டெல்லியை கலக்கி கொண்டிருக்கும் போராட்டங்கள் பல பல உண்மைகளை உறுத்தலாக உணர்த்தி கொண்டு உள்ளது.....பெண்கள் எதிர் கொள்ளும் பாலியல் கொடுமைகளை மொத்த டெல்லியும் எதிரொலிப்பதாக ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன.இந்தியாவின் இதயத்தின் மீதான போர் என்ற சட்டிஸ்கர் பிரச்சனை குறித்த உண்மையான அருந்ததி ராயின் வார்த்தைகளை மாற்றி போட்டு டெல்லி போராட்டத்தில் பணம் பார்க்கிறது இந்திய விபசார ஊடகங்கள்.
கண்டிக்கத்தக்க கேவலமான ஒரு குற்றம் நடந்தது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.ஆனால் இந்த போராட்டங்கள் எதை நோக்கி நகர்கிறது?என்ன கேட்கிறார்கள்?டெல்லி போலீஸ் மட்டும் பொறுப்பேற்க வேண்டுமா?கைது செய்து நீதிமன்றத்தில் கொடுத்த பின் அவர்களின் வேலை என்ன?இதற்க்கு மேல் என்ன செய்ய சொல்கிறார்கள்?என்கவுண்டர்?
இது ஒரு பாலியல் வன்முறை என்றால் ....பல இடங்களில் மயக்க மருந்து மூலமாக ..மயக்கும் வார்த்தைகள் மூலமாக சக வகுப்பு மாணவிகளை அனுபவித்து கழட்டி விட்ட மைனர்கள் செய்வது மிதவாத கற்பழிப்பு என்று எடுத்து கொள்ளலாமா?
அவற்றுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?அப்படி கொடுப்பதானால் இன்று டெல்லியில் போராடும் பல பேர் தலை குனிந்து திரும்பி போகலாம்.நீதி வேண்டும் நீதி வேண்டும் என்ற குரல்களுக்கு ஒரே நாளில் சோனியா இறங்கி வருகிறார்.வருடக்கணக்கா போராடும் கூடங்குள மக்கள் என்ன சோனியாவுக்கு அக்குளில் வளரும் தேவையில்லா மசுரா?
புனிதா என்றொரு சிறுமி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு கிடக்க அதுக்காக குரல் எழுப்ப நாதியில்லா நடிகனுங்க டெல்லிக்கு நீதி கேட்டு தெரு தெருவா நடக்குறாங்க.ஈழம்,கூடங்குளம் என்று தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்ட போது வராத ஆத்திரம் இப்ப வருதுனா என்ன அர்த்தம்?வெள்ளைக்கார மூத்திரம்னா மணக்குமோ?
அரசையும் போராட்டக்காரர்களையும் விட மிக தீவிரமாக இயங்குகிறது விபசார ஊடகங்கள்(விபசார தொழிலாளிகள் மன்னிக்கவும்).டெல்லியில் கூச்சல் தொடங்கிய நாளின் மாலை வரை கிட்டத்தட்ட ஒரு லட்சத்து இருபதாயிரம் SMSகள் வந்ததாகவும் மக்கள் மிக எழுச்சியோடு உள்ளார்கள் என்றும் வர்ணனை செய்கிறது ZEE நியூஸ் .ஒரு SMSக்கு மூணு ரூபாய்னா அன்னைய பொழுதுக்கு இது மூலம் மட்டும் எவ்வளவு வருவாய்?மிச்ச நாட்களுக்கும் கணக்கு பாருங்க..
போராட்டம் செய்பவர்களின் கூச்சலை விட ஊடகத்தினர் கூச்சல்தான் அதிகமா கேட்கிறது.நாட்டின் முதல் கற்பழிப்பு போலவும் மற்ற மாநில மக்களோ இல்லை எளிய குடும்ப பெண்கள் கற்பழிக்கப்பட்டாலோ வெறும் செய்தியாக கடத்திய ஊடகம் கார்ப்பரேட் மாயையின் விளிம்பில் நிற்பவர்களை வைத்து கூத்தடிகிறது.
டெல்லியின் வாலிபி ஒருவர் இவ்வாறு சொல்கிறார்..இந்தியாவில் ஷீலா தீட்சித் மற்றும் சோனியா மட்டுமே பாதுகாப்பாக இருக்கிறார்கள்.டெல்லி பெண்களுக்கு சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பு கேட்க அரசும் காவல்துறையும் உள்ளது.காஷ்மிர பெண்களுக்கு ?அரசப்பயங்கரவாதம்,கற்பழிப்புகளை எங்கு போய் கேட்க?
காஷ்மீர்,சட்டிஸ்கர்,வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் மிக கொடூரமான கற்பழிப்புகளை காண்பிக்காத ஊடகமும் சரி...அதனை செய்தியாக மட்டுமே கூட கவனியாமல் அனுதாபப்பட கூட நேரமில்லாமல் நகந்து கொண்ட மக்களும் சரி இவர்கள் இருவரும் இன்று தெருவிற்கு வந்துள்ளனர்.சகோ நிஷா மன்சூர் சொன்னது நியாபகத்திற்கு வருகிறது " அவனவன் பிருஷ்டத்தில் நெருப்பு பற்றாதவரை எவனுக்கும் சொரணை இல்லை "இப்போதாவது கூடங்குளம் முதல்,காஷ்மீர்,வடகிழக்கு,சட்டிஸ்கர் எளிய குடும்ப பெண்களின் மீதான அரச வன்முறைகளின்,அரச கற்பழிப்புகளின் வலியை உணர்வார்களா?
காஷ்மீரில் கல்லெறிந்தால் கலவரக்காரர்கள்.டெல்லியில் கல்லெறிபவர்கள் போராட்டக்காரர்கள்....இது எப்படி இருக்கு? ஊடக தர்மமா இல்லை ஊடக விபச்சாரமா?
அரசியல் ஆதாயங்களுக்காக அனைத்து அரசியல்வியாதிகளும் சாக்கடையில் முத்தெடுக்க கிளம்பியுள்ள நிலையில் சென்னையில் நடிகர் அப்பாஸ் சைக்கிள் பேரணி நடத்துகிறார்.சுகாஷினி பதாகை ஏந்தி சாலையில் நிற்கிறார்.இவிங்களுக்கு வெறும் டெல்லில நடப்பது மட்டும்தான் தெரியுமாம்.....தூத்துகுடில நடந்தா அது தெரியாதாம்.ஈழ கொடுமைகளுக்கு அரசுக்கு பயந்து பேசாத வாய்கள் அழாத கண்கள் இன்று ஓலமிடுகின்றன.ஓநாயை போல.(ஓநாய் மன்னிக்கவும்)
இந்த பதிவின் மூலம் நான் எதிர்பார்ப்பது இன்று ஊடக வாயிலாக ஒரு சேர கருப்பு பொட்டு வைக்கும் நெஞ்சங்கள் தயவு செய்து ஒடுக்கப்பட்ட,சிறுபான்மை,தமிழக,ஆதிவாசி பெண்கள் பாதிக்கப்ப்படும்போதும் குரல் கொடுக்க வேண்டுகிறேன்.கீழ் காணும் புகைப்படத்திற்கும் காணொளிக்கும் குரல் கொடுக்கா மக்கள் இன்று எழுச்சியடைவது வெறும் ஊடக மயக்கமாகவே தோன்றுகிறது.
படிக்க இங்கே சுட்டுங்கள்
காணொளி காண இங்கே சுட்டுங்கள்
வீட்டின் நடுவில் அனைத்து குப்பைகளையும் அள்ளி கொட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு தணிக்கை அவசியமாக்க வேண்டும்.டபங் 2 படம் பார்த்தேன்.எனது முன் வரிசையில் இருந்த பதின்வயது பெண்கள் சல்மான்கான் சட்டையை கழற்றிய போது போட்ட கூச்சல் அதிரடித்தது.கரினாகபூரின் ஆட்டத்திற்கு விசிலடித்து சீரோ பிகர் என்று சான்றிதழ் கொடுத்தது பசங்க சமுதாயம்.உடலை கவர்ச்சியாக்கும் மோகமாக்கும் வேலையை செவ்வனே செய்யும் சினிமா,டீவி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்யாத பட்சம் நீங்கள் ஆணுறுப்பை அறுத்தாலும் ஆசைகளை அழித்துவிட முடியாது.அடிப்படை வேரை அழிக்க வேண்டுங்க
இனி வரும் வாரத்தில் இது போன்ற விளம்பரங்கள் வந்தாலும் ஆச்சரியமில்லை.
"பெண்ணுரிமை போராட்டங்களில் அந்த மூன்று நாட்கள் உங்களை சிரமப்படுத்துகிறதா?இப்போது புதிதாக அறிமுகம் செய்கிறோம் "WHISHPER FREEDOM" நாப்கின்கள்.இதன் சிறப்பான வடிவமைப்பு மூலம் உங்களின் உரிமை போராட்டத்தில் உங்களின் தன்னம்பிக்கையோடு இணைந்து கொள்வதில் பெருமை கொள்கிறது WHISHPER.
இன்றைய தினத்தில் காஷ்மீரிகள் டெல்லி போராட்டத்தில் தங்களை இணைத்து கொள்கிறார்கள் .ஆனால் காஷ்மீரின் வன் கொடுமைகளுக்கு?Kashmiris Saturday joined in to condemn the Delhi shame and demanded punishment to the culprits, almost all of whom have been arrested within days- the latest as far in Bihar today- but sought to question the conscience of the people and national media over similar incidents in Kashmir....மேலும் படிக்க..
ஒவ்வொரு வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் தன் மீது சுமத்தி பார்த்தால் மிக எளிதாக நீங்கள் கோபப்டுவீர்கள்.இன்று கோபப்படுகிறீர்கள்.ஆனால் அதற்காக டெல்லி மட்டுமே போராட்ட களமாகவும்....மற்ற மாநில மக்கள் போராடுவது தீவிரவாதமாகவும் தோன்றினால்....மன்னிக்கவும் ..வரும் காலங்களில் நீங்களாகவே கூட தீவிரவாதத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் வரும்.வாழ்க இந்திய ஜனநாயகம்.
பலவித பணிசுமைகளினால் ஒரு மாதத்திற்கு மேலாக பதிவுலகில் காணாமல் போய்விட்டேன்...தொடர்ந்து இணைந்திருப்போம்.நன்றி.
உங்கள் பார்வையில் எனது தவறுகளையும் உங்கள் கருத்துக்களையும் மறக்காமல் கருத்துப்பெட்டியில் தரவும்.
கண்டிக்கத்தக்க கேவலமான ஒரு குற்றம் நடந்தது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.ஆனால் இந்த போராட்டங்கள் எதை நோக்கி நகர்கிறது?என்ன கேட்கிறார்கள்?டெல்லி போலீஸ் மட்டும் பொறுப்பேற்க வேண்டுமா?கைது செய்து நீதிமன்றத்தில் கொடுத்த பின் அவர்களின் வேலை என்ன?இதற்க்கு மேல் என்ன செய்ய சொல்கிறார்கள்?என்கவுண்டர்?
இது ஒரு பாலியல் வன்முறை என்றால் ....பல இடங்களில் மயக்க மருந்து மூலமாக ..மயக்கும் வார்த்தைகள் மூலமாக சக வகுப்பு மாணவிகளை அனுபவித்து கழட்டி விட்ட மைனர்கள் செய்வது மிதவாத கற்பழிப்பு என்று எடுத்து கொள்ளலாமா?
அவற்றுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?அப்படி கொடுப்பதானால் இன்று டெல்லியில் போராடும் பல பேர் தலை குனிந்து திரும்பி போகலாம்.நீதி வேண்டும் நீதி வேண்டும் என்ற குரல்களுக்கு ஒரே நாளில் சோனியா இறங்கி வருகிறார்.வருடக்கணக்கா போராடும் கூடங்குள மக்கள் என்ன சோனியாவுக்கு அக்குளில் வளரும் தேவையில்லா மசுரா?
புனிதா என்றொரு சிறுமி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு கிடக்க அதுக்காக குரல் எழுப்ப நாதியில்லா நடிகனுங்க டெல்லிக்கு நீதி கேட்டு தெரு தெருவா நடக்குறாங்க.ஈழம்,கூடங்குளம் என்று தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்ட போது வராத ஆத்திரம் இப்ப வருதுனா என்ன அர்த்தம்?வெள்ளைக்கார மூத்திரம்னா மணக்குமோ?
அரசையும் போராட்டக்காரர்களையும் விட மிக தீவிரமாக இயங்குகிறது விபசார ஊடகங்கள்(விபசார தொழிலாளிகள் மன்னிக்கவும்).டெல்லியில் கூச்சல் தொடங்கிய நாளின் மாலை வரை கிட்டத்தட்ட ஒரு லட்சத்து இருபதாயிரம் SMSகள் வந்ததாகவும் மக்கள் மிக எழுச்சியோடு உள்ளார்கள் என்றும் வர்ணனை செய்கிறது ZEE நியூஸ் .ஒரு SMSக்கு மூணு ரூபாய்னா அன்னைய பொழுதுக்கு இது மூலம் மட்டும் எவ்வளவு வருவாய்?மிச்ச நாட்களுக்கும் கணக்கு பாருங்க..
![]() |
| ENTERTAINMENT SPECIALலாம் நான் சொல்லல...BIG TV சொல்லுது. |
டெல்லியின் வாலிபி ஒருவர் இவ்வாறு சொல்கிறார்..இந்தியாவில் ஷீலா தீட்சித் மற்றும் சோனியா மட்டுமே பாதுகாப்பாக இருக்கிறார்கள்.டெல்லி பெண்களுக்கு சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பு கேட்க அரசும் காவல்துறையும் உள்ளது.காஷ்மிர பெண்களுக்கு ?அரசப்பயங்கரவாதம்,கற்பழிப்புகளை எங்கு போய் கேட்க?
காஷ்மீர்,சட்டிஸ்கர்,வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் மிக கொடூரமான கற்பழிப்புகளை காண்பிக்காத ஊடகமும் சரி...அதனை செய்தியாக மட்டுமே கூட கவனியாமல் அனுதாபப்பட கூட நேரமில்லாமல் நகந்து கொண்ட மக்களும் சரி இவர்கள் இருவரும் இன்று தெருவிற்கு வந்துள்ளனர்.சகோ நிஷா மன்சூர் சொன்னது நியாபகத்திற்கு வருகிறது " அவனவன் பிருஷ்டத்தில் நெருப்பு பற்றாதவரை எவனுக்கும் சொரணை இல்லை "இப்போதாவது கூடங்குளம் முதல்,காஷ்மீர்,வடகிழக்கு,சட்டிஸ்கர் எளிய குடும்ப பெண்களின் மீதான அரச வன்முறைகளின்,அரச கற்பழிப்புகளின் வலியை உணர்வார்களா?
காஷ்மீரில் கல்லெறிந்தால் கலவரக்காரர்கள்.டெல்லியில் கல்லெறிபவர்கள் போராட்டக்காரர்கள்....இது எப்படி இருக்கு? ஊடக தர்மமா இல்லை ஊடக விபச்சாரமா?
அரசியல் ஆதாயங்களுக்காக அனைத்து அரசியல்வியாதிகளும் சாக்கடையில் முத்தெடுக்க கிளம்பியுள்ள நிலையில் சென்னையில் நடிகர் அப்பாஸ் சைக்கிள் பேரணி நடத்துகிறார்.சுகாஷினி பதாகை ஏந்தி சாலையில் நிற்கிறார்.இவிங்களுக்கு வெறும் டெல்லில நடப்பது மட்டும்தான் தெரியுமாம்.....தூத்துகுடில நடந்தா அது தெரியாதாம்.ஈழ கொடுமைகளுக்கு அரசுக்கு பயந்து பேசாத வாய்கள் அழாத கண்கள் இன்று ஓலமிடுகின்றன.ஓநாயை போல.(ஓநாய் மன்னிக்கவும்)
இந்த பதிவின் மூலம் நான் எதிர்பார்ப்பது இன்று ஊடக வாயிலாக ஒரு சேர கருப்பு பொட்டு வைக்கும் நெஞ்சங்கள் தயவு செய்து ஒடுக்கப்பட்ட,சிறுபான்மை,தமிழக,ஆதிவாசி பெண்கள் பாதிக்கப்ப்படும்போதும் குரல் கொடுக்க வேண்டுகிறேன்.கீழ் காணும் புகைப்படத்திற்கும் காணொளிக்கும் குரல் கொடுக்கா மக்கள் இன்று எழுச்சியடைவது வெறும் ஊடக மயக்கமாகவே தோன்றுகிறது.
படிக்க இங்கே சுட்டுங்கள்
காணொளி காண இங்கே சுட்டுங்கள்
வீட்டின் நடுவில் அனைத்து குப்பைகளையும் அள்ளி கொட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு தணிக்கை அவசியமாக்க வேண்டும்.டபங் 2 படம் பார்த்தேன்.எனது முன் வரிசையில் இருந்த பதின்வயது பெண்கள் சல்மான்கான் சட்டையை கழற்றிய போது போட்ட கூச்சல் அதிரடித்தது.கரினாகபூரின் ஆட்டத்திற்கு விசிலடித்து சீரோ பிகர் என்று சான்றிதழ் கொடுத்தது பசங்க சமுதாயம்.உடலை கவர்ச்சியாக்கும் மோகமாக்கும் வேலையை செவ்வனே செய்யும் சினிமா,டீவி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்யாத பட்சம் நீங்கள் ஆணுறுப்பை அறுத்தாலும் ஆசைகளை அழித்துவிட முடியாது.அடிப்படை வேரை அழிக்க வேண்டுங்க
இனி வரும் வாரத்தில் இது போன்ற விளம்பரங்கள் வந்தாலும் ஆச்சரியமில்லை.
"பெண்ணுரிமை போராட்டங்களில் அந்த மூன்று நாட்கள் உங்களை சிரமப்படுத்துகிறதா?இப்போது புதிதாக அறிமுகம் செய்கிறோம் "WHISHPER FREEDOM" நாப்கின்கள்.இதன் சிறப்பான வடிவமைப்பு மூலம் உங்களின் உரிமை போராட்டத்தில் உங்களின் தன்னம்பிக்கையோடு இணைந்து கொள்வதில் பெருமை கொள்கிறது WHISHPER.
இன்றைய தினத்தில் காஷ்மீரிகள் டெல்லி போராட்டத்தில் தங்களை இணைத்து கொள்கிறார்கள் .ஆனால் காஷ்மீரின் வன் கொடுமைகளுக்கு?Kashmiris Saturday joined in to condemn the Delhi shame and demanded punishment to the culprits, almost all of whom have been arrested within days- the latest as far in Bihar today- but sought to question the conscience of the people and national media over similar incidents in Kashmir....மேலும் படிக்க..
ஒவ்வொரு வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் தன் மீது சுமத்தி பார்த்தால் மிக எளிதாக நீங்கள் கோபப்டுவீர்கள்.இன்று கோபப்படுகிறீர்கள்.ஆனால் அதற்காக டெல்லி மட்டுமே போராட்ட களமாகவும்....மற்ற மாநில மக்கள் போராடுவது தீவிரவாதமாகவும் தோன்றினால்....மன்னிக்கவும் ..வரும் காலங்களில் நீங்களாகவே கூட தீவிரவாதத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் வரும்.வாழ்க இந்திய ஜனநாயகம்.
பலவித பணிசுமைகளினால் ஒரு மாதத்திற்கு மேலாக பதிவுலகில் காணாமல் போய்விட்டேன்...தொடர்ந்து இணைந்திருப்போம்.நன்றி.
உங்கள் பார்வையில் எனது தவறுகளையும் உங்கள் கருத்துக்களையும் மறக்காமல் கருத்துப்பெட்டியில் தரவும்.
| Tweet | |||||

மக்களை பாதுகாக்கவேண்டிய காவல் துறை வனத்துறை என அரசு அதிகார வர்க கூட்டம் வாச்சாத்தியில் கூட்டம் கூட்டமாக கற்பழித்ததே அதைவிட இந்த மருத்துவ மாணவி பிரச்சினை பெரியதா ? நாட்டை பாதுகாக்கவேண்டிய இந்திய ரானுவம் இலங்கை தமிழ்பெண்களை சூரையாடியதைவிட இது பெரியதா? இப்போது டெல்லியில் போராடுபவர்கள் அனைவரும் சுயனலக்காரர்களே. இது நாள் வரை எங்கோ சிற்றூர்களிலும் கிராமங்களிலும் நடைபெறும்போது அது தினசரிகளை வெற்றிடங்களை நிரப்பும் செய்திகளாக உணர்ந்தவர்கள் தானும் தாக்கப்படுவோமோ என்ற பீதியில் மிரளும் மிரட்ச்சி
பதிலளிநீக்குபீதியை கிளப்பைவிட்டதில் ஊடகங்கள் செம ஸ்பீட்.....பல இடங்களில் இந்த ஸ்பீடை காட்டியிருந்தால் இன்று இந்த குற்றம் நடந்திருக்க வாய்ப்புகள் குறைந்திருக்கும்.
நீக்குநன்றி திரு புரட்சி தமிழன்..
//மயக்கும் வார்த்தைகள் மூலமாக சக வகுப்பு மாணவிகளை அனுபவித்து கழட்டி விட்ட மைனர்கள் செய்வது மிதவாத கற்பழிப்பு என்று எடுத்து கொள்ளலாமா// இந்த வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை.... காரணம் மயக்கும் வார்த்தைகள் கண்டு மயங்காது இருப்பது யார் வேலை... ஒரு வேலை கடுமையானா சட்டங்கள் வந்து ஏதோ விரோதத்தின் காரணமாக பெண்கள் ஆண்களை வதைத்தால் என்ன செய்வது...
பதிலளிநீக்குஏற்கனவே இருக்கும் சட்டங்கள் அனைத்தும் ஆண்களுக்கு எதிராக இருக்கிறது, அதனால் பலாத்காரம் என்ற நிலையில் என் பார்வையை நிறுத்திக் கொள்கிறேன்
//மயக்கும் வார்த்தைகள்// இதில் இரு பக்க சுய கட்டுப்பாடும் தேவை
//போராட்டம் செய்பவர்களின் கூச்சலை விட ஊடகத்தினர் கூச்சல்தான் அதிகமா கேட்கிறது.நாட்டின் முதல் கற்பழிப்பு போலவும் மற்ற மாநில மக்களோ இல்லை எளிய குடும்ப பெண்கள் கற்பழிக்கப்பட்டாலோ // உங்கள் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்
//ஆணுறுப்பை அறுத்தாலும் ஆசைகளை அழித்துவிட முடியாது.// என்ன ஒரு வரிகள் அபாரம்
வெகு நாட்களுக்குப் பின் தாங்கள் பொங்கி எழுந்த பதிவுடன் ஒத்துப் போகிறேன்
தம்பியின் கருத்தில் உடன்படுகிறேன்...மயக்கமருந்து கொடுத்து இல்லை ஏதேனும் பிளாக் மெயில் மூலம் செய்வதை குறிக்க விழைந்தேன்...ஆண்களுக்கு எதிராக சட்டங்கள் என்பதை விட பெண்களுக்கு பாதுகாப்பாக சட்டங்கள் என்று சொல்லலாமா?
நீக்குபெண்களின் மேலான கொடுமைகள் அதிகம் என்பதால் சட்டங்களும் அப்படி அதற்க்கு தக்க என்றே கருதுகிறேன்.அதை தவறாக பயன்படுத்தினால் பிரச்சனைதான்..
மிகவும் நன்றி தம்பி....
//புனிதா என்றொரு சிறுமி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு கிடக்க அதுக்காக குரல் எழுப்ப நாதியில்லா நடிகனுங்க டெல்லிக்கு நீதி கேட்டு தெரு தெருவா நடக்குறாங்க.ஈழம்,கூடங்குளம் என்று தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்ட போது வராத ஆத்திரம் இப்ப வருதுனா என்ன அர்த்தம்?
பதிலளிநீக்கு//
இதுக்கு நீங்க அவங்கள செருப்பால அடிச்சு இருக்கலாம் .
ஆசைதான் அண்ணாச்சி......என்ன செய்ய சொல்றீங்க?நம்மள பார்த்தா முட்டப்பயலா நினைச்சிகிறாங்க....
நீக்குவருகைக்கும் கோபத்திற்கும் மிகவும் நன்றி அண்ணாச்சி..
nice post
பதிலளிநீக்குthank u dear....
நீக்குGenerally, I dont accept your biased, one-sided, religious-based articles. However, in this case, I have to accept your stand. Good narration.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி Aathiga Tamilan......நான் என்ன செய்வது நண்பரே?ஒரு பக்கமாகவே அடிக்கப்படுகிரார்கள்...ஒடுக்கப்படுகிறார்கள்.
பதிலளிநீக்குமுற்றிலும் உண்மையே அண்ணா அநியாய விளம்பரத்தால் அந்த பெண்ணின் வாழ்க்கையும் பாழ் நான் இந்தியன் என்பதில் கேவலமடைகிறேன்...
பதிலளிநீக்குநன்றி தம்பி..
நீக்குபாராட்டுக்கள்..
பதிலளிநீக்குநன்றி மாற்றுப்பார்வை நண்பரே..
நீக்குஒவ்வொருவரும் சற்று ஆழ்ந்து இதை படித்தால் இதன் வீரியம் புரியும் ...
பதிலளிநீக்குஒவ்வொரூ வரிகளும் கம்பியை பழுக்க காய்ச்சி நெஞ்சுக்குள் சொருகும் வலியை தருகின்றன .. உண்மை கசக்கத்தானே செய்யும் ...
மனம் திறந்த பதிவு ...
என் பார்வையில் இவர்கள் (டெல்லி புரட்சி கண்மணிகள்) அனைவரும் நான்கு நாள் கூச்சலிடும் வகையறாக்களே, ஐந்தாவது நாள் அகம் கவர்ந்த நாயகனை ரசிக்க கிளம்பிவிடும் பட்டாளங்கள். உள்ளுக்குளே இருந்து கொண்டு உறிஞ்சி சாப்பிடும் ஊடக ஓநாய்களை முதலில் சரி செய்யணும். தேவையென்றால் அதை மிகை படுத்தி வயிறு வளர்க்கும் வக்கற்ற ஊடக நாக்கை அறுத்தெறிய முதலில் ஆவண செய்யணும் ...
உங்க கருத்து வார்த்தைகள் பதிவை விட காட்டமா உள்ளது...இத நீங்க எழுதியிருந்தா இன்னும் ஓங்கி அடிச்ச மாதிரி இருந்திருக்கும்.
நீக்குநன்றி தல..
விபச்சார ஊடகங்கள் மிக சரியான சொற்பிரயோகம்.சிந்தனையை தூண்டும் மிக சிறந்த பதிவு.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி Barari..
நீக்குமிகவும் நன்றி Barari...
பதிலளிநீக்குசிந்திக்க வேண்டிய பல விஷயங்கள் சொல்லிவிட்டீர்கள்
பதிலளிநீக்குநன்றி திரு T.N.MURALIDHARAN
நீக்குஆத்திரம் அதிகம் .என்ன செய்வது? சுய அறிவை தொடைத்து,அழித்து விட்டார்களே நம்மை ஆள்பவர்களும்,பின்னிருந்து இயக்குபவர்களும்,சினிமா மற்றும் இயல் அரசியல் நடிகர்களும்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி GUNA SEKAR
நீக்குஅண்ணே ஒரு சந்தேகம்..நீங்க தனி தமிழ்நாடு கண்டா , இப்போ தமிழ்நாட்டிலே மொள்ளமாறி தனம், முடிச்சவிக்கித்தனம் பண்ணுறவன் எல்லாம் உடனே திருந்திடுவானா ? உடனே சாதி, சீதன கொடுமை எல்லாம் அழிந்சுடுமா? இல்லை அதை செய்பவன் எல்லாரையும் போட்டுதள்ளுவீங்களா ?நீங்க தமிழ்நாட்டை எப்படி முன்னேற்றுவீங்க? எல்லாருக்கும் மொட்டாக்கு போட்டா?
பதிலளிநீக்குகொஞ்சம் சொன்னா நல்லாருக்கும்ணே...
Atlast i saw an article from you....
பதிலளிநீக்குTHANK U Thyagaraj Kumaresan
நீக்குநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து ஒரு நல்ல பதிவை கொடுத்து இருக்கிறீர்கள், விழுப்புரத்தில் மூன்று தலித் பெண்களை காவலர்கள் கற்பழித்ததை எல்லோரும் மறந்து விட்டீர்கள்.அந்த குற்றவாளிகள் இன்னும் கைது கூட செய்யவில்லை.
பதிலளிநீக்குவட மாநிலங்களில் குளிர் கடுமையாக இருக்கிறது, நீங்களோ எல்லையில் இருக்கிறீர்கள், வரலாறு காணாத குளிர் என்று ஊடகங்களில் சொல்கிறார்கள் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
நன்றி சகோ....பல கொடூரங்களை மறந்து செல்கிறோம் என்பது உண்மைதான் சகோ.....
நீக்குநான் தற்போது சிட்டியில்தான் இருக்கிறேன்.அடுத்த மாதம்தான் ஜம்மு எல்லை போகிறேன்.....நண்பர்கள் கடும் குளிர் என்றே சொல்கிறார்கள்.ஒவ்வொரு வருடமும் வரலாறு காணாத என்றுதான் சொல்வார்கள். நன்றி சகோ..:)
அருமையான,அவசியமான பதிவு.நன்றி.......
பதிலளிநீக்கு