Translate

வெள்ளி, 29 ஜூன், 2012

ATYA PATYA- ஜோத்பூரில் கலக்கிய புதுச்சேரி



ATYA-BATYA இப்படி ஒரு விளையாட்டு கேள்விபட்டதுண்டா?ஆரம்பித்த நொடி முதல் கடைசி வரை பொறி பறக்கும் இந்த விளையாட்டை சொல்லாமல் செத்துட்டா அதை விட பெரிய பாவம் எதுவுமில்லை.

புதுசா இருக்கேன்னு பார்த்தா தமிழக அணியின் பயிற்சியாளரும் மானேஜருமான திரு.கலைச்செல்வன் அவர்கள்  தந்த தகவல் ஆச்சரியத்தை தந்தது.நம்ம  ஊரின் கிளித்தட்டு விளையாட்டுதான் இன்று ATYA PATYAவாக பட்டய கிளப்புதாம்.தமிழகத்திலும்,தமிழீழ பகுதியிலும் பிரசித்தி பெற்ற கிளித்தட்டு ஆட்டத்தை அவர் விவரிக்கும் போதுதான் இதை தவற விட்ட என் தலைமுறைக்கு எப்படியாவது எடுத்து சொல்ல வேண்டும் என்ற உந்துதல் இந்த பதிவை எழுத தூண்டியது.

கிளித்தட்டுனா?.....நாம தொலச்சதை கொஞ்சம் கொஞ்சமாவது சேர்த்து வைக்கிற விக்கியில் போய் பாருங்க இல்லைனா முந்திய தலைமுறையிடம் கேளுங்கள்..நெஞ்செல்லாம் பூரிப்பாக சொல்லுவாங்க.இது ஒரு நிலா முற்றத்தில் ஆடும் விளையாட்டு என்பதால் காதல் கதைகளும் கிடைக்கலாம்.
7 நிமிடங்களாக 4 ஆட்டங்கள் கொண்ட இந்த விளையாட்டில் தமிழ்நாடு,கர்நாடகா,மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி அணிகள் பலம் வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன.
இந்த விளையாட்டின் வரலாறு,விதிமுறைகள்,பற்றி மேலும் அறிய  இங்கே சுட்டுங்கள்.
தமிழக அணி


25ம் தேசிய அளவிலான ஜூனியர் ATYA PATYA 22-6-12 முதல்  25-6-12 ஜோத்பூரில் நடந்தது. அரையிறுதியில் மிகுந்த போராட்டத்திற்கு பின் வெற்றியை மகாராஷ்ட்ராவிடம் நழுவ விட்டது தமிழகம்.நடுவர் தமிழகத்துக்கு எதிராக ஆடியது போல தோன்றினாலும் அதற்க்கு வாய்ப்பு கொடுக்காமல் முழு திறமையையும் காட்டியிருந்தால் தமிழகம் கட்டாயம் வென்றிருக்கும்.
போராடிய தமிழகம்
முடிவில் இறுதி போட்டியில் ஆண்கள்,பெண்கள் இரு பிரிவிலும் புதுச்சேரி மகாராஷ்டிரா அணிகள் தகுதி பெற....முதலில் ஆடிய மகளிர் போட்டியில் புதுச்சேரிஅணிவேகமாகவும் விவேகமாகவும் எதிரணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

புதுச்சேரி அணி
ஆண்கள் பிரிவில் தொடை தட்டி நின்ற புதுச்சேரி ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிக்காட்டியது.காண கோடி கண்கள் வேண்டும்.பொறி பறந்த ஆட்டத்தில் புதுச்சேரி அணி ருத்ர தாண்டவமாடியது.

பாயும் புதுச்சேரி
ஆக்ரோசமான ஆட்டம் காட்டிய புதுச்சேரி அணியின் பசங்க தொடை தட்டி வீரம் காட்டிய போது கொப்புளித்த ஆவேசம் இன்னும் கண் முன்னால் நிற்கிறது.ஆண்கள் பிரிவிலும் புதுச்சேரி கோப்பையை தட்டி செல்ல .....கேக்கணுமா என்ன கொண்டாட்டத்திற்கு?எப்படியோ தமிழன் ஜெயித்தான்.

வெற்றி கொண்டாட்டத்தில் புதுச்சேரி
அரசு செலவில்,ஊக்கத்தில்  ஆடிய புதுச்சேரி அணிக்கு புதுச்சேரியில் நல்ல எதிர்காலம் உண்டு.தமிழக அணியின் வீரர்கள் எந்த SPONSORரும் இல்லாமல் பயண சீட்டு முதல் அனைத்துக்கும் கைக்காசு போட்டு வந்து ஆடவேண்டிய நிலையில் உள்ளனர்.ஆனந்திற்கு கொடுத்த கோடிகளில் கொஞ்சம் வளரும் விளையாட்டிற்கும் வீரர்களுக்கும் அரசு  செலவழித்தால் சர்வதேச அரங்கில் தமிழனும்,தமிழனின் விளையாட்டும் மிளிரும் என்பதில் சந்தேகமில்லை.ஆவண செய்யுமா தமிழக அரசு?

திருநெல்வேலியில்  ஜெயேந்திரர் பள்ளியில் மட்டும் உடற்பயிற்சி ஆசிரியர் திரு.பேச்சி முத்து அவர்களால் கற்று தரப்படுகிறது.நாம் நமது குழந்தைகளுக்கும் கற்று தரலாமே.கிரிக்கெட் மோகம் நமது அடையாளங்களை அழிப்பதை அனுமதிக்காமல் மண்ணின் விளையாட்டுகளுக்கு மதிப்பளிக்கலாமே.

பல விதமான விறு விறுப்பான நமது ஆட்டங்களை நாம் மறப்பது நாம் நம்மையும் நம் வரலாற்றையும் மறப்பதற்கு சமமானதாகும்.

உங்களுக்கு இந்த விளையாட்டு பிடிச்சிருக்கா?பிடிச்சிருந்தால் இங்கே வாங்க (தமிழ் நாடு ATYA PATYA முக நூல் பக்கம்). LIKE பண்ணுங்க.

தமிழீழத்தில்கிளித்தட்டு http://sathavathani.blogspot.in/2007/07/blog-post_06.html

காணொளி காண இங்கே சுட்டுங்கள்

SENOIRக்கான தேசிய  அளவிலான ATYA PATYA புதுச்சேரியில் ஆகஸ்ட் 17முதல்  19 வரை நடைபெறுகிறது.உறவுகள் நண்பர்கள் சகிதம் வருகை தந்து ஆதரவு கொடுங்கள்.

டிஸ்கி:நேரில் காணாமல் ஆட்ட முறைகள் புரிவது கடினமே என்றாலும் சுவராஸ்யமான ஆட்டம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

5 கருத்துகள்:

  1. nanpare!

    puthithaaka therikirathu!

    aam nam varalaaru marakka adikka padikirathu!
    pakirnthamaikku !

    nantri!

    பதிலளிநீக்கு
  2. தமிழர்கள் மறந்து போன தமிழனாய் இருக்கும் எனக்கும் தெரியாத ஒரு அருமையான தமிழ் விளையாட்டைப் பற்றி சொல்லி உளீர்கள். பக்கத்து மாநிலம் என்றாலும் தமிழன் ஜெயித்தது மகிழ்ச்சி என்று கூறியது மகிழ்ச்சி அண்ணா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....