Translate

ENGLISH VINGLISH லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ENGLISH VINGLISH லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

இங்கிலீஷ் விங்க்லிஷ் -ஒரு ஜட்ஜ்மென்டல் பார்வை

ENGLISH-விங்க்லிஷ்(E V) ....ஹீரோயிச தென்னிந்திய சப்ஜெக்ட்களை வைத்து கல்லா கட்டும் இந்தி உலகில்  முழுக்க முழுக்க ஹீரோயின் கதையை எடுத்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் கெளரி சிந்தே..


ஒரு நடுத்தர இல்லை சற்று உயர் நடுத்தர குடும்பத்து தாய் தன் பதின் வயது பிள்ளையோடும்,கணவரோடும் ஆங்கில மொழி அறியாமையால் அவமானப்படுவதும் அதை ஜெயிப்பதுமான பஸ் டிக்கெட் கதையை ஸ்ரீ தேவி முதுகில் ஏற்றி சிந்தாமல் சிதறாமல் சுபமாக முடித்துள்ளார் இயக்குனர் கெளரி சிந்தே..

ஆங்கிலம் தெரிந்த பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் கடமையாற்றுவதோடுஅங்கங்கே லட்டு செய்து விற்பனை செய்து சந்தோசப்படும் ஒரு அச்சு அசல் இந்திய பெண்மணியாக ஸ்ரீதேவி.ஜஸ்..ஜாஸ் என்று ஸ்ரீதேவியின் ஆங்கிலத்தை கிண்டல் பண்ணும் மகள்,மகன் மற்றும் கணவன்.

தனது அக்கா மகள் திருமண உதவிக்காக  தனியாக நியூயார்க்  செல்லும் ஸ்ரீதேவி, வீடு முதல் வெளிநாடு வரை  வரை அனுபவிக்கும் ஆங்கில பிரச்சனைகளால் நான்கே வாரங்களில் ஆங்கிலம் கற்று கொடுக்கும் வகுப்பில் சேருகிறார்.ஆங்கிலம் படிச்சாரா?அவரை அங்கே சற்று சிறப்பாக கவனிக்கும் பிரெஞ்ச் ஆணிடம் சலனப்பட்டாரா? வெள்ளித்திரையில்...

மொத்த படத்தையும் வியாபித்திருக்கிறார் ஸ்ரீதேவி,ஸ்ரீதேவி ,ஸ்ரீ தேவி.காபி போடுவதில் ஆரம்பிக்கும் படத்தின் முதல் காலை காட்சியிலும் தண்ணீர் பாட்டிலை கணவனுக்கு பின்னேயே எடுத்து கொண்டு போகும் இரவு காட்சியிலும்  ஒட்டு மொத்த இந்திய பெண்களின் வாழ்வியலை ஸ்ரீதேவி மூலம் எளிதாக அறிமுகம் செய்து விடுகிறார் இயக்குனர்.

அறிமுக சீனில் பிடிக்க மறுக்கும் ஸ்ரீ தேவி அப்புறமாக பிடித்து கொண்டே போகிறார்.சற்றே மெதுவாக செல்லும் திரைக்கதையை இயல்பான நச் வசனங்கள் தூக்கி நிறுத்துகின்றன.

"சே மறந்துட்டேன்...முக்கியமான மீட்டிங்னா இங்கிலிஸ்ல தானே பேசணும்"

"PTM னா என்னன்னு தெரியுமா ன்னு கேக்குற மகளிடம் அதே வீச்சில் PTMனா தெரியாது, ஆனா PARENTSக்கு அர்த்தம் தெரியும் "

"நாம் குழந்தைகளை அவமனப்படுத்துவதில்லை,அவர்கள்தான் நம்மை அவமானங்களாக கருதுகின்றனர்."

"த UNITED STATES OF AMERICA "என்று சொல்லும் போது "த INDIA"  என்று ஏன் சொல்ல கூடாது?"

அமிதாப்,(தமிழில் அஜீத்) ஏர்போர்ட்டில் பர்பஸ் கேக்கும் இடத்தில் அடிக்கும் நக்கல் ஆங்கிலத்தில் என்பதால் எனக்கு சரியாக புரியவில்லை..ஆனால் தியேட்டரில் பலத்த சிரிப்பொலி.

மெல்லிய சிரிப்பை கொடுக்கும் வசனங்களோடு அதிரடி சிரிப்பாய் வந்த வசனம்"சூப்பர் மேன் ஜட்டியை உருவிய ரஜினிகாந்த்"   "HERE ALSO ITLY"...

கட்டிப்பிடி கலாச்சாரத்திற்கு ஸ்ரீதேவியின் கேள்வியும்,அவர் கணவரின் அடுத்த நாள் செயலும் "நச்".

இப்படி பல வசனங்கள் காட்சிகள் இயல்பாக கைகொடுக்கும் அதே வேளையில் கூடவே காமிராவும் அழகாக பயணம் செய்கிறது.ஆரம்ப காட்சிகளில் க்ளோஸ் அப் ஷாட் வைத்தது எரிச்சலை தந்தாலும் பெட் ரூமில் உள்ள ஒரு டாப் ஆங்கிள் ஷாட், ,காபி ஷாப்பில் இருந்து வெளியே வரும் ஸ்ரீதேவியை போலவே அவரின் சுற்று சூழலையும் பதட்டமாக காண்பிக்கும் சீன் ....சில நேரங்களில் பாத்திரத்தின் பின்னேயே நகரும் காமிரா...பளிச்.

உறுத்தாத இசை..அதற்கு மேல என்ன சொல்ல?டைட்டில் இசை மெதுவாக ஆரம்பித்து ஸ்ரீ தேவி பெயர் வரவும் சட்டென்று பீட் மாறி  15  வருட இடைவெளிக்கு பின் வரும் ஸ்ரீதேவி என்று சொல்லாமல் சொல்லும்போதே தன்னை படத்தோடு இணைத்து கொண்டுள்ளது.


பிரெஞ்ச் மனுசனா வர்ற நேப்யு ...மனுஷன் கொஞ்சமா பேசி நிறைய நிறைய  சிக்ஸ் அடிக்கிறார்.மிக எளிதாக பெண்களை கவரும் அழகு...

ரயில் நிலைய செக்யுரிட்டியை ஒரு புன்னகையில் நியாபகப்படுத்துவதும்,ஓரின சேர்க்கை பற்றிய அரைநிமிட காட்சியும் என போகிற போக்கில் பவுண்டரிகளை விளாசுகிறார் இயக்குனர்.

ஜட்ஜ்மெண்டல் கணவனுக்கு MAY I  என்று ஆரம்பித்து சினிமாத்தனமாக பட பட  ஆங்கிலம் பேசாமல் நிதானமான ஆங்கிலத்தில் பேசும் ஸ்ரீ தேவியின் இறுதி காட்சியோடு இயல்பாக படம் முடிகிறது என்றாலும் இதை போல படங்கள் தொடர வேண்டும் ....

குறையே இல்லையா? ட்விஸ்ட் என்று எதுவும் இல்லாமல் மெதுவாக நகரும் படம் என்றாலும் ஸ்ரீதேவியின்  வகுப்பு நண்பர்கள் அதை சற்று சரிசெய்து விடுகிறார்கள்.மிக பெரிய பலவீனம் ஆங்கிலம்.படம் முழுக்க ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம்..வசனங்களின் பலத்தோடு உள்ள திரைக்கதையில் அந்த வசனங்கள் பலருக்கு புரியாமல் போனால்?இதை ஆங்கில படமாகவே கூட எடுத்திருக்கலாம்.

ஒரே ஒரு தடவையாவது பார்க்கணும்.நாம் மொழியாலோ இல்லை வேறு ஏதோ ஒன்றாலோ எங்கேனும் கட்டாயம் சில சங்கடங்களை அன்பவித்திருப்போம்...ஷூ க்கள் நிறைந்த கூட்டத்தில் செருப்போடு...தங்க தாலிகளின் மத்தியில் மஞ்சள் கயிறோடு.....பிரம்மாண்ட ஷாப்பிங் மாலில் முதன் முறை நுழையும் போது...இப்படியான உள்ளுணர்வை பிரதிபலிக்கும் பாத்திரம் என்பதால் நாம் ஸ்ரீதேவியோடு ஒன்றி விடுகிறோம்.

குடும்பத்தோடு எந்த உறுத்தலும் இல்லாமல் தாராளமாய் தியேட்டரில் போய் பார்த்து வரலாம்.அதனால அழுதுகிட்டே இருப்பாங்க என்று நினைக்க வேண்டாம்.இங்கிலீஷ் தமிழ் ஹிந்தி என்று அனைத்து இடங்களிலும் EV கேட்க விரும்புவது "மனைவிக்கு மரியாதை". உங்கள் மனைவிக்கு உங்களை விட  அதிகமாக பிடிக்கும்.இது பெண்கள் காலம்  ...மரியாதை செய்யுங்கள்.

இதன் TRAILORக்கு  முக நூலில் வந்த ஒரு பெட்டிசனை வைத்து முழுக்க முழுக்க ஹிந்தியை வைத்து மாநில மொழிகளை சிதைக்க வரும் படமாக அமையலாம் என்ற எனது தவறான ஜட்ஜ்மென்ட்டல் மனதோடுதான் படத்திற்கு சென்றேன்.அதனால்தான் ஜட்ஜ்மெண்டல் பார்வை என்ற தலைப்பு.

ஆனால் பெட்டிசனில் உள்ளது போல தேசிய மொழி இந்தி என்பதை ஓரிரு இடத்தில் EV கூறுவதையும் கவனிக்க முடிந்தது.அந்த பெட்டிசன் பார்க்க இங்கே சுட்டுங்கள்.


மயிலு மறுபடியும் சத்தமா சொல்லலாம்..."ஆத்தா நான் பாசாயிட்டேன்" "AATHTHAA I WON".