நண்பன் ஹாரி கேளுங்க அப்படின்னு கேள்வி பதில் தளம் ஒன்றை புதுசா அறிமுகம் செய்ய ...ஒரு ஆர்வகோளாரில் நான் அஸ்ஸாம்,காஷ்மீர் பற்றிய கேள்விகளுக்கு இங்கு பயிற்சி பெறும் அந்த மாநிலத்து பசங்ககிட்ட பதில் வாங்கி தருகிறேன் ..பதிவர்கள் கேள்விகளை வரவேற்கிறேன்ன்னு ஹாரிட்ட சொல்லி வைச்சேன்.
ஒருவேளை
நினைப்பதைச் சொல்லாமல்
சொல்லவேண்டியதை நினைத்திருப்பேனா?
சொன்ன சொற்கள்
சொல்லாத சொற்கள்
சொல்ல நினைத்த சொற்கள்
சொல்ல மறந்த சொற்கள்
எல்லாச் சொற்களும் ஏய்க்கின்றன
எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது
யானைப்பாகனின் பயத்தைப்போல
பாம்புப்பிடாரனின் பயத்தைப்போல
வெடிகுண்டு செய்பவனின் பயத்தைப்போல.
எப்படியோ இன்னைக்கு ஒரு பதிவை தேத்தியாச்சு ........:):)
அவரும் உங்கள் கேள்விகளுக்கு "ஹாய் சதீஷ்" (!!??)பதில் தருகிறார்னு போர்டு போட....அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு அவரே சொல்லுகிறார் கேளுங்க ....
###மோசமான தகவல் என்ன என்றால் இது குறித்து எனக்கு கிட்டத்தட்ட கருத்துரையில் வெளியிட முடியாத ஆபாச வார்த்தைகளே வந்து குவிந்து கொண்டு இருக்கின்றன.. சி.பி க்கு மூன்று பதிவுகள் தேத்தும் வண்ணம் கேள்வி வந்து விட்டது.. ஆனால் இந்த பகுதிக்கு மிக அபத்தம் நிறைந்த கேள்விகள் தான் வருகின்றன.. தம்பி அண்ணா (தம்பியா அண்ணாவா.. ஹி ஹி) உங்களுக்கு வந்த கருத்துரைகள் தான்.. என்ன கொஞ்சம் நாலு ஸ்பூன் கெட்ட வார்த்தை அரை டி காசன் ரொம்ப ஆபாச வார்த்தை அதிகம் .. அப்படி தான் வருகிறது.. இப்போது வரை.. நான் நாலு பதிவு எழுதி விடுவேன் அவ்வளவு பந்தி அமைப்பில் கருத்து வருகிறது.. சோ சேட்.####.
இதுக்கு பேர்தான் "கேட்டு வாங்குறதுனு" சொல்வாங்களோ?
முந்தய பதிவுகளின் விளைவுகளே இந்த அர்ச்சனைகளுக்கு காரணம் என்று நினைக்கிறேன்.ஆனாலும் இந்த கைப்பிள்ளை களம் இறங்கிட்டா ரத்தம் பார்க்காம வர மாட்டான் (யாரோட ரத்தம்?).எனவே பதிவுலக கண்மணிகளே தங்களின் மேலான கேள்விகளை ஆபாச டீ ஆத்தாமல் கேளுங்க தளத்தில் அனுப்பும்படி கேட்டுக்கொள்(ல்)கிறேன்.
இது ஒரு புரிதலையும்,ஊடகப் பார்வைகளை ஆராயவும் சற்று வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.
ஆபாச டீ ஆத்தும் நண்பர்களுக்கு சொல்லி கொள்வது என்னவென்றால் ...உங்களுக்காகத்தானே கடை போட்டு உட்காந்துள்ளேன்.இங்க வந்து ஆத்துறது?அப்படி சுத்தி வளைச்சு ஆத்துரதுல என்னப்பா ஆனந்தம்?
சொற்குற்றம்-
சுகுமாரன்
யாரிடமும் எதுவும் பேசப் பயமாக இருக்கிறது
யாரிடமும் எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது
சொன்னதைச்
சொல்லவேயில்லை என்கிறார்கள்
சொல்லாதைச்
சொன்னதாகச் சொல்கிறார்கள்
நினைத்ததைச்
சொன்னதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்
சொன்னதை
நினைத்துக் கொண்டிருந்ததாகக் குறைப்படுகிறார்கள்
ஒருவேளை
சொல்லவேண்டியதை நினைக்காமல்
நினைப்பதைச் சொல்லியிருப்பேனா?
யாரிடமும் எதுவும் பேசப் பயமாக இருக்கிறது
யாரிடமும் எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது
சொன்னதைச்
சொல்லவேயில்லை என்கிறார்கள்
சொல்லாதைச்
சொன்னதாகச் சொல்கிறார்கள்
நினைத்ததைச்
சொன்னதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்
சொன்னதை
நினைத்துக் கொண்டிருந்ததாகக் குறைப்படுகிறார்கள்
ஒருவேளை
சொல்லவேண்டியதை நினைக்காமல்
நினைப்பதைச் சொல்லியிருப்பேனா?
ஒருவேளை
நினைப்பதைச் சொல்லாமல்
சொல்லவேண்டியதை நினைத்திருப்பேனா?
சொன்ன சொற்கள்
சொல்லாத சொற்கள்
சொல்ல நினைத்த சொற்கள்
சொல்ல மறந்த சொற்கள்
எல்லாச் சொற்களும் ஏய்க்கின்றன
எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது
யானைப்பாகனின் பயத்தைப்போல
பாம்புப்பிடாரனின் பயத்தைப்போல
வெடிகுண்டு செய்பவனின் பயத்தைப்போல.
எப்படியோ இன்னைக்கு ஒரு பதிவை தேத்தியாச்சு ........:):)
| Tweet | |||||
.jpg)

.jpg)