Translate

AGRA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
AGRA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 நவம்பர், 2012

தாஜ்மஹால் மும்தாஜின் சமாதியா?சிவன் கோவிலா? சர்ச்சையை கிளப்பும் ஆதாரங்கள் உண்மையா?

ஒண்ணுமே புரியல..தேர்தல் வரும் நேரம்,மோடி வேறு பிரதமர் கனவில் லயித்திருக்கும் வேளை இந்த செய்தி வேறு பயம் காட்டுகிறது.ஏற்கனவே தேசிய மொழி இந்தி,தேசத் தந்தை காந்தி என்று பள்ளியில் படித்தவை உடைபடும் வேளை மும்தாஜ்க்காக ஷாஜஹான் கட்டிய காதல் சின்னம் என்று பள்ளியில் படித்த வரலாறு உண்மையா பொய்யா?

கீழே உள்ள தகவல்கள் முகநூலில் வந்த பதிவாகும்..அதை அப்படியே தருகிறேன்.கீழே அதற்கு பதிலாக சில கேள்விகளை எழுப்புகிறார் Dr Mayank என்பவர்....

புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்.....

காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட் டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல் லோரும் நம்பிக்கொண்டு இருக்கி ன்றோம். ஆயினும்

இது ஒரு பழைய சிவன்கோ வில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

தாஜ்மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ள து, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.

ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொ ண்டார் என்றும் ஷாஜகான் மன்ன ரின் சொந்த வாழ்க்கைக் குறிப் பான பாத்ஷா நாமாவில் ஆகரா வில் மிகவும் அழகான மாளிகை யை மும்தாஜின் உடலை அடக்க ம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடு த்தமை குறித்து குறிப்புக்கள் உள் ளன என்றும் பேராசிரியர் கூறுகி ன்றார்.

இச்சிவன்கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப் பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசி ரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்ன ர்கள் மற்றும் இராணிகள் ஆகி யோரின் உடல்களை வழக்கமா க புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூ ன், அக்பர், எத்மத் உத்தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்க ள் புகைக்கப்பட்ட இடங்கள் இத ற்கு சான்று என்கிறார் பேராசிரி யர்.

தாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கா னிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எக்கட்டிடத்துக்கும் கி டையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவா க ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்துமு ம் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்தி ரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத் தி இருக்க வேண்டும்? என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வி யை கேட்கி ன்றார்.

தாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தி ல் புனையப்பட்ட பொய்தான் சாஜகான் –மும்தாஜ் காதல் கதை என் கின்றார். நியூயோர் க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ் மஹா லின் மாதிரிகளை எடுத்து கார்ப ன் டேட்டிங் முறைப்படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தா ர். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங் களுக்கு மேல். இதையும் பேரா சிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணி யான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திரு ந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி வித ந்து எழுதப்பட்டு இரு க்கின்றன, ஆனால் தாஜ் மஹா ல் கட்டப்படுகின்றமை சம்பந்த மாக எக்குறிப்புக்களும் இடம் பெற்று இரு க்கவில் லை.

ஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணி யான பீட்டர் மண்டி ஆக்ரா வந்தி ருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலை நயம் பற் றி விதந்து எழுதப்பட்டு இருக்கி ன்றது. ஆனால் இன்று சொல்லப்படு கின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல் லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதா ரங்களாக முன்வைக்கி ன்றார் பேராசிரியர் ஓக்.

தாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக் கு இன்னமும் அனுமதிக்கப் படவில்லை, காரணம் கேட் டால் பாதுகாப்பு என்று சொ ல்லப்படுகின்றது, தாஜ் மஹா லினுள் தலையில்லாத சிவ ன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரி யர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக்கோவில் என்பது தெ ளிவாக தெரிகின்றது என்கிறார்.

பேராசிரியர் இவ்வளவு விபரங்களை யும் தாஜ் மஹால்–உண்மையான வர லாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆ னால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலை மையிலான அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

உண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசி ரியர்.




இதுகுறித்த புகைப்படங்களையும்,வாதங்களையும் காண இங்கே சுட்டுங்கள் Taj mahal :Was it a Vedic Temble? The Photographic Evidence 

இது குறித்து BBC யில் வந்ததாக ஆங்கிலத்தில் வந்த பதிவிற்கு  வந்த இரண்டு பின்னூட்டங்கள்....


66. Dr Mayank  |  June 25, 2009 at 11:32 am
May b there is a secret there my questions are—-
1-How come the last mason hammered the burj to make a drop of water fall at the so called kabr of dead queen?
2-Shiva temple also always has nandi ganesh parvati ma and others ..
3-Where are the snakes ?
4-OK the top of the tomb has half moon and kalash with nariyal…!!!! but is it there on other shiva temples also…
5-trident of lord the almighty…
6-Stone is white it is not naturally found in agra’ and in the near by area.. why and how it was transported…
7-What about the figures given by historians regd the duration of constructuion and money spent in constuction?
8- There must be some old story of shiva worship in agra….at temple….why it is not there known to alll……
9-it is a temple than why the tomb is like circular in shape…it should be trapheziod flag is not there no provision to put flag also all temples have flags or provision for it
I AM A DEVOTEE OF LORD SHIVA I BELIEVE IN HIM IF IT IS HIS WILL HE WILL DEFINITELY LET THE TRUTH COME OUT BUT U MUST ANSWER THE ABOVE….
48. Chetan  |  February 13, 2009 at 3:42 pm
You are all wasting your time reading this.
oak’s plea has been rejected by the supreme court of india long ago.
Now don’t cry “this is vote bank politics” again.
The judges aren’t idiots.
Nor is the rest of the world.
some crazy professor says somethings and all “Hindu patriots’ come praise him.
just goes to show what sense of nationalism we have after all these years.
We still fight over the same things that resulted in British occupaionof India
பெரும்பான்மையான புகைப்படங்கள்(நான் பார்த்தவரை) இந்து மத அடிப்படையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்திய,மொகலாய கலைகள் சேராமல் இருக்க வாய்ப்பில்லையே.எனவே அது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை.ஆனால் சில வருட குறியீடுகள் வித்தியாசங்கள் குறித்த விடயங்கள் அடியேனுக்கு புரியவில்லை.(ஆங்கிலக் குறைவு !!)அவை குறித்து நீங்கதான் ஆராய்ச்சி செய்து பதில் சொல்லணும்.

மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தி தமிழ்ப்பதிவுலகம் இது குறித்து தகவல்களை தெரிவிக்குமா? ஏனென்றால் இப்படி ஆரம்பிக்கும் பரப்புரைகள் நாளை மாபெரும் ரத்த பலிகளை கொடுக்க வாய்ப்புள்ளது.பாபர் மசூதி இடிப்பும் விளைவுகளுமே அதற்கு சரியான எடுத்துக்காட்டு..கூடவே ஓட்டரசியல் செய்யும் கட்சிகளுக்கு இது சக்கரைக்கட்டி செய்தி.உண்மை எதுவாயினும் மக்கள் புரிந்துணர உங்கள் தகவல்கள் பயன்படட்டும்.

உங்கள் தகவல்களை மேலே  உள்ள இரு தளத்திலும் ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள்...அனைவரும் புரிந்து கொள்ளட்டும். தாஜ்மஹாலின் வெண்மைக்கு சிகப்பு ரத்தங்கள் சிந்தாமல் புரிதல் உருவாகட்டும்.இதனை இந்து-முஸ்லிம் பிரச்சனையாக மாற்றாமல் உண்மையை மட்டும் தேடினால் நலம்.

இது குறித்து தமிழக மஞ்சள் பத்திரிகை ஒன்றில்......மன்னிக்கவும் ..குமுதத்தில் செய்தி வந்ததாக முகநூல் பின்னூட்டம் ஒன்று தெரிவிக்கிறது.