்கு படமே இல்லை என்று பார்க்கிறீங்களா? இப்படி ஒரு படத்துக்கு எழுதுற பதிவுக்கு அது ஒன்றுதான் கேடு?
| Tweet | |||||
எல்லாம் அது செய்யும் வேலை... எல்லாவற்றையும் ஆட்டிப்படைப்பது அது தானே...
பதிலளிநீக்குஎன்ன சாதியோ, மதமோ, அது ஒரே நிறம் தானே... அதைத் தான் இந்த மாதிரி படங்கள் உடலை பல கோணங்களில் கிழித்து கிழித்து, "பாருங்கப்பா... அது ஒரே நிறமா தான் இருக்கு..." என்று சொல்கிறார்களோ...? இது 'அது' 'அது' தேவையோ...?
முதல் 'அது' : பணம்...
இரண்டாவது 'அது' : ரத்தம்...
அஜீத் மாதிரி 'அது' போட்டே பின்னூட்டத்தை பின்னிய அண்ணன் திருக்குறள் தனபாலனுக்கு நன்றி.
நீக்குpadathai padamaaga paarungga..
பதிலளிநீக்குஅதேதான் தோழா நானும் கேட்கிறேன்...படத்தை படமா எடுங்களேன்..வருகைக்கு நன்றி தோழா...
நீக்குஇதை சொல்லலும்னு தோணுச்சு .....
பதிலளிநீக்குஅப்பாவி முஸ்லீகளை பாத்தா டெரர்ரா தெரியுதே ?
சென்னையில் சொகுசு விமானமான
`ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் படம் பிடித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
தீவிரவாதிகளா என்று போலீசார் விசாரணை
ஆலந்தூர், அக்.4-
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் சொகுசு விமானமான `ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் புகைப்படம் எடுத்த கேரளா வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
`ட்ரீம் லைனர்' விமானம்
சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு டெல்லிக்கு ஏர்-இந்தியா `ட்ரீம் லைனர்' விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 206 பயணிகள் தயாராக இருந்தனர்.
விமானம் புறப்பட இருந்த நேரத்தில் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள சொகுசு இருக்கையில் பயணம் செய்ய இருந்த
கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அமீத்தாவா (வயது 35), மன்சூர் (24) ஆகியோர்,
"நாங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை'' எனக்கூறி வெளியே செல்ல முயன்றனர். விமானம் புறப்பட இருந்த கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை என்று கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.
செல்போனில் புகைப்படம்
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.
மேலும் அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை, பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி பார்த்தனர்.
அதில் `டரீம் லைனர்' விமானத்தின் அனைத்து பகுதிகளும், விமானி அறைகளும் புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசார், உளவுத் துறையினர் மற்றும் கிïபிராஞ்ச் போலீசார் வந்து 2 கேரளா வாலிபர்களிடமும் விசாரித்தனர்.
அவர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருந்தார்களா? என பயந்து, விமானத்தில் இருந்த 204 பயணிகளையும் கீழே இறக்கி விமானத்தில் சோதனை நடத்தினார்கள்.
அதில் வெடிகுண்டு ஏதுவும் இல்லை என தெரியவந்தது.
தீவிர விசாரணை
இதையடுத்து மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுமார் 13/4 மணி நேரம் தாமதமாக பகல் 12.30 மணிக்கு `ட்ரீம் லைனர்' விமானம் புறப்பட்டு சென்றது.
கேரளா வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில், மன்சூர், சுற்றுலா நிர்வாக துறையில் இறுதி ஆண்டு படித்து வருவதாகவும், அமீத்தாவா கொச்சியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.
இவர்கள் ஏன் `ட்ரீம் லைனர்' விமானத்தை புகைப்படம் எடுத்தனர்?.
இவர்கள் தீவிரவாதிகளா அல்லது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என 2 பேரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=762532&disdate=10/4/2012
நூற்றுக்கணக்கான இணையதளங்களில் `ட்ரீம் லைனர்' விமானத்தை பற்றிய அனைத்து விபரங்களும்.
விரிவாக `ட்ரீம் லைனர்' விமானத்தின் அனைத்து உட்பகுதிகளின் புகைப்படங்களும் காணொளிகளும் ஏர் இந்தியா `ட்ரீம் லைனர்' உட்பட இருக்கின்றன.
அதிலொன்று இதோ சொடுக்கி பார்க்கவும்.
இதோ சொடுக்கி >>>> Air India 787-8 Dreamliner Cabin Walk-through <<<< பார்க்கவும்.
சொடுக்கி >>>>> Photos and Videos: Air India's Boeing 787-8 Dreamliner cabin interiors revealed பார்க்கவும்.
இந்த விடியோவில் உள்ளதை விடவா அமீத்தாவா (வயது 35),
மன்சூர் (24) ஆகியோர் தங்கள் செல்போனில் படம் பிடித்திருப்பார்கள் ?
ஆயிரக்கணக்கான மறுக்கமுடியாத சாட்சியங்கள் இமயமலை குவிந்து இருந்தும் கொலைகார அத்வானி, பால் தக்கரே, மோடி போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல் இஸட் பாதுகாப்புடன் வளர்க்கும் இந்திய அரசாங்கம்
இந்தியாவில் முஸ்லீம் அப்பாவிகளை எந்த நொண்டிச்சாக்கிலும் கைது செய்யலாம் என்னும் வன் கொடுமையை இதிலிருந்து விளங்கி கொள்ளுங்கள்.
நிச்சாயமாக இத்தகைய விமர்ச்சனங்களூம் தேவை,,
பதிலளிநீக்குநண்பர்கள்ளுடன் பகிர்வோம்..
சினிமா என்பது பொழுதுபோக்குடன் சமூக மாற்றத்தையிம் கொண்டு வரக்கூடிய மாய சக்தி..
கொஞ்சம் சிந்திக்கத்தான் வேண்டும்..
###சினிமா என்பது பொழுதுபோக்குடன் சமூக மாற்றத்தையிம் கொண்டு வரக்கூடிய மாய சக்தி..###
நீக்குநூற்றுக்கு நூறு உண்மை அண்ணா....வருகைக்கு நன்றி அண்ணா...
நல்ல விமர்சனம்..சாதிவெறியின் உச்சம் சுந்தரபாண்டியன்..இதுவரை சசியை ஒரு நல்ல நடிகனாக இயக்குனனாக படைப்பாளியாக பார்த்தேன் ,அவர் உண்மை முகம் இதன்மூலம் தெரிந்துவிட்டது..சாயம் பூசிய நரிஎன்று..இனி அவரையும் சராசரி சப்பை சாதிவெறியனாக எண்ணி ஒதுக்கி விடவேண்டியதுதான்.
பதிலளிநீக்குஅவர் மட்டும் காரணமா இருக்க முடியாது.இயக்குனர்,தயாரிப்பாளர் இவர்கள்தான் முக்கிய பொறுப்பாளிகள்.
நீக்குநன்றி படைப்பாளி அண்ணா...
நீக்குசதி வெறி சாதியம் என்பது நீங்கள் அனைவரும் பதிவுகளில் பகிரும் பொழுது தான் மனத்தில் பதிகிறது, உங்கள் கருத்துகளையும் நான் எதிர்க்கவில்லை அதே நேரத்தில் அவர்களையும் எதிர்கவில்லை, தமிழ் சினிமாவிற்கு இது போன்ற படங்கள் ஒன்றும் புதியது இல்லை.. மேலும் நம் மாவட்டத்திற்கும் இது ஒன்றும் புதியது இல்லை... சுந்தர பாண்டியன் என்பதை அழகிய இளைஞன் என்று தான் புரிந்து கொண்டேன், பாண்டியனை தேவராக மாற்றிப் பார்த்தால் ஜாதி தெரிகிறது,
பதிலளிநீக்குஜாதிய வெறி இனம் மொழி என்று ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு விதத்தில் நாம் பிரிந்து தான் கிடக்கிறோம், எல்லாரையும் எல்லா நேரத்திலும் மாற்றி விட முடியாது... இப்படி எல்லாம் கூறுவதால் நான் எம்ஆர் என்று நினைத்து விட வேண்டாம்....
மதம் கடந்து நிற்பவர் நீங்கள், நீங்கள் அறியாதது ஒன்றும் இல்லை. கவுரக் கொலைகள் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனை, கவனிக்கப் பட வேண்டிய ஒன்று....
வினவு தளம் : வெறி(ரி) சாரி அது எனக்கான களம் அல்ல
பாரதியார் போன்று பலர் சுட்டி காட்ட பொய்தான் பலவித அடிமைத்தனங்களும்,ஆணாதிக்கங்களும் உணரப்பட்டன.எதிர்க்கப்பட்டன.சரி சரி என்று செல்லும் வரை எதுவுமே சரியாகத்தான் தெரியும்.எதிர் கேள்விகளில்தான் பிரச்சனைகளும்,கேள்வி கேட்பவன் கலவரகாரனாகவும் சித்தரிக்க்படுகிறான்.
நீக்குசீனு நீ எம் ஆர்ராக இருந்தால்தான் என்ன?இதிலே தீவிரமா உள்ள ஒருவர் முக நூலில் சிறந்த நண்பராக உள்ளார்.கருத்து சண்டை நடந்தாலும் நலம் விசாரிக்கிறார்.ஆதிக்க ஜாதி வெறிகளை அவரும் கண்டிக்கிறார்.ஜாதிகளை கடந்த மனிதம் அழகான நட்பை தரும் சீனு.பள்ளி நண்பர்களில் என் மேல் சிறு துரும்பு கூட பட விரும்பா சண்முகய்யாவை சாதிக்குள் அடக்கிட முடியாது தம்பி.
கவுரவ கொலைகளின் ஊற்றுதான் அந்த ஆரம்ப அறிமுக பெருமைகள் சீனு.இப்படி பெருமையான நம்ம சமூகத்து பிள்ளைய வேற ஒரு ஜாதிக்காரன் காதலிப்பதான்னு கிளம்புற ஆவேசம்தான் கவுரவ கொலைகள்.
வினவு தளம்....மாற்று கருத்து கொண்டோர் உரையாட வருக....சிறப்பான மூன்றாம் பார்வைகளை மட்டுமே ஏந்தி வரும் தளம்.ப சிதம்பரம் முதல் பலவற்றை தோலுரித்து காட்டிய தளம்.கீற்று,சவுக்கு,வினவு மூன்றும் தமிழகத்தின் முக்கிய தளங்கள் என்றே கருதுகிறேன்.
சீக்கிரம் பதிவை போடவும் மறந்துற போறாங்க.
//மாற்று கருத்து கொண்டோர் உரையாட வருக....// ஒரு பதிவு புரிதல் தர வேண்டும் இல்லை மன நிம்மதி தர வேண்டும்... இந்த இரண்டையுமே அந்த தளத்தில் நான் எதிர்பார்க்க முடியாது.... ஒரு நிலைபாட்டிற்குள் தம்மை அடக்கி வைத்துக் கொண்டு அதையே சுற்றிக் கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை அண்ணா....
நீக்குவினவு - எழுத்து தரம் எல்லாம் சரி, ஆனால் எடுத்துக் கொண்ட பொருள்கள் எல்லாம் உங்களுக்கு சுவாரசியம் தருவதாய் இருக்கலாம், எனக்கு இல்லை... அவர்களை நான் குறை கூறவில்லை.. தள்ளி நிற்க விரும்புகிறேன்... படிக்க ஆரம்பித்தால் நிச்சயம் என் மனத்தில் எதிர்கருத்துகள் வரும். மேலும் கம்யுனிசமும் நாத்திகம் நான் எட்ட நிண்டு பார்க்கும் பொருள்கள்.. கம்யுனிசம் நாட்டிற்க்கு நாடு வேறுபடுகிறது, அதுபோலவே நாத்திகமும் தேவைக்கு ஏற்ப மாறுபடுகிறது...
புரிதல் இருக்கும் இடத்தில துணிந்து நுழையத் தயார், அது என் உயிரைக் குடித்தாலும் பரவாயில்லை, நேரத்தைக் குடிக்கக் கூடாது.. ( இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே )
//சீக்கிரம் பதிவை போடவும் மறந்துற போறாங்க.// கொஞ்ச நாள் விடுமுறை அண்ணா... உடம்பும் மனசும் ஒத்து வரும் போது தான் பதிவு... பாசக்கார பசங்க நாளும் பேரு இருக்கும் போது நமக்கு என்ன கவலை அண்ணா .. ( ஒரு வேளை சீக்கிரம் ஒரு விடுப்பு விண்ணப்பம் வந்தாலும் வரலாம்.. பரிசீலனையில் :-) )
அவரவர் விருப்பம் சீனு,ஆனால் அவைகள் எழுதுபவை உனக்கும் எனக்குமான நலம் கருதியே.உண்மையான போராட்டங்களில் தன்னை முன்னிறுத்தும் வினவின் புரட்சி படைகளின் எண்ணிக்கை மிக குறைவே என்றாலும் அந்த துணிச்சலை பாராட்டித்தான் ஆக வேண்டும்.(கல்வித்துறை முற்றுகை போராட்டம்)
நீக்குஅவர்கள் எடுத்துக் கொள்ளும் பொருள்கள் முன்னாடி எப்பவோ நமக்கு அவசியமாகவும் இப்போது அவசியம் இல்லாமலும் இனிமேல் அவசியமாகவும் இருக்கும் என்பது உண்மை.கம்யூனிசம்,நாத்திகம் இதன் கொள்கைகள் எல்லாம் அறிந்தவனில்லை நான்.எது சரி? எது தவறு? எது பாதிப்பு?எது போலி?எது உண்மை? ஆராய்ந்து பார்க்கவும் மூன்றாம் பார்வையும் அவசியமே.
நமது விருப்பத்திற்கும் புரிதலுக்கும் தக்க எழுதப்பட்டால் அது ஆ.வி ,குமுதம் போலத்தான்.சமரசம் இல்லா எழுத்துக்களுக்கு அவ்வளவுதான் மரியாதை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
விடுப்பு விண்ணப்பம்? பரிசீலனை வேண்டாம் போட்டு விடு புகையட்டும்..உடல் நிலையை கவனித்து விட்டு அப்புறமா எழுதுனா போதும்.சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்.
சாதி பெருமை போலவே மதப்பெருமை பேசி திரிவோரை என்ன செய்யலாம்?
பதிலளிநீக்கு;பெயரில்லா நண்பரே,சாதியோ மதமோ நாத்திகனோ பெருமை பேசி பெருமை பேசி மற்றவர்களை இழிவாக நோக்கும் பட்சம் புறந்தள்ள வேண்டியதுதான். நீங்க பேர் போட்டு வரலாமே...இன்றைய உலகத்தில் மதம்தாம் மிகப்பெரிய போதை என்பது என் தாழ்மையான எண்ணம்.
நீக்கு//பெயரில்லா நண்பரே,சாதியோ மதமோ நாத்திகனோ பெருமை பேசி பெருமை பேசி மற்றவர்களை இழிவாக நோக்கும் பட்சம் புறந்தள்ள வேண்டியதுதான்.//
பதிலளிநீக்குAppo islaamiyarkalaiyum puramthalla vendiathuthan.
Nanri.
சாதியின் பெயரால் சங்கடத்தை உருவாகுக்கும் சண்டாளர்கள் மடிவதில்லை
பதிலளிநீக்கு