இந்த கடிதத்தை படிக்கும் முன் சமூக விரோதிகளால் மத வெறியர்களால் கர்நாடகாவில் கொல்லப்பட்ட கல்பர்கி என்னும் முதிய முற்போக்கு புரட்சிகர எழுத்தாளரின் கொலைக்கு சப்பக்கட்டும் சாருவின் இந்த கருமத்தை ஒருக்கா படித்து விடுங்கள்.நன்றி.
தமிழகத்தின் எலக்கிய ஆளுமையான உனக்கெல்லாம் ஒரு கடுதாசி எழுதுவேன்னு நெனச்சி கூட பார்க்கலப்பா. .ஒன் ஆட்டுக்கெடா தாடியும் ஷோக்காத்தான்கீது.ஆனா மண்டதான் கொஞ்சம் கிராக்கு போல.என்னடா மருவாதியே இல்லாம எழுதுறானேன்னு நென்ச்சிக்காத.இப்பத்தான் ஒன் எழுத்துன்னு ஒரு கண்ராவிய பட்ச்சேன் .ஒரு 77 வயசு ஆள முட்டாள்னு நீ எழுதுறப்ப உன்னயெல்லாம் இத்த விட கயுவி கயுவி ஊத்தலாம் .ஆனா பாரு நான் சாரு இல்லியே.
மதத்தை விமர்சிக்க கூடாதுன்னா அந்த மதத்த வீட்டுக்குள்ள குஞ்சாமனிக்குள்ள கட்டி வைச்சுக்க வேண்டியதுதானே சாரு செல்லம்.வீதில ஏன் ஆட உட்ட? வீதிலன்னு வந்துட்டா கேக்காம கம்னு போக அது இன்னா இன்பாக்ஸ்ல நீ போடுற கடலையா என்ன? சும்மா ஆடுனா பரவால்ல ..நாலு கலரா பிரிச்சு போட்டு நாரகாசமால்லா ஆடுது.
உண்மை என்னானா உன் மதமும் நம்பிக்கையும் ஒரு கெழவனுக்கு பதில் சொல்ல தெரியாம கொலை செய்ஞ்சிருக்குஅத மஞ்ச மாக்கானாட்டம் நீ சப்பக்கட்டு கட்டுற.தேவதாசி கூட மத நம்பிக்கைதான் அனுப்பி வைய்யேன் ஒன் வீட்ல இருந்து.அவந்திகா செருப்பால அடிப்பாங்க ஒன்ன..நாறிப்போன வடைல இன்னும் என்னடா தேடிகிட்டு இருக்க நம்பிக்கைன்னு?
கருத்து சொதந்திரம் அவருக்கு இருக்கு.போராடுற சொதந்திரம் ஒனக்கு இருக்கு.எந்த விநாயகன் கொலை செய்ய சொதந்திரம் கொடுத்தான் சொல்லு?விட்டா போலிஸ் டேசனையும் கோர்ட்டையும் கடல்ல கரைச்சிட்டுதான் புள்ளையார கரைப்ப போல.
அம்பேத்கரை விடவா ஒன் சாதி மதத்த கேள்வி கேட்ற முடியும்?ஒன் கணக்குப்படி பார்த்தா அன்னிக்கே அம்பேத்கரை கொன்னுருந்தா கூட தப்பில்லன்னு சொன்னாலும் சொல்லுவ நீ. விநாயகர் கடவுள் இல்லன்னு அவர் சொல்ல கூடாதுன்னா வீதிக்கு வீதி ஒரு முக்கு விடாம கோயில கட்டி விநாயகர் கடவுள்தான்னு சொல்ல யார் கொடுத்தா செல்லம் உரிமை?
மதம் ஒரு போதைன்னு மார்க்ஸ் சொன்னாரு.மதம் மனிதனை மிருகமாக்க்கும்னு பெரியார் சொன்னாரு.மதம் மனிதனை மடையனாக்கும்னு உன் எழுத்து சொல்லுது.அவ்வளவு பெரிய எழுத்தாளுமை மாதிரியா எழுதிருக்க? அத்தனயும் ஓட்ட .புதுசா பேஸ்புக்ல வந்தவன் ஸ்டேட்டஸ் போட்ட மாதிரி...
ஒன் மதம், மசுரு, நம்பிக்கைன்னு சொன்னதுலாம் வரை சாரு சாருதான் சக்கரக்கட்டிதான் ..ஆனா அதுக்கப்புறமா சொன்ன பாரு இதே வேற மதம்னா இருவது வருசத்துக்கு முன்னமே கொன்னுருப்பாங்கன்னு .மொத்த மூளைலையும் நரித்தனம் நாட்டியமாடுது.போற போக்குல பக்கத்தூட்ல மலம் வீசி பார்க்குற அசிங்கப்பெறவியா நீ? கேவலமா இல்ல இப்படி எழுத?தாயா புள்ளையா பழகிட்டு இருக்குறவன் மேல வெறுப்ப தூண்டுறேயே அசிங்கமா இல்ல? நீயெல்லாம் எழுதலன்னு யார் அழுதா?
வன்முறைக்கு வன்முறை தீர்வல்லன்னு சொல்லிகிட்டு இருக்குற ஊர்ல பச்சப்படுகொலைய நியாயப்படுத்திட்டு இருக்குது ஒன்னோட சொய இன்பம். அல்ல்லாத்தையும் சொல்லிட்டு எறும்ப கொல்லக்கூட உரிமையில்ல ஒறவு இல்லன்னு கடைசில ஒரு வசனம் வைச்ச பாரு .. நீ சாரு நிவேதிதாவே இல்ல எழுத்துலக தசாவதார சாரு ஹாசங்கிறன்.
நல்லா சொல்றன் கேட்டுக்கோ செல்லம்..
எங்கெல்லாம் மூட நம்பிக்கை இருக்கோ அங்கெல்லாம் ஒரு கல்பர்கி இருப்பான்.எதிர்ப்பான் கேள்வி கேட்பான்.எழுதுவான்.கொல்லப்பட்ட நானும் ஒரு கல்பர்கிதான். முடிந்தால் சுட்டுக்கொல் .அழைப்பு விடுக்கிறேன் உனது மத நம்பிக்கை மூடர்களுக்கும்.அவர்களின் ஆகச்சிறந்த கடவுள்களுக்கும்.
முக்கிய குறிப்பு-சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுபத்தேழு வயதான ஒய்வு பெற்ற துணை வேந்தர் தான் உண்டு தன் பணமுண்டு என்று வாழாமல் அத்தனை எதிர்ப்புகளை மீறி மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடைசி காலத்திலும் போராடிய ஒருவரை முட்டாளாக்கினால் அந்த முட்டாளுக்கு முட்டாள் மொழியில்தான் கடிதமெழுத முடியும்.எனவே பொறுத்தருள்க மென் மற்றும் மேன் மக்களே ...நன்றி.வணக்கம்.
கருத்துரிமைக்கு குரலாக இந்த படத்தை நீங்கள் சமூக வலை தளங்களில் ப்ரோபைல் படமாக பயன்படுத்தலாம்.
| Tweet | |||||


