Translate

நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஜூலை, 2013

காதல் கடிதப்போட்டி- திருட்டுப்பார்வை பார்ப்பவளுக்கு.........

பொதுவாக பொண்ணு ங்களுக்கு சிரிக்க வைச்சு பேசுனா ரொம்ப பிடிக்கும்.எத்தனையோ உணர்ச்சிகள் உடைய கடிதங்கள் வந்திருந்தாலும் பொண்ணுங்களுக்கு பிடிச்ச நகைச்சுவை இன்னும் வந்த மாதிரி தெரில...ஏன் இந்த மாதிரி ஒரு லவ் அப்ளிகேஷன் போட்டாத்தான் என்ன?

சரியான ஆள் விழுங்கி
உன்னை அல்ல
உன் கண்களை சொன்னேன் ...!!

திருட்டுப்பார்வை பார்ப்பவளுக்கு ,                                            
                               நான்தாங்க  நானேதான்....தெனமும் உங்க பின்னாடியே சுத்துவேனே ரஜினி மாதிரி கருப்பாக...ப்ரைட்டா..சதிஷ்.....செல்லமாக கூப்பிட  ஷ் ...ஷ்....

கண்ணே ,மணியே , காயப் போட்ட   மிளகாய் கனியேன்னு ரைமிங்கா ராவ மாட்டேன்கிற உத்தரவாதத்தோடு எழுதுகிறேன் தொடர்ந்து படிங்க.ஏண்டா என் பின்னாடி சுத்தறேன்னு நீங்க கேக்குறதுக்கு முன்னாடி,ஏன்டி என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி அலைக்கழிக்கிறன்னு கேக்குற எனக்கு பதில் சொல்லுங்க ..உங்களை நான் காதலிக்கிறேன்னு சொல்ல தோணும் ஆனா சொல்ல மாட்டேன்.பயம்லாம் இல்லிங்க. ஒருத்தன் இப்படி நாய் மாதிரி ஒரு பொண்ணு பின்னாடி சுத்தறான்னா அது காதல்தான்னு தெரியாத மக்கு மாமா பெத்த பிள்ளையா நீங்க?

உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு தெரியல .ஆனா பிடிக்காம போகாதுன்னு தெரியும்.ஏன்னா உங்க ஏரியால,உங்க சொந்தத்துல என்னை விட ஒர்த்தா எவனும் இல்லங்கிற உண்மை எனக்கும் தெரியும்.        எத்தனையோ பிகருங்களை பார்த்தாலும் உங்களை மட்டும் இப்படி காதலா காதலிக்கிறேன்னா அதுக்கு காரணம் உங்க அழகு மட்டும் இல்லங்க.வேற என்னன்னு கேக்குறீங்களா? ஏன்னா நீங்க மட்டும்தான் என்னைய திரும்பி பாக்குற ஒரே பொண்ணுங்க.நீங்க மொறச்சி பார்த்தாக்   கூட மொறப்பொண்ணு பார்த்த மாதிரி பீல் ஆயிடுறேன் தெரியுமா ?

பிறந்தோம்னா யாரையாச்சும் கல்யாணம் முடிச்சித்தான் ஆகணும்.நீங்க யாரை கல்யாணம் செய்துகிட்டாலும் சட்டை உள்ளதான் பனியன் போடுவான்.காபி போட்டா காபி பொடிதான் போடுவாங்கிறப்ப என்னையே கல்யாணம் செய்துகிட்டா என்ன?இந்த மொபைல் உலகத்துல இப்பவும் கடிதம் எழுதுறேன்னா என்ன காரணம் ?இந்த கடிதத்தை உங்ககிட்ட சேர்ப்பதே ஒரு த்ரில்லிங்கான விசயம்.அப்புறம் யாருக்கும் தெரியாமல் இத நீங்க படிச்சி பிடிச்சி,இல்லை வெறுத்து ,கிழிச்சி,பதில் கடிதம் எழுதி அது என் கண் வரும் வரை எவ்வளவு சஸ்பென்ஸ் ? வாங்க வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் சுவராஸ்யமா வாழணும்னா என்னை காதலிச்சிதான் பாருங்களேன் .

ஒருநாள் இல்லை ஒருநாள் நீங்க வேறு ஒருவரோடு  நிம்மதியாக உறங்க முடியாத வாழ்க்கை வாழ்வதாக எனக்கு கனவு வந்தால் என்னாலும் கூட நிம்மதியாக உறங்க முடியாது.நமது வருங்கால உறக்கத்திற்க்காகவாவது நாம ஒன்னா வாழணும்ங்க.உங்களுக்காக உங்களுக்கு பிடிச்ச சீரியலை உங்க கூட உக்காந்து பாக்க தயாரா இருக்கேன்.இதுக்கு மேலே என் காதலின் உறுதியை தீவிரத்தை எப்படி சொல்லன்னு தெரியல.

வீட்ல உங்களுக்கு மாப்பிள்ளை தேடி நிச்சயம் செய்து கல்யாணம் செய்து வரதட்சணையா ஒரு பைக்கும் கொடுத்து அதுல நீங்க ஜோடியா போக எவ்ளோ நாள் காத்திருக்கணும்? காதலித்து பாருங்க ...பைக்கோ,பஸ்ஸோ ரெண்டில் ஒன்று இன்றே நிச்சயம்.பல பசங்களை பாக்குற (கடக்கிற )உங்களையே கரெக்ட் (இட் மீன்ஸ் சம்மதம் ) பண்ணிட்டேன்னா உங்களுக்காக ஒரே பையனை தேடும் உங்க வீட்டு மூத்தவங்களை கரெக்ட் பண்றது பெரிய மேட்டரே இல்லிங்க.ஜாதி பிரச்சினையா? போஸ்ட் ஆபிஸ்ல சீ தாலுகா ஆபிஸ்ல நூறு ரூபாய்க்கு மூணு சர்ட்பிகேட் தர்றாங்களாம்.என்ன ஜாதி வேணும்னு சொல்லுங்க...என்னாது வேலையா? நான் பார்த்த வெட்டி வேலையை விட்டுட்டு உங்கள கவனிச்சுக்கிறதுதான் இனி என் வேலையே.நீங்க சம்பாதிக்கும் போது நான் சம்பாதிச்சா அது அதிகப்பிரசங்கித்தனமாகாதா?

300 மில்லி பெப்சியோ கோக் கோ வாங்கி ரெண்டு  ஸ்ட்ரா போட்டு  உறிஞ்சிற கஞ்சக்காதலன் இல்லிங்க நானு...2லிட்டர் பாட்டில்ல நீங்க மூச்சு முட்ட முட்ட குடிச்சது போன மிச்சமான ஒன்றரை லிட்டர் கூல்ட்ரிங்கை வைச்சு வைச்சு குடிக்கிற காவிய காதலனுங்க.....கண்ணாடி பாருங்க....சிரிச்சிகிட்டே படிக்கிறீங்க பாருங்க....இந்த சிரிப்போடேயே வாழணும்னா என்னை நீங்க ஏத்துகிட்டுதான் ஆகணும். போடா லூஸுன்னு நீங்க செல்லமாக திட்டுறது இங்கே வரை கேக்குதுங்க...2லிட்டர் கூல்ட்ரிங்ஸ் குடிக்கலாமா?.

நீங்க என்னை அட்டு பையனாக நினைச்சிங்கனா நாந்தாங்க உங்களுக்கு சரியான ஜோடி.ஏன்னா அட்டு பையனுக்கு சூப்பர் பிகரு அமையணும்.அதுதான் நியதி.திருட்டுத்தனமான பார்வையும் அசட்டுத்தனமான சிரிப்புமா இனிமேலும் இருக்க முடியாது.தீயாகாதலிக்கணுங்க...

வீட்டில் இருப்பது திண்ணை
தோட்டத்தில் இருப்பது தென்னை
தூரத்தில் இருப்பது சென்னை
நான் நினைத்திருப்பது உன்னை.......!!                                         
  -என் சார்பாக யாரோ எழுதியது.

ஒரு வேளை போடா வெண்ணைன்னு நீங்க சொன்னாலும் கூட சிரிச்சுட்டுதான் இருப்பேன் ..........கண்ணீர் அஞ்சலி வால்போஸ்ட்டரில்.......(இங்க நீங்க என்னை செல்லமாக கோவமா என்னோட நெஞ்சுல பட பட ன்னு குத்துறதா நினைச்சிகிடட்டுமா? ப்ளீஸ் )

இப்படி ஒரு திறமையான சுவராஸ்யமான அடிமைசாலி காதல் கிடைக்க எந்த பொண்ணுதான் விரும்பமாட்டா?உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா உடனே உங்க செல் போன் எடுத்து 9469608996 க்கு I love you ன்னு மெசெஜ் அனுப்பினிங்கனா ஒன்னாருவா பணம் போவுமே தவிர எனக்கு மெசெஜ் வராது.ஏன்னா நான் நம்ம ஹனிமூனுக்கு லொக்கேசன் பாக்க இப்ப காஷ்மீர்ல இருக்கேன்.அதனால லெட்டராவே எழுதிடுங்க....                                                
உங்க காதலுக்காக காத்திருக்கும் .. ஷ் ....

ஜட்ஜ் அய்யா,அம்மா, முழுக்க முழுக்க இது என் சொந்த சரக்குதான்....அந்த பிகர சொல்லல லெட்டர சொன்னேன்.

.அந்த பிள்ளை காதலிக்காம போனாலும் பரவால்ல...நீங்க தர்றத வைச்சுதான் நான் '"ஆறுதலாகணும்'" மை லார்ட்...

கயுவி ஊத்துவது மற்றும் காறி துப்புவதற்க்கு காமெடி கும்மியில் தொடர்பு கொல்லவும்.

வாக்காளர்கள் பெருமக்களுக்கு அட்வான்ஸ் நன்றிகள் .

டேப் மூலம் முதல் பதிவிடுகிறேன். எழுத்துப்பிழை பொறுள்க.

புதன், 30 ஜனவரி, 2013

விஸ்வரூபமெடுத்த நான்கு கூமுட்டைகள் - ஆராய்ச்சிப் பதிவு


நான் (இ வா தமிழன்) அனி குட்டன் (பெரியாறு பங்காளி ) நாயக் (காவேரி பங்காளி ) நாயுடு (பாலாறு பங்காளி ) நாங்க நால்வரும் நண்பர்கள்....உச்சா போகணும்னா கூட ஒன்னாதான் போவோம்னு சொல்ல முடியாது என்றாலும் சரக்கடிக்கவும் சண்டை போடவும்  கட்டாயம் இந்த திராவிட நட்பு கூடி விடும்.

இந்த கூட்டத்தில் சரக்கடிக்காமல்,நடப்பன பறப்பன ஊர்வன நீந்துவன போன்றவற்றை நான் மட்டும் சாப்பிட மறுப்பதால் முட்டை மட்டும் சாப்பிடுவதால் எனக்கு இனத்துரோகி(மதராசி) என்று நாமம் உண்டு.(எங்கே போனாலும் இப்படித்தான் சொல்றாங்க )

குடியரசு தின சிறப்பு விருந்தாக இரண்டு மூன்று கோழிகள் உரிக்கப்பட்டு உலை வைக்கும் நேரத்தில் கோழி மீன் ஆடு மாடு பன்னி புறா பூனை என்று என் நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடாத எனக்காக  ஆம்லேட் போடும்போதுதான் அந்த கேள்வி எழுந்தது....முட்டை வெஜ் ஜா? நான் வெஜ் ஜா?

அடிக்கும்  போதை இறங்கும் முன்னேயே ஆரம்பமானது அலப்பறை ஆராய்ச்சி.

அனிதான் ஆரம்பித்தான்  இதுக்கு மொதல்ல ஆன்சர சொல்லு நீ ...
எதுக்கு? முதல்ல கேள்விய கேளுடா முண்டம்..
இவரு முட்டை சாப்புடுவாறாம் ஆனா கறி மீனுன்னா சாப்புட மாட்டாறாம்...அப்படின்னா நீ வெஜ்ஜா நான்- வெஜ்ஜா ?

கேள்விக்கு பதில் சொல்ல கூடாதுன்னா பதில் கேள்வி கேக்கணும் என்கிற இலக்கணம் தவறாமல் நான் கேட்டேன் முட்டை  என்பது சைவமா? அசைவமா? 

உசுரோட உள்ளத கொன்னாத்தான் அசைவம்...முட்டைக்கு உயிர் கிடையாது
அதனால அது சைவம் என்று சும்மனாச்சும் கன்னட  நாயக்  கண்ணடிச்சு கலவரத்துக்கு சுழி போட்டதும் விஸ்வரூபமெடுத்தது ஆராய்ச்சி.

அது எப்படி உயிரில்லன்னு சொல்றே..அதுக்குள்ளே ஒரு உயிர் இருக்கு அதனால அது அசைவம்தான்னு ஆந்திரா நாயுடு  ஆவேசமாகவும்   எனக்கு நல்லா புரிஞ்சிடுத்துச்சு...இன்னிக்கு சாப்பாட்டுக்கு சங்குதான் :) 
கேரளா  அனிகுட்டன் நாயுடுவை பார்த்து அது எப்படிடா முட்டைக்கு உயிர் இருந்தா அது நடக்கணும் கத்தனும் கடிக்கணும் ஒண்ணுமே இல்லைனா வாலாவது ஆட்டனும் ...எதுவுமே இல்லாமா எப்படிடா நீ முட்டைக்கு உசுர் உண்டுன்னு சொல்லலாம்?( மில்லியன் டாலர் கேள்வி )

கன்னட நாயக்  கிளப்பி விட்டாரு அடுத்த கேள்விய..தாவரத்துக்கு உயிர் உண்டா?
கேரளா குட்டன் பட்டுன்னு ஆமா உண்டுன்னு வாயை விட ...அது மட்டும் நடக்கவா செய்யுது ?இல்ல குதிக்கத்தான் செய்யுதா? தாவரத்திற்கு உயிர் உண்டென்றால் முட்டைக்கும் உயிர் உண்டு.கன்னடம்  பெருமிதமா டிக்ளேர் செய்தது.(மில்லியன் டாலர் பதில்)

சற்றே ஆடிப்போன சேட்டன்  பட்டென்று கேட்டது பாருங்க  ஒரு கேள்வி அப்படின்னா தாவரமும் அசைவம்தானே?
உசுரோட உள்ளத கொன்னு தின்னா அசைவம்னா தாவரமும் உசுர்தான்யா...என்னப்பு சொல்றீங்க? #@$&!@

சிந்தனையை தூண்டியதில் ஆந்திரா நாயுடுக்கு  பளிச் என்று ஒரு எண்ணம்....எது ரத்தம் சிந்துதோ அதுதான் அசைவம் ..ரத்தம் இல்லாதது சைவம்.பயபுள்ளைக்கு உடம்பெல்லாம் மூளை.

சேட்டன்  விட்டாத்தானே... அப்படின்னா பால் என்பது சைவமா? அசைவமா?

அதுல எந்தோடா பிரச்சினை?அது சைவம்தன்னே என்று அமைதி செய்தால் கேட்டாத்தானே 

பால் என்பது பசுவின் ஒருவகையான ரத்தம் போலத்தான்....எனவே பால் அசைவம் என்று அறிவிக்கப்படவேண்டும்.என்னை என்ன படிக்காதவன்னு நினைச்சிங்களா?பிளஸ் டூ பாஸ் தெரியும்ல...சேட்டன் படிப்பாளி.

ம் ஹூ ம் நாங்க யாரும் ஒத்துக்கல...பால் என்பது சைவமே..அப்படின்னா சைவம் ,அசைவம் என்பதை எதைக் கொண்டு பிரிக்கலாம்? அர்த்தப்படுத்தலாம்?

ரெண்டு மூணு ரவுண்டுக்கு பின்னர் கன்னடத்தான் ஒரு அற்புதமான கருத்தை முன் வைத்தார்.மிருகங்களை கொன்று விட்டால் அவை திரும்பி வருவதில்லை...தாவரங்கள் அப்படியில்லை திரும்ப திரும்ப தந்து கொண்டே இருக்கும் எனவே தாவர இனம் சைவம்...இறந்து போகும் மிருகங்கள் அசைவம்.

அது எப்படி சரியாகும்?மிருகங்க்ள கூடத்தான் குட்டி போட்டு குட்டி போட்டு உணவு தருகிறது.அதனால இது செல்லாது செல்லாதுன்னு  மொத்த விஞ்ஞானிகளும் கவுண்டர கொடுக்க  ஒரே யோசனை..

நீங்களே சொல்லுங்க பாஸ் சைவம்னா எது?அசைவம்னா எது?எதை வைத்து பிரிக்கலாம்?

கட்ட கடைசியில் காவேரி இப்படி ஒரு பாயிண்ட்டை வைப்பான்னு எதிர்பார்க்கவே இல்ல.அதாகப்பட்டது 
பிராமணர்கள் எதை எல்லாம் சாப்பிட்டாங்களோ சாப்புடுறாங்களோ அதுலாம் சைவம்.
எதையெல்லாம் சாப்பிடல்லியோ அதுலாம் அசைவம்.

நான் ஒத்துகிடலயே  சேட்டனும்  ஒத்துகிடல...அப்படின்னா வெங்காயம் பூண்டை கூடத்தான் பிராமணர்கள் சாப்பிடுவதில்லை அதுலாம் கூட அசைவமா?

பிராமணர்கள் பால் குடிக்காங்க முட்டை சாப்பிடுவதில்லை...அதனால அவங்க உணவு முறையெல்லாம் இதுக்கு விடையாகாது.அதிலும் வெளிநாட்டில் எவரை வைத்து அர்த்தம் கொள்வது?

ஒரு கிழட்டு மங் (OLD MONK)பாட்டில் முடியும் போது ஜன்னலுக்கு வெளியே மேய்ந்து கொண்டிருந்த மாட்டை வைத்து அடித்து விட்டேன் "ஆடு மாடு சாப்பிடும் இலை தழை இதர இதரவெல்லாம் சைவம்... மிச்சம் எதுலாம் உள்ளதோ அதுலாம்  அசைவம்"

ஏறின போதை இறங்க கூடாது என்ற நல்லெண்ணமா இல்லை பாட்டில் காலியான நேரமா தெரியவில்லை  என் வில்லேஜ் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளை நிறுத்தி கொண்டனர். திரும்பவும் என்னைக்கு ஆரம்பிப்பாங்களோ தெரியல....நீங்க என்ன சொல்றீங்க?

என்னது சரக்கடிச்சிட்டுதான் சொல்வீங்களா? மது அருந்துவது நாட்டுக்கும் வீட்டுக்கும்  உடல்நிலைக்கும் கேடு.


சில முக்கிய குறிப்புகள் :
ஆராய்ச்சி நடத்திய நாங்கள் நால்வருமே நான்கு மாநிலத்தை சேர்ந்தவர்களே.

இது முழுக்க முழுக்க கற்பனை கதை இல்லை.

மதியம் முதல் இரவு வரை நடந்த இந்த விவாதத்தை நீயா நானாவில் ஒளிபரப்ப  அந்தோணி அவர்களிடம்  பேச முடிவு செய்துள்ளேன்.

இந்த மொக்கை பதிவின் எதிரொலிகளை அவர்களுக்கே டெடிகேட் செய்கிறேன் ..ஏன்னா இத இன்னிக்கு எழுதியே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள்.

பிளேடு பீடியா கார்த்திக்கு மேற்சொன்ன முட்டை நண்பர்களில் ஒருவரை தெரியும் (கார்த்தி என்ன கலெக்டரா?னு கேக்க கூடாது)

இந்த ஆராய்ச்சி மற்றும் விவாதங்கள் அனைத்தும் ஆசிரியருக்கே சொந்தம்
மத்தவங்களுக்கு வாடகைக்கு..

அவதானிப்பவர்கள் தங்கள் எண்ணங்களை கருத்து பெட்டியில் அரசனை போல இடலாம்.

பதிவை விட குறிப்புகள் நீளமாக இருக்க கூடாது என்பது பிளாக்கர் நண்பனின் அறிவுரை.எனவே டாட்.
                                                                     .சுபம்.