வலைபதிவர்கள் மாநாடு மயிலாடு என்று களை கட்டுவதை காணமுடியாமல் கண்கட்டுகிறது எனக்கு.நீங்க எப்படினாலும் நினைத்து கொள்ளுங்கள்...ரொம்பவும் ஓவராத்தான் போகுது உங்க அலும்பு...முதலில் கவிதை வீதியில் ஆரம்பித்த பதிவர் மாநாடு அழைப்பு பதிவு அப்புறமா தினமும் வாட்டு வாட்டுன்னு வாட்டுது...
அட ஆமாங்க யாரை பார்த்தாலும் பதிவர் சந்திப்பை மாநாட்டை பற்றி கொடுரமா ஒரு தலைப்பை கொடுத்து படிக்க வைக்கிறாங்க .உள்ளே போய் பார்த்தா வழிஞ்சிகிட்டே அப்பத்தான் நீங்க படிக்க வருவீங்கனு மொக்கையா எழுதி கடுப்பை கிளப்புறாங்க...நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது?நீங்களே சொல்லுங்க...
சென்னையில இருக்குறவங்கள கேக்கவே வேண்டாம்...பதிவர் கூட்ட ஆலோசனைல கலந்துக்கிறேன்னு போய்ட வேண்டியது,காலுக்கு கீழே ரெண்டு போட்டோ,தலைக்கு மேலே ரெண்டு போட்டோ...அடுத்த நாள் பாத்தா பயபுள்ளங்க வெவரமா ஒரு பதிவை தேத்திடுறாங்க...
நாம வெளியூர்க்காரங்க என்னடா செய்யலாம்னு பார்த்தா ஒன்னும் முடியலை...எத்தனை நாள்தான் விரல் சூப்பிட்டு பாத்துகிட்டே இருக்குறது?அதான் கோவத்தில களம் இறங்கிட்டோம்....களத்துல இறங்கியாச்சே பதிவர் சந்திப்பை பற்றி ரெண்டு பதிவ படிக்கலாம்னு பார்த்தா ஒரே அக்கப்போர்....
குடிக்கிற ஜாதி..குடியாத ஜாதி..நீயா நானா? பதிவர் சந்திப்பு என்னும் பெயர் மாறி,பதிவர் குடிப்பவர் மாநாடு,குடிக்காதவர் மாநாடு என்று அமைந்துவிடுமோ என பயமாக உள்ளது.எப்படியோ கொஞ்ச பேருக்கு இதுதான் இந்த வாரத்துக்கு எழுத்தா இருக்குது.
பதிவர் சந்திப்பின் சுவராசியத்தை கெடுத்து விடுமோ என்று பயத்தை தருகிறது பதிவுகள்.முதல் பதிவாக கவிதை வீதி அவர்களின் பதிவையும்.தம்பி சீனுவின் இரண்டு பதிவையும் படித்தேன்...அதன் பின் இப்போதுதான் பதிவர் சந்திப்பை பற்றிய பதிவுகளை படிக்கிறேன்.கலந்துக்குரவங்க பேரை கொடுத்திருந்தார்கள்.வேற சுவராஸ்யமா எதுவும் இல்லை.பவர் ஸ்டார் வருகிரார்னு மறுபடியும் கவிதை வீதியில் காயவிட்டார் அண்ணன் திரு கவிதை வீதி சௌந்தர்.
முக்கியமான பிரச்சனை என்னனா பதிவர் சந்திப்பை பற்றிய முக்கிய அறிவுப்புகள் வந்தாலும் என்னை போல உள்ளவன் சும்மா எதுனாச்சும் கிளப்புவாங்கனு படிக்காமலேயே அப்பீட் ஆயிடுவோம். அதாவது புலி வருது கதையாகும்னு சொல்றேன்....யப்பா,நான் சரியாத்தானே பேசுறேன்?
சரி நடந்தது நடந்து போச்சு...இனிமே பதிவர் சந்திப்பில் கலந்து கொல்பவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் என்னனா...நீங்க சந்திப்பில் இருக்கும்போது ஒரு பதிவர் என்பதை மறந்து விடவும்.இல்லைனா அன்னைக்கு இரவே ஒரு பதிவு போட மேட்டர் தேடுவீங்களே தவிர சந்தோசமா இணைந்திருக்க மாட்டீங்க.
பதிவர் சந்திப்பு முடிந்து ரெண்டு நாளைக்கு அதை பற்றி யாரும் எழுத கூடாதுன்னு ஒரு சட்டம் போடணும்.ரெண்டு நாளைக்கு அப்புறமும் எது மனசுல நிக்குதோ அதுதான் நீங்கள் மிகவும் ரசித்ததாகவும் சுவராஷ்யமாகவும் அமையும்.அதை படிக்கத்தான் நாங்கள் காத்திருக்கிறோம்.
அப்புறம் இந்த பிரபல பதிவர்களை மூத்த பதிவர்களை பேட்டி எடுக்கிறது,அவர் கவிதை அரங்கத்தில் காதை சொறிந்தார்,ஒரே நேரத்தில் மூணு டம்ளர் தண்ணி குடிச்சார்,தயிர் கடைந்தார்னு கவனிச்சு கவனிச்சு பதிவு எழுதி யாரும் எங்களை கடுப்பாக்காதீங்க ..சொல்லிப்புட்டேன்.
யாருமே நல்லா இல்லைன்னு எழுத மாட்டீங்க...பேசா பொருள்கள் பேச மறுக்கும் பொருள்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.அவற்றை குற்றமாக எழுதாமல் அடுத்த முறை சிறப்பாக எடுத்து செய்ய வழிவகுக்கும் முறையில் திட்டம் தீட்டி கொடுங்கள்.
இந்த மடிக்கணினி,காமெரா இதெல்லாம் கொண்டு போய் அங்கே இருந்தே லைவ் பதிவு போட்டு கொலைவெறி பண்ணிடாதிங்க மக்களே...போவது பதிவர் சந்திப்பு என்பதையும் செய்தி சேகரிக்க இல்லை என்பதையும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.
எழுதுரவனுக்கு பொதுவா சுய மரியாதை அதிகம் இருக்கும்னு சொல்வாங்க..யாரும் யாரோடும் கருத்து சண்டை போடாமால் சுமூகமாக நிகழ்ச்சியை முடித்து வரவும்.இந்த பின்னூட்ட சண்டை போட்டவர்களை ஒரே மேடையில் நிறுத்தி பேச விட்டு பார்த்தால் எப்படி இருக்கும்?
பதிவர் சந்திப்பின் பதிவு என்றால் மற்றவர்கள் பதிவை ஒருமுறை படித்து விட்டு அப்புறமா இடுங்கள்.இல்லைனா ரெண்டுபேருமே ஒரே மாதிரி எழுதி வைக்க போறீங்க....
அப்புறமா இந்த வெளியூர் பதிவர்களின் பயணக்கட்டுரைகள்...பஸ் கிடைக்கலை ரயில்ல முட்டிகிட்டேன்,கடல்ல காலை நினைச்சேன் ஈரமாச்சு,வெயிலில் வந்தேன் காஞ்சிடுச்சுனு யாராவது பதிவு போட்டீங்க...மொட்டை போன் அடிச்சு ஊருக்குள்ள கலவரத்தை கிளப்பிடுவேன் ஆமா...
அண்ணனின் பெருந்தன்மை எனக்கு இருக்க நாற்காலி கொடுத்தார் ,சாப்பாடு ஊட்டினார்னு நெக்குருகும் தம்பிகளை எப்படி தடுத்தாலும் எழுதத்தான் போறீங்க.நானும் ரத்த கண்ணீர் வடிக்கத்தான் போறேன்.எவ்வளோவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா என்ன?
இந்த நன்றிப் பதிவுகள் (சென்டிமென்ட்??!!)வேறு என்ன பாடு படுத்த போகிறதோ...இப்பவே வயித்துக்கும் தொண்டைக்கும் வைரமுத்து ஆப்பிள் பயம் காட்டுகிறது.அதிலும் நன்றிக்கு வரப்போகும் கவிதைகள்...ஷ்..இப்பவே கண்ணை கட்டுதே.
எப்படியோ பாஸ் பதிவர் சந்திப்பில் கலந்துக்க முடியாத காட்டத்திலேயும்,நீங்க அதை பத்தி எழுதி எழுதி இன்னும் கடுப்பை கிளப்புவிகளே என்ற நல்லெண்ணத்திலும் நம்ம பங்குக்கு எதையாவது எழுதி வைப்போம்னு எழுதிட்டேன்...நல்ல படியா சிறப்பா சந்திப்புகள் தொடர வாழ்த்துக்கள்.அடுத்த திருவிழாவை இப்போவே அறிவிக்க வேண்டுகிறேன்.
வழி தெரியலையா?இங்கே சுட்டுங்கள் மதுமதி அவர்கள் பதிவர் திருவிழாவிற்கு வர வழிகள் மற்றும் நேரடி ஒளிபரப்பு காண நிரலையும் தருகிறார்.
வருவதற்கு வழி காட்டும் தெய்வங்களே திரும்பி செல்லவும் வழி சொல்ல வேண்டுகிறேன்..
குறிப்பு: எந்த பதிவரிடம் கேட்டாலும் பரிசு தொகையை வென்றால் பாதி பணம் எனக்கு தருவதாக சொல்கிறார்கள்...அப்படி என்னப்பா நான் செய்துட்டேன்? எந்த பதிவர்கள் பணம் வென்றாலும் பாதி பணம் அனுப்ப முகநூல் மூலமாக என்னை அணுகலாம்....(இது வதந்தி இல்லை என்று ரா உறுதி செய்துள்ளது)

| Tweet | |||||

நல்லப்பகிர்வு, த.ம 200002012 :-))
பதிலளிநீக்குஇப்போ எதாவது நான் சொன்னேன் என்னைய கொண்டேப்புடுவாங்க சிலர் :-))
சும்மா சொல்லுங்க பாஸ்....துணைக்கு ஆள் தேடிட்டு இருக்கேன்....நன்றி பாஸ்...ஆமா இந்த த.ம....காயவிடுறீன்களே...
நீக்குகுடியால் அழியுமா பதிவுலகம்?
பதிலளிநீக்குபதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!
http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_25.html
சிறப்பான ஆலோசனைகள்! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html
oho.. ippadiyum padhivu podalaamaa? Nice.,
பதிலளிநீக்குநீங்க வேற....நிறைய பேரு காட்டமா இருக்காங்களாம்...
நீக்குபதிவர் சந்திப்பில் கலந்து //கொல்பவர்களுக்கு//
பதிலளிநீக்குஎழுத்து பிழையா இல்லை உங்கள் கலையா
சத்தியமா எழுத்து பிழைதான் மக்களே...இதில் எந்த உள்குத்தும் இல்லை இல்லை இல்லை .நன்றி நண்பரே சுட்டி காட்டியதற்கு.அப்படியே இருக்கட்டுமா?
நீக்குஉங்கள் பதிவு வாசித்தேன். அழைப்பிதழ் துவங்கி அனைத்து பதிவுகளும் எல்லா பதிவர்களும் வெளியிட வேண்டும் என்பது குழு முடிவு. இதன் காரணம் வெவ்வேறு பதிவர்களுக்கு வெவ்வேறு தொடர் வாசகர்கள் இருப்பார்கள் என்பது தான். நிறைய பேரை சென்றடைய வேண்டும் என்பதால் தான் இந்த ஏற்பாடு. அனைவரும் தலைப்பு ஒன்றே வைக்க முடியாது...அவரவர் விருப்பத்துக்கேற்ப தலைப்பு வைத்து கொண்டனர்.
பதிலளிநீக்குவெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு கிண்டல் அடிப்பது பெரிதல்ல. இன்று கூட நினைவு பரிசு செய்து தருபவர் கடைசி நிமிடத்தில் காலை வாரினார் . நாளை காலை தான் தருவதாக சொல்லி உள்ளார் . அனைவருக்கும் இதனால் செம டென்ஷன். விழா மண்டபத்தில் நேரலை ஒளிபரப்பிற்கு எத்தனை மெநேக்கட வேண்டியுள்ளது என்பதெல்லாம் நேரில் பார்த்தால் தான் தெரியும். இது வெளி மாநில / வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பார்க்க தான் மெநேக்கெடுகிறோம். இன்று மாலை செம மழை. வெளியூர் நண்பர்கள் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்க அவர்களை அழைத்து வர மழையில் நனைந்த படி வண்டியோட்டி சென்று சென்று திரும்புகிறார் ஒருவர்.
இத்தனை பேரின் உழைப்பை கிண்டல் செய்வது சரியா? யோசியுங்கள் !
இத்தனை இடர்களுக்கு இடையிலும் மிக மிக மகிழ்வாய் நண்பர்கள் முப்பது பேருக்கும் மேல் இன்று கூடி பேசி இனிமையாய், மறக்க முடியாத நாளாய் இன்றைய தினத்தை கொண்டாடினோம். எத்தனை பேருக்கு வாய்க்கும் இந்த இன்பம்?
####எப்படியோ பாஸ் பதிவர் சந்திப்பில் கலந்துக்க முடியாத காட்டத்திலேயும்,நீங்க அதை பத்தி எழுதி எழுதி இன்னும் கடுப்பை கிளப்புவிகளே என்ற நல்லெண்ணத்திலும் நம்ம பங்குக்கு எதையாவது எழுதி வைப்போம்னு எழுதிட்டேன்...நல்ல படியா சிறப்பா சந்திப்புகள் தொடர வாழ்த்துக்கள்.அடுத்த திருவிழாவை இப்போவே அறிவிக்க வேண்டுகிறேன்.
நீக்குவழி தெரியலையா?இங்கே சுட்டுங்கள் மதுமதி அவர்கள் பதிவர் திருவிழாவிற்கு வர வழிகள் மற்றும் நேரடி ஒளிபரப்பு காண நிரலையும் தருகிறார்.
வருவதற்கு வழி காட்டும் தெய்வங்களே திரும்பி செல்லவும் வழி சொல்ல வேண்டுகிறேன்..####
எனக்கு வரமுடியாத கஷ்டம் அய்யா....ஒரு மொக்கை பதிவா போடலாம்னு போட்டேன் எண்ணம்தானே தவிர வேறொன்றுமில்லை.மற்றபடி சிறு சிறு நிகழ்ச்சிகளை நடத்தவே படும் கஷ்டங்களை நானும் அறிவேன்.பதிவுலகில் ஜாலியாக வரும் எத்தனையோ பதிவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே...ஆனால் அது காயப்படுத்தும் பதிவாக அமைந்திருந்தால் வருத்தம் கோருகிறேன் என்று நழுவ முடியாது.மன்னிப்பு கேட்கிறேன்....
//அப்புறமா இந்த வெளியூர் பதிவர்களின் பயணக்கட்டுரைகள்...பஸ் கிடைக்கலை ரயில்ல முட்டிகிட்டேன்,கடல்ல காலை நினைச்சேன் ஈரமாச்சு,வெயிலில் வந்தேன் காஞ்சிடுச்சுனு யாராவது பதிவு போட்டீங்க...மொட்டை போன் அடிச்சு ஊருக்குள்ள கலவரத்தை கிளப்பிடுவேன் ஆமா...// நான் இப்போ தான் ,முதல முறையாக பதிவர் சந்திப்புக்கு வருகிறேன்..... உங்களுது கருத்து தான் என்னக்கும்.... கொஞ்ச நாட்களாகவே எங்கு பார்க்கினும் இந்த பதிவர் சந்திப்பு பற்றி நல்லா blog kku hit வங்குறாங்கே....
பதிலளிநீக்குஅண்ணே நிறைய பேருக்கு இப்படி இருந்திருக்கும்...ஆனா சொல்ல மாட்டாங்க.பதிவர் பதிவுகளில் கொஞ்சம் சுணக்கம் இருந்தது என்னமோ உண்மைதானே.அதுக்கு அவர்கள் படும் கஷ்டங்களை சந்திக்கும் அனுபவங்களை ஜாலியாக இல்லை கஷ்டமாக எழுதியிருந்தால் எழுதுவதாக இருந்தால் நலமாக இருக்கும்.
நீக்கு###நான் இப்போ தான் ,முதல முறையாக பதிவர் சந்திப்புக்கு வருகிறேன்.### அண்ணே முதல் சந்திப்பு என்கிறீங்க மேலே சில வேண்டுகோள்கள் உள்ளது ...மறந்துடாதிங்க அண்ணே..
// .நீங்க சந்திப்பில் இருக்கும்போது ஒரு பதிவர் என்பதை மறந்து விடவும்.இல்லைனா அன்னைக்கு இரவே ஒரு பதிவு போட மேட்டர் தேடுவீங்களே தவிர சந்தோசமா இணைந்திருக்க மாட்டீங்க.// இது முழுக்க முழுக்க உண்மை உங்கள் இந்தக் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன் அண்ணா.
பதிலளிநீக்குஅண்ணா நாம் எல்லாம் பதிவர்கள் என்றாகிப் போன பின் நாம் கண் சிமிட்டினால் கூட அது ஒரு பதிவு தானே.. அவரவர் கருத்துச் சுதந்திரம்... அதில் நாம் தலையிட தடுக்க முடியாது... அதே நேரத்தில் இப்படி எழுதாதீர்கள் என்று உங்களையும் நான் கூற முடியாது... காரணமும் அதே கருத்துச் சுதந்திரம்.
// பயணக்கட்டுரைகள்...பஸ் கிடைக்கலை ரயில்ல முட்டிகிட்டேன்,கடல்ல காலை நினைச்சேன் ஈரமாச்சு,வெயிலில் வந்தேன் காஞ்சிடுச்சுனு யாராவது பதிவு போட்டீங்க...மொட்டை போன் அடிச்சு ஊருக்குள்ள கலவரத்தை கிளப்பிடுவேன் ஆமா...// உங்க டைமிங் காமெடி மிகவும் ரசித்தேன்...
உங்களால் கலந்து கொள்ள முடியாதது எங்களுக்கு வருத்தமே...
எங்கள் உயிரைக் காக்கும் உங்களை போன்ற பதிவர்களை பெரிதும் மதிக்கிறோம்.... எல்லையில் நீங்கள் படும் நீங்க பதிவுலகம் உண்மையிலேயே உங்களுக்கு மிகச் சிறந்த வழி நிவாரணி அண்ணா...
நீங்கள் மேற்சொன்ன படி நான் பதிவேதும் இல்ட்டல் மொட்டை போன் இல்லை நேரடி போன் போட்டு கூட திட்ட உங்களுக்கு உரிமை உண்டு... ஹி ஹி ஹி
சீனு நீ சொல்வது என்னமோ உண்மைதான்...வாரபத்திரிக்கையும் கிடைக்காது..அதிகமாக கணினி அறிவும் இல்லாமல் ஏதோ இன்னைக்கு நகரத்தில் இருப்பதால் பதிவுகள் மட்டுமே ஆறுதல்.ஆனா அதுல தேடி படிக்கும் போது ஒரே மாதிரியான பதிவுகளா இருந்தா என்ன செய்றது?மற்றபடி யாரையும் புண் படுத்தனும்னு எழுதலை...அப்படி தோனுச்சுனா மன்னிக்கவும்...
நீக்குசீனு,பதிவு எழுத நினைத்துவிட்டால் கட்டாயம் அங்கே விழாவில் சிறப்பாக பங்கு பெறமுடியாது...கவிதை படிக்காங்களா?எழுதி வைக்காதீங்க.மனசுக்குள்ளே நின்னா அதுதான் சூப்பர் கவிதை.அதை எழுதுங்க....
எழுத கூடாது என்று யாரையும் சொல்லவில்லை சீனு..இப்படில்லாம் எழுதுனா எங்களுக்கு போரடிக்கும் என்று சொன்னேன்.நான் ஒரு தெருகொடியில் இருந்து கூவுவது அனைவருக்கும் பொருந்தாது என்று தெரியும்.அறிவுக்கு எட்டினது மண்டைக்கு எட்டல...இன்னொன்னு நான் ஜெயலலிதா இல்லையே..
எப்படியோ எங்கயோ ரசிக்கும்படியா ஒரு வார்த்தை எழுதிட்டேன் ...அது போதும் சீனு.தவறாக யாரையும் புண்படுத்தும் விதமாக எழுதியிருந்தால் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்..
இன்று புலவர் ராமானுசம் அவர்களின் பதிவும் இதை பற்றியதே...ஆனால் அந்த கவிதை....வாய்ப்பே இல்லை..பெரியவர் பெரியவர்தான். இது போலத்தான் எதிர்பார்க்கிறோம்...இல்லை றேன்..இது போல தாருங்களேன்.
நீக்குஎங்கள் உயிரைக் காக்கும் உங்களை போன்ற பதிவர்களை பெரிதும் மதிக்கிறோம்.... எல்லையில் நீங்கள் படும் கஷ்டம் நீங்க பதிவுலகம் உண்மையிலேயே உங்களுக்கு மிகச் சிறந்த வழி நிவாரணி அண்ணா...
பதிலளிநீக்குஇந்த வரி இவ்வாறு இருந்திருக்க வேண்டும்... வாக்கியப் பிழை....
அவங்க கஷ்டம் அவங்களுக்கு உங்க கஷ்டம் உங்களுக்கு.. வாசகனான எனக்கு இது கூட பதிவர் சந்திப்பை பற்றிய பதிவே.. நீங்க எதிர்பார்க்கிற சுவாரசியம் இதுலயும் மிஸின்கே அண்ணா.. யப்பா,நான் சரியாத்தானே பேசுறேன்?
பதிலளிநீக்குஆனாலும் நீங்க சொல்லுவது 50 % பதிவர்களுக்கு நன்றாக பொருந்தும்.. (மது பற்றியது)
ஆனாலும் எல்லாரும் சந்தோசமா கிளம்புற வேளையில இது தேவையோ என தோணுது.. மற்ற படி கருத்துக்கள் ஓகே தான்..
ஹாரி நண்பா,என்ன செய்ய ?மற்றபடி கருத்துக்கள் ஓகே தானே....அது போதும் நண்பா.யாரையும் காயப்படுத்தும் நோக்கில் எழுத நினைக்கவில்லை.அப்படி தோன்றினால் மன்னிப்பு கோருகிறேன்.
நீக்குஇன்று புலவர் ராமானுசம் அவர்களின் பதிவும் இதை பற்றியதே...ஆனால் அந்த கவிதை....வாய்ப்பே இல்லை..பெரியவர் பெரியவர்தான். இது போலத்தான் எதிர்பார்க்கிறோம்...இல்லை றேன்..இது போல தாருங்களேன்.
நீக்கு