Translate

LAKBIMA NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
LAKBIMA NEWS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஜெயலலிதாவை ஆபாசமாக சித்திரம் வெளியிட்டது நட்பு நாடான இலங்கையின் பத்திரிகை

ஒரு பெண்ணென்றோ ஒரு தாயின் அகவை என்றோ 6 கோடி மக்களின் முதல்வர் என்றோ என எந்த ஒரு வகையிலும் கருதாமல் தன்னை ஒரு மனித பிறவியாக கூட நினைக்காமல் தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதாவை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக கீழ்த்தரமாக கேலி சித்திரம் வரைந்து தன் இனவெறி பசிக்கு இரை போட்டுள்ளான் ஒரு சிங்கள கார்டூனிஸ்ட்.அதை பிரசுரித்து உள்ளது LAKBIMA NEWS என்ற பத்திரிகை. இலங்கையின் இன வெறிக்கும் இன வெறி இறையாண்மைக்கும் குடை பிடிக்கிறது இந்திய அடிமைகள்.


Add caption

வெறி பிடித்த கார்டூனிஸ்ட்   Hasantha Wijenayake 

நாராயண சாமி ,போபண்ணா ,ஞான தேசிகன் என்ன சொல்வார்கள்?நட்பு நாடு கலைகளில் சிறந்து விளங்குகிறது என்றா?

நடு நிலை ஞானி இங்கு எங்கே நடுநிலை தேடுவார்?இதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் வெறுப்பை காட்டியுள்ள சிங்களத்தானிடம் எந்த நியாயத்தை எதிர்பார்ப்பார்?

சுப்பிரமணி சுவாமி என்ன சொல்லுவார்?

சோ என்ன அறிவுரை வழங்குவார் ஜெயலலிதாவிற்கு?

மாட்டுக்கறி விசயத்தில் நக்கீரன் அலுவலுகத்தை அடித்து நொறுக்கிய அதிமுக அதிரடி ரத்தங்கள் ஆழ்வார் பேட்டையில் உள்ள இலங்கை தூதரகத்தை அடித்து நொறுக்குவார்களா?


 இந்த சித்திரங்களை பாருங்கள் ...

இந்தியாவின் தற்போதைய நிலையை படம்பிடித்து காட்டும் சித்திரங்களை வரைந்த அசிம் திரிவேதி அவர்களின் சித்திரங்களை காணுங்கள்.முகத்தில் அடிக்கும் உண்மையை ஏற்று கொள்ளாமல் பிரிவினையை தூண்டுவதாக வழக்கு பதிவு செய்துள்ளது இந்திய அரசு..இந்தியாவின் சட்ட திட்டங்கள் வெளியுறவு கொள்கைகள் அனைத்தும் கீழ் மட்ட மக்களின் முதுகில் குத்துவதிலும் அடக்கி ஆள்வதிலுமே சிறந்து விளங்குகிறது.

இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கம் என்ன சொல்ல போகிறதோ தெரியவில்லை .இந்த நிகழ்வு மூலமாவது ஜெயலலிதா இலங்கையின் கோர முகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.சிங்களர்களின் தமிழ் வெறுப்புக்கு இது ஒரு சாட்சியாகும். 

குறிப்பு: அந்த சித்திரத்தை இந்த பதிவில் வெளியிடுவதை  தவிர்த்திருக்கலாம்.ஆனால் அதன் வீரியத்தை அது இல்லாமல் உணர்வது என்பது முடியாத ஒன்று.எனவே மன்னிகவும்.பொறுத்தருள்க.முடிந்தால் இலங்கை தூதரகத்திற்கு தொலை பேசி மூலமாகவோ இல்லை வேறு வழிகளிலோ உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாம்.

Sri Lanka Deputy High Commissionmore. 
196, TTK Road, Alwarpet.
Chennai, Tamil Nadu 600018.
0091 - 44- 2498 7896.