உங்களுக்கும் எனக்கும்
பொருந்தாத எழுத்தெல்லாம்
இரைந்து கிடக்கிறது
காதலாக ... நட்பாக ....
நூறாவது பதிவில், முதல் பதிவின் முந்தைய பக்கத்தை பதித்து பார்க்கிறேன் இங்கே...
ஆட்களும் அறியாது, ஆங்கிலமும் தெரியாது,கணினியும் புரியாது தளம் காண களம் இறங்கி மேளம் கொட்டியதில் பிறந்ததுதான் இந்த 'தம்பி'.

எனது இணைய கூட்டின் ஒவ்வொரு இழையிடமும் எம்மொழியில் கேட்டாலும் தமிழ் மொழியில் சொல்லும் பிளாக்கர் நண்பன் பாசித் பெயரை. அப்துல் பாசித் என்ற அந்த அடக்க உருவத்தின் தமிழ் வழி வழிகாட்டல் பதிவுகள் இல்லையெனில் முதல் எழுத்தே முற்றுப்புள்ளியாக முடிந்திருக்கும்இந்த தம்பிக்கு.
கட்டிய கூட்டில் கலவி செய்ய இயலாமல் கலவரம் செய்தது தமிழ் மொழி தட்டச்சு.கவுரவ நாயகனாய் அதற்கும் விடை தந்தது கற்போம் தளத்தின் தமிழில் டைப் செய்வது எப்படி என்ற பதிவு. நம்புங்கள் என்னை விட மேற்படிப்பு படித்து ஆங்கிலம் கதைக்கும் பலருக்கு தமிழில் எழுத வழிகாட்டுகிறேன் கற்போம் தளத்தின் இந்தப்பதிவின் மூலம் மூலம்.
அந்த ஒல்லிப்பிச்சான் கற்போம் பிரபு கிருஷ்ணா காட்டிய வெளிச்சத்தில்தான் இன்று ரௌத்திரம் பழகுகிறான் இந்த தம்பி.
'கன்னி'ப்பதிவு என்பதாலோ என்னவோ முதல் பதிவில் கை குலுக்கி இந்த தம்பியின் கைப்பிடித்து நடந்து, கை காட்டி திருத்தி , கை கொடுத்து அறிமுகங்கள் செய்து ,கை தட்டி பாராட்டி என தம்பியின் பயணத்தில் இன்றும் இறக்'கை'யாக இருக்கும் திடங்கொண்டு போராடும் சீனுவின் கை என்பது கையல்ல...தம்பியின் பலமாகும்.
முகவரி கொடுத்த இந்த மூவரையும் பதிவுகளாகத்தான் அறிவேன். அதன் பின் சென்னையின் ரோட்டோரக்கடையில் ஒன்றாக இட்லி சாப்பிடும் அளவுக்கு இணைத்தது இணையம் என்பதால்தான் இணையம் என்று பெயர் வைத்தார்களோ என்னவோ?
அடுத்தடுத்த பதிவுகளில் இஸ்லாமிய நண்பர்கள் இறை வணக்கத்தோடு நெகிழ்ந்த வேளையில்தான் முதன்முதலில் இந்த ஊடகத்தின் பலம் உறைக்க ஆரம்பித்தது. உறங்கிக்கிடந்த உணர்வுகள் விழித்துக்கொண்டு எல்லை முதல் கருவறை வரை வரைந்த போதெல்லாம் உள் மனசு பறையடிக்கும் வேலைக்கு ஆபத்தென்று... அப்பாவி ஆன்மாக்களின் அன்றாட வாழ்வியலை விட அது ஒன்றும் அத்தனை ஆபத்தல்ல என்கிறது மறு மனசு.
கணேஷ் பாலா வாத்யார்,முத்தரசண்ணே,விக்கியண்ணே,ஆபிசர் அண்ணே, வாத்தி ராஜா,கரைசேரா அலை அரசன்,ஸ்கூல் பையன்,ப்ளேடு கார்த்தி,தமிழ்வாசி ,ராம்குமார் ,கோவை ஆவி ,சசி மோகன்,ஹாரி,இலியாஸ்,அப்துல் பாசித்,பிரபு கிருஸ்ணா,ரூபக்,துரை,வெற்றிவேல்,ஜானி,ராஜியக்கா,அமுதாக்கா,தென்றல் சசிகலாக்கவும் பசங்களும்,அகிலாக்கா,எழிலக்கா,ஏஞ்சலின் அக்கா
மற்றும் பல நட்புகள் எழுத்து தாண்டி அலை பேசியில் சொந்தம் பாராட்டும் பாக்கியம்தான் நான் கேளாமல், இல்லாத கடவுள் கொடுத்த இணைய வரம்.
இணைய உலகின் சண்டக்கோழி கிராமத்து கருவாச்சி எனது ஊர் என்றும்,எனது தங்கை என்றும் குடும்பப்பாட்டு பாட வைத்ததும் இந்த இணையம்தான்.
ஒருமுறை கடன் குறித்து ஸ்டேட்டஸ் இட்டபொழுது போனில் அழைத்து பண உதவி செய்ய தயாரான வாத்தி ராஜாவும், புத்தகங்கள் வாங்கியனுப்பி காசு பற்றி பேசாமல் மணிக்கணக்கில் அலைபேசியில் ஊர்ப்பேச்சு பேசும் அரசனும் இனிய உதாரணங்கள் இந்த நட்புக்கு.
தனிமையான தருணங்களிலும்,கவலையான கணங்களிலும் என்னை ஆறுதல் செய்யும் இந்த இணைய வழி நட்புகள் வழியாக நான் உலகின் எங்கிருந்தாலும் சொந்த வீட்டில் சுளுக்கெடுக்கும் இன்பத்தை அனுபவிக்க கிடைத்தது பாக்கியமே.
இந்த வருட பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள மனைவிக்கும் மகனுக்கும் விடுமுறை கிடைத்து,டிக்கெட்டும் எடுத்து நான் மட்டும் கிளம்ப இயலாத சூழ்நிலை.. மன்னிக்கவும்.அடுத்த வருடம் சந்திப்போம் என உறுதியாக நம்புகிறேன்.
![]() |
| அப்துல் பாசித் |

| சீனு |

இதனையெல்லாம் தாண்டி பதிவராக இல்லாமல் ஒரு வாசகராக தொலைபேசியில் அழைத்து பாராட்டியும், நலம் விசாரித்தும் ஆச்சரியப்படுத்தும் தியாகு என்ற நண்பரை குறிப்பிடாமல் முழுமையாகாது இந்தப்பதிவு. நன்றி தியாகு.
உங்களுக்கும் எனக்கும்
உங்களுக்கும் எனக்கும்
பொருந்தாத எழுத்தெல்லாம்
இரைந்து கிடக்கிறது
காதலாக...நட்பாக...
ஒரு அனாதையப்போல்தான் 2012ல் இந்த வலையுலகத்தின் கீ போர்டில் விரல் வைத்தேன் .மொத்த உலகத்தையும் சொந்தமாக்கி கொண்ட திருப்தியோடு இக்கணத்தில் மரித்தாலும் மனதார மரித்து செல்ல மனதாயுள்ளேன்.ஆமென்.
தொடர்ந்து பதிகிறேன்..கருத்துக்கள் மோதிக்கொல்லட்டும் .... நாமல்ல ...நன்றி.வணக்கம்.

| Tweet | |||||

தொடர்ந்து... எழுதுங்கள் நண்பரே மோதிக்கொள்(ல்)வோம் கருத்துரை மூலமாக மட்டுமே த.ம.1
பதிலளிநீக்குகில்லர்ஜி
உங்க கூடல்லாம் மோத முடியாது ஜி ...பெரும் மீசையும் மிரட்டுதுங்கோ ..மீ கிரீன் சான்ட்
நீக்குநன்றி ஜி
100 ஆயிரமாக மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குதொடர்ந்தும் எழுதுங்கள் தொடர்கிறோம்
நன்றி அக்கா...
நீக்குவெளிப்படையான உங்களது கட்டுரைகளை தமிழ்மணத்தில் படிப்பதுண்டு. கருத்துரைகள் தந்ததில்லை. தொடர்ந்து எழுதுங்கள். தங்களது நூறாவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குத.ம.2
தங்களின் தொடர்ச்சியான வாசிப்புக்கும வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா ..
நீக்குதொடர்ந்து எழுதுங்கள்.... படிக்கிறேன்... என் பெயரையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி... என் போட்டோ வெளியிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்.... :)
பதிலளிநீக்குநன்றி ஸ்பை ..நான் என் படத்தையே போடல என்பதை தன்னடக்கத்துடன் அறிவித்து கொள்கிறேன் :)
பதிலளிநீக்குமீண்டும் தொடங்கியாச்சி போல... உங்களிடம் தொடர்ந்து ஆக்கப் பூர்வமான பதிவுகளை எதிர் நோக்குகிறேன் அண்ணே ... நிறைய எழுதுங்கள் ....
பதிலளிநீக்குநன்றி அரசா..எல்லாம் நீங்க கொடுத்த டானிக்தான் நண்பா
நீக்கு100 க்கு வாழ்த்துக்கள்... மேலும் தொடர வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி சகோ..
நீக்கு//கருத்துக்கள் மோதிக்கொல்லட்டும் .... நாமல்ல /////
பதிலளிநீக்குஎனது கருத்தும் இதுதான்... ஆனால் நண்பர்கள் கருத்தை கருத்தாக எடுத்து கொள்ளாமல் தன்னை தாக்குவதாக எடுத்து கொண்டு நட்பை முறித்து கொள்வதைதான் இங்கு பார்க்கிறோம் அது மாறட்டும்
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குகண்ணாடி இல்லாத சீனு...!
புதுக்கோட்டையில் சந்திப்போம்...
நன்றி டிடி அண்ணா ... அவசியம் சந்திப்போம் அண்ணா
நீக்குவாழ்த்துக்கள் நண்பரே! தொடரட்டும் உங்களது ஆக்கப்பூர்வமான பதிவுகள் சீனுவின் படம் சூப்பர்!
பதிலளிநீக்குஇந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr