Translate

திங்கள், 13 ஏப்ரல், 2015

ஜாலியன் வாலாபாக் நினைவு தினமும் இணைய நீதிபதிகளும்

நல்லவேளை அன்றே செத்தீர்கள்!
இன்றைய இணைய நீதிபதிகளின்
குறுக்கு வெட்டு ஆராய்ச்சிகள் 
ஜெனரல் டயரை விட காட்டமானவை...

உனக்கேன் சுதந்திரம் ?
வாலாபாக் என்ன லாலாகடையா?
அங்கே சுதந்திரம் என்ன அல்வாவா?
ஏன் சென்றாய் கொழுப்பெடுத்து?

உயிரை கொடுக்க சென்றபின்
ஓலமென்ன?
காந்திக்குத்தான் அறிவில்லை ...
உங்களுக்கெங்கே போச்சு அறிவு?

சாவது உறுதியான பின்னும்
போரிட்டா செத்தீர்கள் கோழைகளா?
உண்மைய சொல்லுங்கள்
தூர்வாரத்தானே கிணற்றில் குதித்தீர்கள்?

உழைக்க மாச்சப்பட்ட உங்களுக்கு
சம்பளம் யார் கொடுத்தால் என்ன?
சோம்பேறி கூட்டத்திற்கு
டயர் தந்த சம்பளம் சரிதானே ...

நானா சுமக்க சொன்னேன் என்ற
அறிவார்ந்த கேள்வியோடு
பெற்றவளை பலி போடும் சமூகத்தில்
வாழாது இறந்ததே நலம் உங்களுக்கு ..

நல்லவேளை அன்றே செத்தீர்கள்
இன்றைய இணைய நீதிபதிகளின்
குறுக்கு வெட்டு ஆராய்ச்சிகள்
ஜெனரல் டயரை விட காட்டமானவை
இரக்கமற்றவை ....

9 கருத்துகள்:

  1. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை (சூட )ஈட்ட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  2. சரி தான்... தேவையில்லாத ஆராய்ச்சிகள் சரி தான்...

    பதிலளிநீக்கு
  3. என்னத்த சொல்ல ? இப்போலாம் ராமலிங்க அடிகளார்தான் உலகிலேயே தலைசிறந்த சீர்திருத்தவாதியா என் கண்ணுக்குத்தெரியிறார் . இப்படியெல்லாம் படிக்கும்போதுதான் ஏன்டா மனிதனா பிறந்தோம்னு தோனுது . இவ்வளவு அசிங்கம்பிடித்த மனித இனத்தைக்காட்டிலும் சேற்றினில் ஊறித்திரியும் பன்றியாக பிறக்கவே விரும்புகிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதாபிமானமற்ற குறைந்த பட்ச கருணை கூட இல்லாதவர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம் நண்பா ...வருகைக்கு நன்றி திருமுருகன்

      நீக்கு
  4. கவிதை சிறப்பாக இருக்கிறது... தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் ஆழமாய் மனதினுள் பதியும்... அடுத்தடுத்த கவிதைகளில் சொற்களில் கவனம் கொள்ளுங்கள் ப்ரோ... படித்து முடிக்கையில் வாசகனை ஓங்கி பொடனியில் சாத்தியது போன்ற உணர்வை தரவேண்டும் என்பது என் ஆசை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய இணைய நீதிபதிகளின்
      குறுக்கு வெட்டு ஆராய்ச்சிகள்
      ஜெனரல் டயரை விட காட்டமானவை...

      அதான் பொடனியில் ஆரம்பத்துலயே ஒரே போடா போட்டு 6சரோட ஆரம்பிச்சிருக்காரே ப்ரோ..
      அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....