Translate

பதிவர் அழைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் அழைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 செப்டம்பர், 2012

அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் ஒரு முக்கிய அழைப்பு


இன்று தமிழ் நாட்டின் தென் மாவட்ட கடலோரம்  அகிம்சையாக நடக்கும் போராட்டமான அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை வன்முறை களமாக மாற்றிய அரச பயங்கரவாதத்தை வெளிமாநிலத்தில் நிற்கும் என்னை விட நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இன்று கூடன்குளமும் இடிந்தகரையும் தமிழகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.அவர்களின் உணவாதாரம் மறுக்கப்படுகிறது,மருத்துவம் மறுக்கப்படுகிறது.இந்த நிகழ்வுகள் நமது கரங்களின் டிவி ரிமோட்டில் கடந்து செல்கிறது.

நாம் என்ன  செய்ய முடியும்?வீதியில் இறங்க முடியாமல் வேலைகளும் கருத்து மாறுபாடுகளும் தடுக்கலாம்.ஆனாலும் அணு உலையை மீறி அங்கே குழந்தைகள் படும் பட்டினி போராட்டத்தை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டுகிறேன்.உங்களால் இந்த சிறு பணியை வேண்டுகோளை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன்.

எனவே பதிவர்களே குறைந்த பட்சம் அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவம் கிடைக்க கீழ்காணும் செஞ்சிலுவை சங்கத்திற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் தரலாமே.எனக்கு ஆங்கில மொழி அறிவு இல்லை.இந்த கடிதமும் முகநூலில் நண்பர்.Mgpt Caa கேட்டுகொண்டதுதான்.

  • Please send the email or call to INDIAN RED
    CROSS to ensure WATER AND FOOD is supplied to
    Idinthakarai
    ***************
    ***************
    ***************
    ***************
    Subject: URGENT ATTN NEEDED: Food and Water
    stopped for people in Idinthakarai, Koondankulam,
    India by Government Forces
    Dear Sir,
    I hope you would be informed about the recent
    developments in Koodankulam and Idinthakarai,
    where people are peacefully protesting against
    the commissioning of Koodankulam Nuclear
    Power Plant.
    For the last two days the govt forces encircled
    the coastal village by land and sea and has
    stopped the drinking water and food coming to
    village. There were more than 20000 people living
    in the Idinthakarai and Koothankuli village. There
    are confirmed reports that there is scarcity for
    drink water and food since yesterday (11-
    Sep-2012) night. I on behalf of the people who
    concern about the safety of the villagers urge
    you to taken immediate action to ensure food and
    water is being supplied to those people.
    This is very urgent. We appeal for your
    immediate action in this regard.
    Thanking you,
    ***************
    ***************
    ***************
    ****************
    Indian Red Cross Society
    Tamil Nadu Branch
    Old No. 50/ New No. 32 . Montieth Road,
    Egmore ,
    Chennai -600 008.
    Phone: +91-44-28554548,
    +91-44-28554425,
    +91-44-28554117,
    +91-44-28511711,
    +91-44-24980971.
    Contact Person
    Mr. K.Gnanagurubaran
    Chief Administrative Officer
    +91-9962502737
    Fax : 28586997.
    BB : 28554425.
    VT&RC 28554117.
    Branches : 80.
    E-mail: redcross@vsnl.net.


நீங்கள் நினைத்தால் இது போல பெட்டிசன்களும்,கடிதங்களும் தயார் செய்யலாம்.அனுப்ப வேண்டிய அதிகார மட்டங்களுக்கு அனுப்ப வழி செய்து தரலாம். மிக பரந்த அளவில் அனுப்பவும் வைக்கலாம்.பதிவர் சந்திப்பு கூட்டத்திற்கு வந்த பதிவுகளை போல இது போன்ற பெட்டிசன்கள் உங்களால் பதிவிடப்ப்படும்போது அது பலரை சென்றடையும் என்று மிகவும் நம்புகிறேன்.

சமூக வலைதளங்கள் மூலமாகவும் இதனை முன்னெடுக்கலாம்.குறிப்பாக என்னை போன்ற புதிய பதிவர்கள் மூலமாக இதன் வீச்சு குறைவாக இருக்கும் என்பதால்  பிரபல ,மூத்த பதிவர்களை மனிதாபிமான மேடைக்கு அழைக்கின்றேன்....தங்களின் வாசக எண்ணிக்கை அதிகம் என்பதும் ஒரு காரணம்.. .தவிர அனைத்து பதிவர்களும் இதில் ஒன்றுபட்டு நிற்க வேண்டுகிறேன்.


பதிவர்கள்....இணைய உலகில் பல முக்கிய விடயங்களை மூன்றாம் கோணங்களை  என்னை போல எங்கேயோ கிடக்கும் மனிதனுக்கு கொண்டு வந்த பெருமைக்கு உரியவர்கள். அதிலும் அடி உதை என்ற துப்பாக்கி என்ற அளவில் மட்டுமே இருந்த என்னையும்  என்னை போல இருந்த மனிதர்களை பொது மக்கள் ,நம்மவர்கள்,அடிப்படை உரிமைகள் அன்பு செய்யுங்கள் என்று வாழ்வின் இன்னொரு பக்கத்தை காட்டி தந்தவர்கள் வலைஞர்கள்( கலைஞர் அல்ல ) மற்றும் புத்தகங்களே.

பாதுகாப்பு படை வீரன் என்ற முறையில் இல்லை இதுபோல நடக்கும் ஒவ்வொரு அடக்குமுறைக்கும் மிகவும் வெட்கி தலைகுனிகிறேன்.(நிமிரவே முடிவதில்லை)

நேற்று கொடியங்குளம்  இன்று  கூடங்குளம் ...நாளை நமது ஊராக கூட அமையலாம்.

குரல் கொடுக்கும் நெஞ்சங்ககளுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!