1999ம் ஆண்டு இதே ஜூலை 23ம் தேதி அன்றாடங்காய்ச்சியின் அடுப்பெரிய,
அரைப்பிடி அரிசி வாங்கி ஆக்கித்தின்ன ஒரு படி
ஏறி கூலி ஏற்றி கேட்டு மாஞ்சோலையில் கிளம்பி
திருநெல்வேலியில் கூடியது உழைக்கும் வர்க்கம். கூலி உயர்வு கேட்டு குமுறிக்கிளம்பியது தேயிலை தோட்ட தொழிலாளர் கூட்டம்.
போராட்டத்தின் குரல்கள்
வலிமையானவை.ஏனெனில் அதில் நியாயமிருந்தது.அதன் வீச்சு உண்மையை சற்று உரக்கவே
சொன்னது.உயர்த்தி பிடிக்கப்பட்ட பாதகைகள் கேட்ட கேள்விகள் ஆளும் அரசின்
குமட்டிலும்,இயக்கும் முதலாளிகளின் கண்களிலும் குத்தின.இது போதாதா வன்முறை
என்று என்று அடையாளப்படுத்த?
ஒரு கல் இல்லை ஒரு சொல்...இப்படித்தான்
கலவரம் ஆரம்பமாம்.
ஒரு பேரணி அறிவிக்கப்படா போராகி போனது. ஓடி ஒளிய வகையில்லா
நதிப்பாலத்தில் கணுக்கால் சதையினை பிய்த்து பார்த்தன லத்திகள்,தப்பிக்க நினைத்து பரணியில் குதித்து பரிதாபமாய் செத்தது பாட்டாளி
வர்க்கம். சாகடித்தது அதிகார மூர்க்கம்.
அடாவடி அரசின் அசுர தாக்குதலில்
தெறித்து ஓடும் கால்களின் செருப்புகளை போல அறுந்து விழுந்தது உயிர்கள்.குளித்தெழுந்த
நதியிலே கொலையாகி போனார்கள். நதிக்கரை நாகரிகம் நகரத்தின் மையத்தில் மூச்சடைக்கப்பட்டது.
ஆயிரம் காவல்துறையினர் காவல் காத்தனர் அப்பாவி மக்கள் தப்பி ஓடாமல் சாவைத்தழுவ. ஒன்னரை வயது பாலகன் விக்னேஷ் முதல் பதினேழு உயிர்களை பலி வாங்கி கொண்டது அரசப்பயங்கரவாதம்.
கலெக்டரை காண வந்தவர்களை கடவுளிடமும் ஹாஸ்பிட்டலுக்கும் அனுப்பியது
கயவர் துறை.பதினேழு உயிர்களை பரணியிலும் அவர்களின் குடும்பங்களை நடுத்தெருவிலும்
கொண்டு வந்து நிறுத்தியது முடிவு.
அத்தனை உயிர்களின் சமாதியின் மேலே கேட்கப்பட்ட கூலி உயர்த்தப்பட்டது.போராட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர் தொழிலாளர்கள். இன்னும் கொல்லப்பட்ட ஒன்னரை வயது விக்னேசுக்கு நீதிதான் கிடைக்கவில்லை.இருந்திருந்தால் இன்று பரீட்சைக்கு படித்துக்கொண்டிருப்பான்.
அத்தனை பேரின் கொலை சுமந்தும் இன்னும்
மவுனமாக சொகுசு கார்களை கடத்திக்கொண்டிருக்கிறது அந்த நதிப்பாலம்.
இரட்டை நகரங்களை இணைக்கும் நூறாண்டு பெருமைக்குரிய சுலோச்சனாவின் அந்தப்பாலம் இப்போதெல்லாம் நீண்ட பெரும் கல்லறையாக மட்டுமே தெரிகிறது.
மேலும் தாமிரப்பரணி படுகொலைகளின் முழு விபரமறிய சுட்டுங்கள் இங்கே சுட்டுங்கள் இங்கே
| Tweet | |||||







கொடுமையான சம்பவம்! நினைத்து பார்க்கையிலேயே தீயாய் சுடுகின்றது!
பதிலளிநீக்குவரிகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
நீக்குஐயோ... வேதனை தரும் பின்னணி...
பதிலளிநீக்குமுகநூல் கல்லறை விட்டு "தம்பி" அவ்வப்போதாவது இங்கே மாளிகை கட்டட்டும்... நன்றி...
பதிலளிநீக்குகட்டாயம் அண்ணா.,.. நன்றிண்ணா
நீக்குஇன்னும் அதிகமான தகவல்களை எதிர்பார்த்து வந்தேன் ப்ரோ .. என்னை ஏமாற்றியது பதிவு ... தகவல்களை அதிகப்படுத்தி போட்டோக்களை குறைத்து பதிவிடுங்கள்..
பதிலளிநீக்குஓகே அரசா... ஒரு அவசரப்பதிவு இது.அதனால்தான் தகவல்கள் நிறைந்த பதிவின் லிங்க் கொடுத்தன் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றிய்யா
நீக்குமிகவும் துயரம் தோய்ந்த சம்பவம். கொடுமையிலும் கொடுமை! பார்பேரியன் நிகழ்வு..
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அண்ணா ..
நீக்குஇதில் அரசியல் ஏதும் இருந்து இருக்குமோ? பாலத்தை கடக்கும் ஒவ்வொரு சமயமும் இந்த சம்பவம் நினைவுக்கு வந்து வருத்தம் அளிக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதங்களின் வலைதளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html
நன்றி
சாமானியன்