Translate

சினிமா விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 அக்டோபர், 2012

பக்கோடா பாண்டி,பிருத்வியின் Aiyaa - இந்திப் பட விமர்சனம்

பிரித்விராஜ்,ராணி முகர்ஜி,மற்றும் நம்ம பகோடா பாண்டி நடித்த அய்யா படம் தமிழர்களை கேவலப்படுத்துவது போல வந்திருந்த ட்ரைலரினால் கடுப்போடு காத்திருந்து வெளிவந்த அன்றே பார்த்து தொலைத்தப் படம் ....படம் எப்ப முடியும் என்ற ஆவலை தூண்டும் அளவிற்கு படு கேவலமா இருந்ததால் வேறு எதையும் கவனிக்க அவசியம் இல்லாமல் போய் விட்டது.

கனவுலகில் சஞ்சரிக்கும் நடுத்தர வீட்டு குத்துவிளக்கு மீனாக்ஷி சினிமா போலவே வாழ்க்கையையும் வாழ நினைக்கும் பாத்திரம்.காதலித்து கல்யாணம் செய்ய நினைக்கிறார். ....தென்னிந்திய சூர்யாவை அவர் மேல் உள்ள மணத்தினாலே மோந்து மோந்து ஒரு தலையா காதலிக்கிறார்.அவரின் எதிர்ப்பதமான பிராமண பெற்றோரோ ஒரு எதார்த்தமான மாப்பிளையை தேடி நிச்சயக்கின்றனர்.ராணி சூர்யாவோடு சேர்ந்தாரா?செத்தாரா?இல்லை வீட்டினர் பார்த்த மாப்பிளையை  கைப்பிடித்தாரா? இவற்றை நீங்கள் படம் முடியும் வரை இருந்து பார்க்க முடிந்தால் நீங்கதான் சாமி "அய்யா"

ஒரே வள வள பளா பளா வசனங்கள்.கொலையா கொலை பண்ணுறாங்க......ராணி முகர்ஜி பெரிய கண்ணாடி போட்டு பழைய நாயகிகளை நியாபகபடுத்துகிறேன் என்று படுத்துகிறார்.முதல் பாட்டில் போடும் கெட்ட ஆட்டத்தில் மொத்த வயதையும் காட்டுகிறார்.இத்தனை வயசுலேயும் நம்ம ஜோதிலட்சுமி என்னாஅழகு?

படம் முழுக்க மோப்ப நாய் மாதிரி மோந்து பார்த்துட்டே இருக்கிறார் ராணி.அவருக்கு தமிழ் சொல்லி கொடுக்க நம்ம பக்கடோ பாண்டி.பாண்டியும் பிரித்வி ராஜும் அவங்களுக்குள்ளே தமிழ்ல ரெண்டே வசனம் பேசுறாங்க அதுவும் செம செயற்கையா இருக்கு.

பிருத்வி ராஜ் வால்டர் வெற்றிவேல் கணக்கா முறைப்பா திரிகிறார்.பாவம் படம் முடியும்போது ரெண்டு மூணு வசனத்தை பேச விட்டுருக்காங்க.மிச்ச நேரம் முழுசும்  மௌனமா கர்மமா இருக்கிறார்..பாட்டுல சிக்ஸ் பேக் காட்டுகிறார்.

ராணியே ஒரு லூசு கேரக்டர் கூடவே அதையும் மீறிய லூசா அவர் கூட வேலை பார்க்கிற லேடி காகா பொண்ணு ஒன்னு.கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம அவரின் தெற்றுப்பல் முகத்தை  விகாராமாக்கி அவரை காமெடி என்ற பெயரில் அசிங்கமும் ஆபாசமுமாய் ஆட விட்டுள்ளார்கள்.கடுமையான கண்டனங்கள்.

மிட் நைட் மசாலா பார்த்தால் தமிழ் படிக்கலாம்னு பாண்டி கொடுக்கிற ஐடியாவினால் ஒரு சில்க் ஸ்மிதா சீனை காட்டி விட்டு ட்ரீமமம் வேக்கப்பம்னு வெங்காய பாடல் ஒன்றை  வலிந்து திணித்துள்ளனர்.

சில இடங்களில் ஆபாசம் ஆபாசம் ஆபாசம்.....ஜான் ஆபிரகாமின் போட்டோவை காட்டி இந்த ஜட்டி இன்னும் கீழே கொஞ்சம் இறங்கினால் நல்லா இருக்கும்.....அப்பட்டமான ஆபாசம்.பெட்ரோல் போடும் பைப்பையும் தெறித்து விழும் பெட்ரோலையும்....இரட்டை அர்த்த காட்சிகள்.

காமெடி படமா? காதல் படமா? ஒரு சராசரி கனவு காணும் பெண்ணின் மனதா? என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை.இல்லைனா சொன்னது எதுவும் இந்த பாமர ரசிகனுக்கு புரியவில்லையா?.உலக சினிமா ரசிகன்தான் பார்த்து சொல்லணும்...

அவங்கவங்க அவங்கவங்க வேலையை சரியா செய்தாலும் திரைக்கதையும் ,வசனங்களும் காலை வாருகின்றன.மாபெரும் குறிப்பு என்னவென்றால் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் நேசனல் அவார்ட் வாங்கியவராம்.அவரை சுதந்திரமாக இயக்க விட்டிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

 மொத்தத்தில் பார்த்தால் aiyaa - "ஐயையோ " பைசா வேஸ்ட்.



சனி, 23 ஜூன், 2012

ROWDY RATHORE -ஒரு சிறுத்தை பார்வை

"ROWDY RATHORE" நம்ம சிறுத்தயோட ஹிந்தி படம்.ஏற்கனவே நம்ம ஊருல மற்றும்  தெலுங்கு தேசத்துல இறங்குற அடி தடி மசாலா படத்தையெல்லாம் இந்தி சேனல்கள் தாறுமாறா டப் பண்ணி ஹிட்டடிக்க அப்பத்தான் புரிஞ்சிருக்கும் போல நம்ம ஊரு மசாலா தோசை மட்டுமில்லை மசாலா படமும் நல்லாத்தான் இருக்குதுன்னு.

சிறுத்தை படம் பாத்து புண்ணாயிருந்த நான் என்ன விலை கொடுத்தாலும் ரவுடி ரதோர் பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணினாலும் விதி, வேல் குத்தி கொடை புடிச்சி வெட்ட வெளில வெளிக்கி போற மாதிரி கொண்டு போய் தியேட்டருல கொண்டு போய் விட்டுருச்சு.

கதை என்னானா?.......அதுல்லாம் தேவையே இல்லை.பாட்டுக்கு நாயகி இருக்காங்க..நாயகிக்கு நாயகன் இருக்காரு..நாயகன் கூட சண்டை போட வில்லன் இருக்காரு..அவ்ளோதான்.ஆனா சிரிப்பு காட்ட சந்தானம் இல்லை...அதுதான் காஞ்ச புண்ணை கெளரி விட்டுருச்சு.

அக்சய் குமாரை வைத்து பிரபு தேவா இயக்கம் என்பதால் கொஞ்சம் தைரியமாகத்தான் இருந்தேன்.டைட்டிலில் இளையதளபதி விஜய்க்கு நன்றி போடும்போது கொஞ்சம் ஜெர்க்கானாலும் பாட்டுதானே பரவாயில்லை சமாளிச்சிடலாம்னு நம்பி உட்காந்தா சந்தடி சாக்குல பாட்டுலே விஜயை சூப்பர் ஸ்டார்னு பிரபு தேவா இன்ட்ரோ கொடுக்குறாரு...அடிங்கொய்யால யாருகிட்ட ...அது என்ன பச்ச புள்ளைங்க பட்டம் விடுற பவர் ஸ்டார் பட்டமா என்ன?சூப்பர் ஸ்டாருடா! 2000கிலோ மீட்டர் தள்ளி வந்தும் விஜய் தொந்திரவு தாங்க முடியலை..

இந்த  கொடுமை முடிஞ்சு நம்ம சந்தானம் இடத்துக்கு யார் வர்றான்னு பார்த்தா பய புள்ள பொருத்தமே இல்லை.அந்த பயலுக்கு  பதிலா காட்டு பூச்சி இடத்துக்கு காட்டு பூச்சி சந்தானத்தையே போட்டுருக்கலாம்.வாயுள்ள பூச்சி கட்டாயம் பொலைச்சிருக்கும்.சந்தானம்தான் இல்லை... காமெடி?சிறுத்தைக்கு பலமே அதன் பலமான கால்கள்தான்..அதாவது காமெடி.அந்த காலையே ஓடிச்சி போட்ட மாதிரி அங்கங்கே ஒரே காமெடி வெட்டு.மயில் சாமி காமெடி கிடையாது,ஆனா மெனக்கெட்டு வேணாம் அழுதுருவேன் வடிவேல் காமெடிய சேத்துருக்காங்க.

நம்ம நாயகன் வேற நம்ம விஜய்  மாதிரி ஆடுறேன்னு கொடுமை படுத்துராறு.இப்பதான் நம்ம கார்த்தியோட அசட்டு சிரிப்பு  பெருமைலாம் புரியுது.ராக்கெட் ராஜா பாட்டுலாம் சிரிச்சிகிட்டே இருக்கலாம்.இந்தில தேவை இல்லாம அரை குறை ஆடைகளுடன் பொண்ணுங்களை ஆட விட்டு அலங்கோலம் பண்ணிருக்காரு பிரபு தேவா ."சின்காக்கா சின்க்கா சிங்க்கா"இந்த வசனம்{????) படம் முழுக்க வருகிறது.கூடவேஅதுக்கு அர்த்தமில்லாமல் அர்த்தம் கொடுத்து அநர்த்தனம் ஆடுகிறார்கள்.

சிறப்பு என்றால் அது தமிழை விட இந்தியில் ஆக்சன் நல்லா இருக்கிறது.போக்கிரியின் இந்தி படமான WANTEDடில் ப்ளஸ்னா அது ஆக்சன்தான். அதே மாதிரிதான் இதிலேயும்..பிரபு தேவா மெனக்கிட்டிருக்கார்.
பிரபு  தேவா செய்த ஒரு புத்திசாலித்தனமான வேலை என்னனா தியேட்டருக்குள்ளே போகும் முன்னேயே வால்போஸ்டர் மூலமா இது ஒரு 1980 கால மசாலா படம்னு எபக்ட் கொடுத்து எவனையும் லாஜிக் பத்தி பேச விடாம பல்ப் கொடுத்ததுதான்.(அதனாலேயே IT பார்க் சீன் கட்?).

நாயகியை பத்தி சொல்லாமலா?கார்த்தி இடுப்பை கிள்ளுறேன்னு எலும்பை கிள்ளுவார்.இதுல இடுப்ப கிள்ளுதேன்னு அக்சய் குமார் டயரை திருகுகிறார்...ஆமாங்க அவ்ளோ பெரிய இடுப்பு...

இந்த படம் இப்படி தாறு மாறா ஓடுதுனா நம்ம தமிழ்பட இயக்குனர்களின் திறமையா?நம்மை விட முட்டாளாய் மாறும் வடக்கத்தி மக்களின் ரசனையா? காமமும்,காதலும்  உள்ள படம் வந்த வடக்கில் நம்ம  மசாலா படங்கள் மாற்றாய் இருப்பதை விட காதல்,வ எண்,ராட்டினம்,களவாணி,அழகர்சாமி குதிரை இப்படி பல படங்களை வடக்கு சூழலுக்கு ஏற்றார் போல மாற்றி கொடுக்கலாமே..உடனே பிடிக்கலைனாலும் பாக்க பாக்க பிடிக்கலாம்தானே?

அக்சய் குமார் சிரிக்கும் போதெல்லாம் அநியாயத்திற்கு பவர் ஸ்டார் பறந்து வந்து யாருடா அவன் என்னைய போலன்னு அருவா காட்டுறாரு.பவர் ஸ்டாருக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு.நம்ம ஊருல மசாலா வடைகளும்,தோசைகளும் அதிகம் என்பதால் அவரு பேசாம இந்த சீசன்ல வரிசையா ஒரு நாலு படத்தை ஹிந்தில தட்டி விட்டா சூப்பரா பார்ம் ஆயிடலாம்.அப்புறம் என்ன?காபி வித் கரண்தான்.கோபில்லாம் அண்ணாந்து பாப்பாரு.




கட்ட கடைசியா சீரியஸா ஒரு விஷயம்...ரதோர் என்பது ஒரு ஜாதியின் பெயர்.அது ஒரு ரவுடி பெயருக்கு பின் வந்ததை யாரும் ஆட்சேபிக்கவில்லை.ரவுடி ஜாதி என்பதில் பெருமை கொள்கிறார்களா?இல்லை கண்டுக்காம விட்டாங்களா?வடக்கில் எவ்வளவு படிச்சாலும் ஜாதி பெயரை வைசிக்கிட்டுதான் சுத்துறாங்க.அதையாரும் கேட்க்கிரதில்லை.பிரணாப் "முகர்ஜி",மம்தா "பானர்ஜி",அசோக் "கெலாட்" இப்படி நிறைய சொல்லலாம்.நாளைக்கு முதல் குடிமகனாகும் வாய்ப்பு உள்ள பிரணாப் இன்னும் தன் ஜாதி பெயரை விட வில்லை.


டிஸ்கி:இந்த விமர்சனம்..ஒப்பிடு.. இதுவே இவ்வளவு கொடுமைனா அப்ப படம் எப்படி இருந்துருக்கும்?

வெள்ளி, 18 மே, 2012

ஸ்ரீதர்-மன்னிக்கவும்.

ஸ்ரீதர் புகழ் பெற்ற இயக்குனரின் பெயரில் வந்திருக்கும் படம்.அதனாலேயே நானும் ராட்டினம் போகாமல் இந்த படத்திற்கு சென்றேன்.கதை என்னானா ஸ்ரீதரும் ஸ்ரீதேவியும் சின்னதுலே இருந்தே நல்ல நண்பர்கலாம்லே..அவுக ரெண்டு பேருக்குமே காதல் ஜோடியும் இருக்குலே.இந்த பயபுள்ளைக நப்பு ரொம்பவே கூடுதலா இருக்குதுனால அவிங்க காதலருங்க கடுப்பாயி ஒனக்கு நான் வேணுமா அவ அவன் வேணுமா?இந்த பாட்ஷாவா அந்த அண்டனியானு கேட்டு தொலைக்க .....நட்பா?..... காதலா?  பார்த்தாவா ?மீராவா?
                          சித்தார்த்தும் ஸ்ருதி ஹாசனும் நண்பர்கள். அவர்களின் காதலர்களாக ஹன்ஷிகா, நவ்திப்.முதல் பாதியில் இருவர் நட்பு ,ஹன்ஷிகா காதல் என்று செல்கிறது.இரண்டாம் பாதியில் நவ்திப் வர பிரச்சனைகள் வெளிப்படையாக விரிகிறது
.படம் மெதுவாக நகர்கிறது.சித்தார்த்தும்,ஸ்ருதிஹாசனும் பேசுகிறார்கள்,பேசுகிறார்கள்,பேசுகிறார்கள்,பேசுகிறார்கள்,பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.காதலை,நட்ப்பை பற்றி பாடம் எடுக்கிறார்கள்.
 ஒளிப்பதிவு பற்றி எழுதுற அளவுக்கு நமக்கு அறிவு பத்தாது.பாட்டு கேட்பதாலே இசை பற்றி சொல்லனும்னா ராகுல் ராஜ் எனும் புது இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். கதாநாயகன் ஒரு கிட்டார் வாசிப்பவன் என்பதால் முதல் பாடலில் முதலில் வரும் கிட்டார் இசை மற்றும் சிம்பு பாடும் ஒரு பாடல் மட்டும் தேறும்.பின்னணி இசை மணி சர்மா...சூரிய வம்சம் நினைவுக்கு வருகிறது.இசை போட்டியில் பாட போகும் பாட்டு எப்படி இருந்திருக்க வேண்டும்?ஏமாற்றமே மிஞ்சுகிறது.
கிட்டத்தட்ட அழாமல்  தொலைக்காட்சி நாடகம் பார்த்தத்து போல தோனுகிறது.


 இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் இயக்குனரே....





நாராயணா, இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைடா....








ஞாயிறு, 6 மே, 2012

இழுத்தடிக்கும் வழக்கு எண்18/9

வழக்கு எண் 18/9   மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சென்று பார்த்த படம்.முழுமையாக நம்மை கட்டிபோடுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது.
                             ஒரு அருமையான கதை. அதுவும் சாதாரணமான பத்திரிக்கை பெட்டி செய்தியை எடுத்து கொண்டு  அதன் மூலத்தை தொட்டு காட்டும் கதை.நடை பாதை கடையில் வேலை பார்க்கும் வேலு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்க்கும் ஜோதியை காதலிக்கிறான்.இது முதல் பாதி.ஜோதி வேலை பார்க்கும் வீட்டில் உள்ள ஆர்த்தியை அதே குடியிருப்பில் வசிக்கும் விடலை தினேஷ் கரெக்ட் செய்து மொபைலில் படம் எடுத்து தன் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வது இரண்டாம் பாதி.ஆர்த்திக்கு உண்மை தெரிய வர தினேஷை தவிர்க்கிறாள்.கோபப்படும் தினேஷ் ஆர்த்தியின் மேல் ஆசிட் வீச முயற்சிக்க அது தவறுதலாக ஜோதியின்  முகத்தில் விழுகிறது.காவல்துறை வேலுவை சந்தேகப்பட ஆர்த்தி தினேஷை பற்றி காவல்துறையிடம் சொல்ல கைது செய்யப்படும் தினேஷ் கடைசியில் காவல்துறையினால் தப்ப வைக்கப்பட்டு வேலுவை பலியாக்குகிறது. உண்மை தெரிந்து ஜோதி என்ன செய்கிறாள் என்பது முடிவு.....
                                  முதல் பாதியில் இதோ இப்போது கதை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து சற்றே ஏமாந்த நிலையிலும் பாலாஜி சக்திவேல் மேல் உள்ள நம்பிக்கையில் காத்திருக்க  ஒரு சஸ்பென்ஸ் வசனத்தோடு இடைவேளை விடுகிறார்கள்.மச்சான் இனிமேதான் படமே இருக்குதுன்னு பார்த்தாக்க முதல் பாதி மாதிரியே இரண்டாம் பாதி.
                               
           இயக்குனர், புதுமுகங்கள் அனைவரையும் நன்றாக நடிக்க வைத்துள்ளார்.அவசியம் இல்லாமல் பாடல் இல்லை என்பது வரவேற்க்கத்தக்கது.இருவர் கதைகளையும் சேர்க்கும் திரைகதை அமைப்பு ரசிக்க வைக்கிறது.இன்ஸ்பெக்டர் பாத்திரம் மிக மிக யதார்த்தம்.
                               வழக்கமான மோதல்,காதல் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.மிக மெதுவாக செல்லும்  படம் நம் எதிர்பார்ப்பை எகிறவைத்து ஒன்றும் இல்லமால் போவதால் சற்றே கடுப்பேத்துகிறது.காதல் படம் போல எதிர்பார்த்து போவது உங்க தப்பு என்றால் சுவரொட்டியில் காதல் இயக்குனர் என்று நம்மை அழைத்தால் நாம் என்னதான் செய்வது?
                             
                               வயசு பொண்ணுங்களும்,பசங்களும்,அவங்க பெற்றோர்களும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.ஆண்,பெண் நட்பு பற்றி கவலைப்படும் பெற்றவர்களை கிண்டலாகவும்,அவமானமாகவும் பார்க்கும் பொண்ணுங்க,பசங்களுக்கு யதார்த்தத்தை தந்துள்ளார் இயக்குனர்.
                            மற்ற படி பெரிய பெரிய அப்பா டக்கர்   பதிவர்கள் சொல்ற மாதிரி ஒலக சினிமா ஈரான் சினிமான்னு சொன்னா..... ஐயா சாமி, இதை போல் நம் தமிழ் சினிமா எத்தனையோ  படங்களை தந்துள்ளது.ஒரு தடவைதான் போய் பாருங்களேன்...ரெண்டாவது தடவை பார்க்கிற மாதிரி இருந்தால் இது ஹிட் படம்,இல்லைனா ஒரு நல்ல படம் அவ்வளவுதான்....

டிஸ்கி:.வட்டி கொடுமை,கொத்தடிமை,விபசார பாத்திரம்,காதல்,செல்போன் ஆபத்துக்கள்,கூத்தாடிகளின் கஷ்டம்,பழி வாங்குதல் என்று படத்தில் எவ்வளவோ இருந்தும் எதுவும் மனசில் நிற்கவில்லை என்பதுதான் உண்மை.