பேருந்திலும் பணிபுரியுமிடத்திலும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் நிகழ நமது மவுனமும் ஒரு
காரணமாகி விடுகிறது.... அவர்களின் இயலாமை ஆணின் தைரியமாகி விடுகிறது....
விரிந்து
விழுங்கும் விழிகளுடன்
பொங்கி
வழியும் ஆண்மையுடன்
பேருந்தில்
முட்டும் அவனின் உடைகள்
ஆணுறையாகவே
உணரப்படுகிறது ....
உங்களின்
பாதுகாப்பான மவுனத்தை போல!!!
அவனின் ஆணுறையின் சாட்சியிலும்
எனது
மவுனத்தின் சாட்சியிலும்
என்
வேலை நிரந்தரமாகவும்
வாழ்க்கை
அடிமையாகவும்
கையெழுத்திடப்படுவது அறீவிர்களா?
மவுனம்
சம்மதமாகிறது
அவனின்
ஆணுறைகளுக்கு...
மவுனம்
சம்மதமாகிறது
என்
இயலாமை வாழ்விற்கு .....
மவுனம்
கேள்வியாகிறது
உங்கள்
மவுனமான பார்வைக்கு .....!!
விலகிப்போகலாமே?
சரக்குக்கும்
சைடிஷ்க்கும்
இடைப்பட்ட
இடைவெளியில்
அவன்
சார்பான உங்களின் கேள்வியை
உங்களிடமே கடத்துகிறேன்
பதில்
சொல்லுங்கள்.........
விலகிப்போகலாமே???
அவன் விலகிப்போகலாமே....???
- நர்ஸ்,வேலைக்காரி,போலீஸ்காரி,டைப்பிஸ்ட்,பயணி,ஆசிரியர்,சேல்ஸ் கேர்ள் ,நடிகை ,இன்னும் பலரின் கேள்வி இது......
குறை நிறைகளை பின்னூட்டத்தில் மறக்காமல் தெரிவியுங்கள்...பிடித்திருந்தால் பகிருங்கள்....புரிகிற மாதிரி எழுதியுள்ளேன் என்றுதான் நம்புகிறேன்..நன்றி.
Related Posts: ,
,
,
,
,
,
//சரக்குக்கும் சைடிஷ்க்கும்
பதிலளிநீக்குஇடைப்பட்ட இடைவெளியில்//
இந்த இடத்தில் கொஞ்சம் இடறுகிறது போல படுகிறது ! அண்ணா
இவ விலகி போயிருக்க வேண்டியதுதானேன்னு பார்ல மப்புல உக்காந்து பேசுறவங்க கோணத்தில் எழுதினேன்.....அது சேரலன்னா வரும் உரைநடை கவிதைகளில் இன்னும் கவனம் செலுத்துகிறேன்...
நீக்குசுட்டிகாட்டியதுக்கும் வருகைக்கும் நன்றி விஜயன் நண்பா..
உண்மையை உரக்க சொன்னீர்கள்...மாற்றங்களை எதிர்பாப்போம்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி Priya!!
நீக்குஇயலாமையினாலும் அறியாமையினாலும் அவர்கள் கைகளும் வாய்களும் கட்டப்பட்டிருக்கின்றன. துயரமான உண்மை.
பதிலளிநீக்குஉண்மைதானே ....எத்தனையோ இடங்களில் தங்களின் வேலையை தக்க வைத்து கொள்ள அட்ஜஸ்ட் செய்ய பணிக்கப்படுகிறார்கள்தானே...
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
இந்த இடிராஜா சாமாச்சாரம் தமிழனின் தனி கலாசாரம்!
பதிலளிநீக்குபிளஸ் 1 vote!
நன்றி நம்பள்கி ....
நீக்கு
பதிலளிநீக்குமிக அருமையான கவிதை... உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
நன்றி Avargal Unmaigal
நீக்குவலி புரிந்தது சகோ...!
பதிலளிநீக்குஆனால்...!
உணரனுமே இச்சமூகம்..!!
உங்களுக்கு நன்றி!
நன்றி சீனி கவி ....
நீக்குகொடூரமான உண்மை... ஒரு நாள் அவன் மனச்சாட்சி அவனை கொல்லும் நேரம் கண்டிப்பாக வரும்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் அண்ணா...
நீக்குதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்!?
பதிலளிநீக்குஉண்மைதான் அக்கா..ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பானது அத்து மீறுகிறது..அதற்கு அவளின் வறுமை சூழ்நிலை என்று அனைத்தையும் பயன்படுத்தும் ஆண்கள் இருந்தென்ன லாபம்...
நீக்குநன்றி அக்கா,
நீக்குகனமான வரிகளைக் கொண்ட கவிதை அண்ணா... தண்டனைகள் கடுமையானால் கூட இவர்கள் திருந்துவார்களா என்பது சந்தேகம் தான்
பதிலளிநீக்குஒரு வழியா வந்தியே....சந்தேகம் சரிதான் ....
நீக்குதண்டனைகள் என்பது எல்லாம் இவர்களுக்கு தூசு. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
பதிலளிநீக்குஉண்மைதான் தண்டனைகளை விட மனசுதான் முக்கியம்
நீக்குஅறிவுக் கெட்ட எருமைகள் தான் இடித்துச் செல்லும், வெட்கங்கெட்ட நாய்கள் தான் பாலுறுவுக்காய் பொது இடத்தில் சீண்டும். உணர்ந்து கொண்டு திருந்தினால் மனிதன், அல்லங்கில் அதுகள் மிருகமே!
பதிலளிநீக்குநன்றி விவரணன் நீலவண்ணன் .....ஒரே வ்கார்த்தையில் மிருகம்னு முடிச்சிட்டிங்க
நீக்கு