Translate

திங்கள், 30 ஏப்ரல், 2012

அடிடா அவளை...உதைடா அவளை....

எத்தனை நாள்தான் பாஸ் உருகி உருகி கவிதை எழுதுறது?நமக்கு ஒரு மா சூ சொ வேண்டாம்?இனிமே மக்கா எந்த அட்டு பிகரு அப்பீட் ஆனாலும் சரி கொய்யால இந்த மாதிரி எழுதி கொடுத்து ஒருவாட்டியாவது ஒரு குத்தலை கொடுக்கணும்...



என்  அளவுக்கு உனக்கு
காதலிக்க தெரியாது
உன் அளவுக்கு எனக்கு
ஏமாற்ற தெரியாது ...



நீ இல்லாது இருந்திருந்தால்
பொழுது போக
சிரமபட்டிருப்பேன்.



நீ இல்லையென்றால்
காதல் செத்துவிடுமா என்ன?
சர்தான்.. போடி.....



நீ  கொடுத்த வரதட்சணை
நான் எடுத்த சினிமா டிக்கெட்
எதற்கு மதிப்பு அதிகம்?



நான்கு சுவருக்குள் நடந்த
நம் கல்யாணம்
மேடையில் நடக்கும்
உனது கல்யாணம்  
எது உண்மையான கல்யாணம்?



என் விந்தணு
உன் குழந்தை
எதனை முதலில் சுமந்தாய்?



நீ இன்றி
உன் புருசனில்லை
நான் இன்றி
உன் குழந்தையில்லை



உன் பிள்ளையை
கவனமாக  வளர்த்து கொள்
முறை தெரியாமல்
என் மகனை
காதலித்து விட போகிறாள் !!!




 இது எழுதி பல வருடங்கள் ஆகின்றது.இப்போ படிக்கிறப்போ காமெடியா இருக்குது.நல்லா இல்லைனா தயவு செய்து சொல்லிடுங்க.இல்லனா இதே மாதிரி இன்னும் எழுதுறேன்னு ஆரம்பிச்சிட கூடாது பாருங்க....

9 கருத்துகள்:

  1. This is best

    நீ இல்லையென்றால்
    காதல் செத்துவிடுமா என்ன?
    சர்தான்.. போடி.....


    This is also good one...
    நீ கொடுத்த வரதட்சணை
    நான் எடுத்த சினிமா டிக்கெட்
    எதற்கு மதிப்பு அதிகம்?

    Post like this Sathish....

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. ஒருவனுக்கு ஒருத்திஎன்ற தமிழ்ப் பண்பாடு போதிக்கும் விதமாக இனி எழுதுங்கள் .

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி அய்யா,திருத்தி கொள்கிறேன்.இணைந்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  5. ஐயோ அன்ன கவிதை அருமை நேரடி தாக்குதல் இல்ல இல்ல நேரடி ராணுவத் தாக்குதல். எல்லா லைனும் சூப்பர்

    //என் விந்தணு
    உன் குழந்தை
    எதனை முதலில் சுமந்தாய்?

    நீ இன்றி
    உன் புருசனில்லை
    நான் இன்றி
    உன் குழந்தையில்லை

    உன் பிள்ளையை
    கவனமாக வளர்த்து கொள்
    முறை தெரியாமல்
    என் மகனை
    காதலித்து விட போகிறாள் !!!//

    இது செம சூப்பர். பின்றீங்க இன்னும் நிறைய ட்ரை பண்ணிப் பாருங்க

    பதிலளிநீக்கு
  6. ஹி..ஹி...ஒவ்வொருத்தருக்கும் ஒரு .'.பீலிங்.உங்க. '.பீலிங் புரியுது பாஸ்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....