Translate

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

லீலை- ஒரு அவசர விமர்சனம்.


காலேஜில் படிக்கும்போது தன் தோழிகளை உஷார் செய்து கழட்டிவிட்டவன் என்பதாலும் எதிர்பாராவிதமாக அவனுடன் போனில் பேசும்போது இவளுடைய கருணை மலர் என்ற பெயரை கலாய்த்ததாலும் முகம் தெரியா ஹீரோ கார்த்திக் மேல் செம காண்டு நம்ம நாயகி கருணை மலருக்கு.
                                  ரெண்டு வருசங்களுக்கு பிறகு வேற வேற பிரிவில் ஒரே சாப்ட்வேர் கம்பெனியில் ஆணி புடுங்குறாங்க.கூடவே மலருக்கு துணையா சந்தானமும் புடுங்கிறாராம்.இருவரும் மறுபடியும் ஒரு தவறான ஒரு போன் அழைப்பில் சண்டை வைய்ச்சிகிறாங்க.ஒருத்தரை ஒருத்தர் பாக்காமலே கயூவி கயுவி ஊத்தறாங்க. ஒரு நா கார்த்திக் அவளை பாத்துட்டு தக்காளி இவளை பாக்காம விட்டுடோமேனு வேற பெயரில் அறிமுகம் ஆகி உஷார் பண்ணுறாரு.அப்புறமா கயட்டி விட்டாரா ?இல்லை காதல் பண்ணினாரா? அப்புறம் தான்தான் கார்த்திக் சொன்னாரா??அதை மலர்  ஏற்றுகொண்டாளா? முடிவில் சந்தானம் எங்கே போனார்?அத்தனை கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால்.... தூங்கிட்டேன்.
                                       படத்தின் ஒரே ஆறுதல் நாயகி மட்டுமே..நன்னா நடிக்கிறா.சந்தானம் வழக்கம்போல நக்கலா பேசிட்டு போறாரு.அப்புறம் அவரும் காணாம போயிடுறார்.பாட்டு நல்லா இருந்தாலும் ஹிட் ஆகாது. வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.இயக்குனர் டிவி சீரியல் மாதிரி இழு இழு என்று கொல்கிறார்.
டிஸ்கி 1;இந்த படத்துக்கு நெல்லை பாம்பே தியேட்டரில் 50 ரூபாய் டிக்கெட்டை 80 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
டிஸ்கி 2; படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லனும்னா அந்த படத்தில் அதிகம் சொல்ற ஒரே வார்த்தையான... sorry .....அவ்வளவுதான்.

3 கருத்துகள்:

  1. // அத்தனை கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால்.... தூங்கிட்டேன். //

    அவசரமான விமர்சனம் இல்லை அருமையான போதுமான அளவு விமர்சனம்.

    உங்களிடம் ஒரு கேள்வி கடந்த பத்து நாட்களாக உங்களைக் காணவில்லை. நீங்கள் இல்லாமல் வலைப் பூ ஏங்கிக் கொண்டிருந்ததது. உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

    மீண்டும் எல்லைப் படை அனுபவங்களை எழுதுங்கள் காத்திருக்கிறேன்

    அன்பு தம்பி சீனு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பாஸ் ,இப்ப லீவுக்கு வந்துருக்கேன்.ஒரு வாரமா சென்னை,கர்நாடகா னு ஒரே ரவுண்ட்.இனி தினமும் பார்க்கலாம்.இணைந்திருப்போம்.

      நீக்கு
    2. neenga free anathum ennudaiya pathivugalaip padinga....ungal karuthukalukkaga kathirukiren.....enjoy ur holidays na....

      நீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....