Translate

இலங்கை.ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை.ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 அக்டோபர், 2012

இந்தியா வந்த இலங்கை கலைஞர்களிடம் Missed Call கேட்ட பதிவர்

JODHPUR RIFF என்ற ஒரு நிகழ்ச்சி.நம்ம சென்னை சங்கமம் மாதிரி ராஜஸ்தானின் கலாச்சார நிகழ்ச்சிகளை இன்றும் செல்வாக்காக இருக்கும் ஜோத்பூரின் மகாராஜா வம்சம் அக் 26 முதல் 29வரை நடத்துகிறது.நேற்று 26 ம் தேதி மாலை முதல் நிகழ்ச்சியை முக்கியமான பஜாரின் நடுவே நடத்தியது.வெளிநாட்டினர் ரசிக்கும் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்று இது.

இதே இடம்..இதே கூட்டம் ...(கடந்த வருட படம்.)
எதேச்சையாக இரவு 9.30க்கு சென்ற எனக்கு அந்த நிகழ்ச்சிகள் ரசிக்க வைத்த நிலையில் அடுத்த நிகழ்ச்சி இலங்கையில் இருந்து வந்துள்ளவர்களுடயது என்ற அறிவிப்பு சற்று கடுப்பை கிளப்பியது.

என்ன செய்ய முடியும்?வெளிநாட்டினர் பலர் கூடியுள்ள நிலையில் இலங்கையின் நிகழ்ச்சியோடு இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு எதிராக இலங்கைக்கு அழுத்தம் தர அம்னெஸ்டி MISSED CALL மூலம் வாய்ப்பளித்துள்ளதை பரப்ப அந்த கனம் முடிவு செய்தேன்.நிகழ்ச்சி நடக்கும்  இடத்தில் இருந்து  விலகி பேனா தேடி  கடைசியில் மெடிக்கல் கடை ஒன்றில் பேனா வாங்கி கீழே கிடந்த சட்டை துணி அட்டைகளில் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் MISSED CALL  AGAINST SRILANKA WAR CRIME  O8067006666 என்று அவசரம் அவசரமாக எழுதி ஓடினேன்.

நான் செல்லவும் தனது நிகழ்ச்சியை முடித்து மேடையை விட்டு இலங்கையினர் கீழிறங்கவும் சரியாக இருந்தது(ஐந்தே நிமிடம்தான்) எனக்கு அடுத்து என்ன செய்ய என்று புரியாத நிலையில் டக்கென்று அவர்களிடம் ஒருவனிடமே  ஒரு அட்டையை கொடுத்து விட்டேன்.ஆவலோடு வாங்கினவன் முகம் சட்டென்று சுருங்கி பின்னே உள்ள திரை மறைவுக்கு சென்று விட்டான்.

நான் வெளிநாட்டுகாரர் ஒருவரிடம் அட்டையை காட்ட அவர் எதுவும் சொல்லவில்லை.இந்தியாவின் பணக்கார ரசிகர் ஒருவர் பு சிரிப்பை உதிர்த்து வைத்தார்.மற்றபடி அனைவரும் நிகழ்ச்சிகளில் லயித்திருந்தனர்.
திரை மறைவில் இருந்து வெளியே வந்த இலங்கயினருக்கு எதிரில் தைரியமாக(????) என்னிடம் இருந்த இன்னொரு அட்டையை தாங்கி நின்று கொண்டேன்.உள்ளிருந்து மற்றவர்களும் வெளியே வர நான் அசையவில்லை.அவர்கள் கையில் நான் தந்த மற்றொரு அட்டை ..உள்ளுக்குள்ளே பேசி கொண்டனர்.என்னை காணாதது போல அந்த அட்டையை கையோடு எடுத்து கொண்டு ஒருங்கிணைப்பாளரிடம் (அப்படித்தான் நினைக்கிறேன்) காட்டி பேசி கொண்டிருக்க எனக்குள் திடீர் பயம்.

என்னிடமிருந்த அட்டையை ஸ்பீக்கர் அருகே சாத்தி வைத்து விட்டு அங்கிருந்து  அகன்று(நழுவி) பஜாரின் வாயிலுக்கு வந்த போது மறுபடி ஒரு தைரியம்....தப்பா செய்கிறோம்?மறுபடி அட்டை தேடி வேகமாக எழுதி பஜாரின் வாயிலில் உயர்த்தி பிடித்து நின்று கொண்டேன்.வெளிநாட்டினர் படித்து சென்றனர்....ஆனால் மிஸ்ட் கால் செய்ததாய் தெரியவில்லை.நடைபாதை கடைகளில் வேலை பார்க்கும் சிலர் விசாரித்தனர் எடுத்து சொன்னேன்.கேட்டு கொண்டார்கள் ஆனால் மிஸ்ட் கால் என் முன்னால் யாரும் கொடுக்கவில்லை.ஒருவர் நெருங்கி வந்து நீங்க தமிழ் நாடா என்றார்?ஆர்மியா ?என்று விசாரித்து விட்டு வெறுமனே சென்றார்.

மொத்த கூட்டமும் வடிந்த பின் என் பைக்கை எடுக்கும்போது அருகில் இருந்த இருவர் கேட்டனர் நீங்க தேடின ஆள் கிடைச்சாரா? (பல்ப்!!).....இரண்டு நிமிட செலவழிப்பில்  விஷயத்தை எடுத்து சொல்ல உடனே தனது கைபேசியில் இருந்து என் முன்னேயே அவர்களில் ஒருவர் ஒரு மிஸ்ட் கால் கொடுக்க....ஜென்ம சாபல்யம்.

ஒற்றை ஆளாக அந்த கூட்டத்து நடுவில் இலங்கை குழுவின் மனதில் எங்கு போனாலும் தமக்கு எதிர்ப்பாக யாராவது எழுந்து நிற்கிறார்கள் என்ற எண்ணத்தை விதைத்ததையும்,இலங்கைக்கு எதிராக  ஒரு மிஸ்ட் கால் சம்பாதித்த மகிழ்ச்சியோடும் பத்திரமாக வீடு வந்தேன்.

நீங்க MISSED CALL கொடுத்திட்டிங்களா?இல்லைனா இப்போதே கொடுங்களேன்... O8067006666 
இன்னும் இலங்கையின் நிகழ்ச்சி பாக்கி உள்ளது.ஆனால் அது உள்ளரங்கில் நடைபெறும். RIFF'12 LINE UP

Main Stage Performances
from 8.00 PM
Old Zenana Courtyard (in Mehrangarh Fort)
Entry pass @ Rs. 1100.00 only
Parveen Khan (Maand, Hindustani classical vocal, with Sarangi and Tabla – from Rajasthan) and special guestRhys Sebastian (Saxophone – from Mumbai).Rakitha Wickramaratne and Naadro (traditional, African, Latin percussion - from Sri Lanka)
Collaboration with Rajasthani percussionists
Rakitha Wickramaratne is a sensational young percussionist who formed the band Naadro with other hot percussionists from Sri Lanka. One of the few Asian artists considered a young master of Latin percussion, Rakitha will collaborate with young Rajasthani percussionists to create a foot thumping and heart-warming performance on the last evening at RIFF. Then Naadro take the stage to reveal their own brand of fiery percussion, followed by a finale with all Sri Lankan and Rajasthani artists on stage.
Naadro are among the hottest talent in percussion in South Asia and are fast emerging as a sensational act on stage.    
This will be Naadro’s first full public concert in India

இது போன்ற நிகழ்ச்சிகளை நாம் எதிர்ப்பது என்பது கலையை எதிர்ப்பது அல்ல.இனவெறிக்காக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி பல வருடங்களாக உலக அரங்கில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.அது போலதான் இதுவும்.புறக்கணிக்கும்போதுதான் உணர்வார்கள்.கல்லெறிந்து கலைப்பதை போல இதுவும் ஒரு வகையில் எதிர்ப்பு குரலே.

நீங்க முடிந்தால் JODHPUR RIFF ன் .FACE BOOK சுவற்றிலும்,TWITTERரிலும்  இலங்கையை புறக்கணிக்க சொல்லி அழுத்தம் தரலாமே.வடக்கே உள்ளவர்களின் மீதான கவன ஈர்ப்பாகவும் , இலங்கைக்கு புறக்கணிப்பையும் ஒரே நேரத்தில் செய்யலாம் என எண்ணுகிறேன்.

மொக்கையான  கைபேசியின் காரணத்தினால் புகைப்படம் எதுவும் எடுக்க இயலவில்லை.