Translate

வழக்கு எண்18/9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழக்கு எண்18/9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 மே, 2012

இழுத்தடிக்கும் வழக்கு எண்18/9

வழக்கு எண் 18/9   மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சென்று பார்த்த படம்.முழுமையாக நம்மை கட்டிபோடுகிறதா என்று பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது.
                             ஒரு அருமையான கதை. அதுவும் சாதாரணமான பத்திரிக்கை பெட்டி செய்தியை எடுத்து கொண்டு  அதன் மூலத்தை தொட்டு காட்டும் கதை.நடை பாதை கடையில் வேலை பார்க்கும் வேலு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்க்கும் ஜோதியை காதலிக்கிறான்.இது முதல் பாதி.ஜோதி வேலை பார்க்கும் வீட்டில் உள்ள ஆர்த்தியை அதே குடியிருப்பில் வசிக்கும் விடலை தினேஷ் கரெக்ட் செய்து மொபைலில் படம் எடுத்து தன் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வது இரண்டாம் பாதி.ஆர்த்திக்கு உண்மை தெரிய வர தினேஷை தவிர்க்கிறாள்.கோபப்படும் தினேஷ் ஆர்த்தியின் மேல் ஆசிட் வீச முயற்சிக்க அது தவறுதலாக ஜோதியின்  முகத்தில் விழுகிறது.காவல்துறை வேலுவை சந்தேகப்பட ஆர்த்தி தினேஷை பற்றி காவல்துறையிடம் சொல்ல கைது செய்யப்படும் தினேஷ் கடைசியில் காவல்துறையினால் தப்ப வைக்கப்பட்டு வேலுவை பலியாக்குகிறது. உண்மை தெரிந்து ஜோதி என்ன செய்கிறாள் என்பது முடிவு.....
                                  முதல் பாதியில் இதோ இப்போது கதை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து சற்றே ஏமாந்த நிலையிலும் பாலாஜி சக்திவேல் மேல் உள்ள நம்பிக்கையில் காத்திருக்க  ஒரு சஸ்பென்ஸ் வசனத்தோடு இடைவேளை விடுகிறார்கள்.மச்சான் இனிமேதான் படமே இருக்குதுன்னு பார்த்தாக்க முதல் பாதி மாதிரியே இரண்டாம் பாதி.
                               
           இயக்குனர், புதுமுகங்கள் அனைவரையும் நன்றாக நடிக்க வைத்துள்ளார்.அவசியம் இல்லாமல் பாடல் இல்லை என்பது வரவேற்க்கத்தக்கது.இருவர் கதைகளையும் சேர்க்கும் திரைகதை அமைப்பு ரசிக்க வைக்கிறது.இன்ஸ்பெக்டர் பாத்திரம் மிக மிக யதார்த்தம்.
                               வழக்கமான மோதல்,காதல் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.மிக மெதுவாக செல்லும்  படம் நம் எதிர்பார்ப்பை எகிறவைத்து ஒன்றும் இல்லமால் போவதால் சற்றே கடுப்பேத்துகிறது.காதல் படம் போல எதிர்பார்த்து போவது உங்க தப்பு என்றால் சுவரொட்டியில் காதல் இயக்குனர் என்று நம்மை அழைத்தால் நாம் என்னதான் செய்வது?
                             
                               வயசு பொண்ணுங்களும்,பசங்களும்,அவங்க பெற்றோர்களும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.ஆண்,பெண் நட்பு பற்றி கவலைப்படும் பெற்றவர்களை கிண்டலாகவும்,அவமானமாகவும் பார்க்கும் பொண்ணுங்க,பசங்களுக்கு யதார்த்தத்தை தந்துள்ளார் இயக்குனர்.
                            மற்ற படி பெரிய பெரிய அப்பா டக்கர்   பதிவர்கள் சொல்ற மாதிரி ஒலக சினிமா ஈரான் சினிமான்னு சொன்னா..... ஐயா சாமி, இதை போல் நம் தமிழ் சினிமா எத்தனையோ  படங்களை தந்துள்ளது.ஒரு தடவைதான் போய் பாருங்களேன்...ரெண்டாவது தடவை பார்க்கிற மாதிரி இருந்தால் இது ஹிட் படம்,இல்லைனா ஒரு நல்ல படம் அவ்வளவுதான்....

டிஸ்கி:.வட்டி கொடுமை,கொத்தடிமை,விபசார பாத்திரம்,காதல்,செல்போன் ஆபத்துக்கள்,கூத்தாடிகளின் கஷ்டம்,பழி வாங்குதல் என்று படத்தில் எவ்வளவோ இருந்தும் எதுவும் மனசில் நிற்கவில்லை என்பதுதான் உண்மை.