Translate

செவிலியர் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவிலியர் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 ஜூன், 2012

விஜயா மருத்துவமனையின் ஆணவம்

மிழகத்தில் னியார் மருத்துவமனைகளில் ணியாற்றி வரும் செ‌‌‌‌வி‌‌லியர்கள் மாதம் 4யிரம் ம்பளத்தில்தான் வேலை செய்து ந்தனர். அதுவும் குறிப்பாக சென்னை ப்பல்லோ, மலர், ம்.ம்.ம். ள்ளிட்ட பெரிய மருத்துவமனைகளிலும் செவிலியர்களுக்கு மோசமான தியத்தை வழங்கி ந்தது.

பொறுத்தது போதும் ன்று பொங்கி எழுந்த செவிலியர்கள் திய உயர்வுக்காக போராட்டத்தில் குதித்தனர். இவர்களின் நிலையை கண்டு போராட்டத்திற்கு அரசியல் ட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் வேறு ழியின்றிப்பல்லோ ள்ளிட்ட மரு‌‌த்துவமனைகள் செவிலிய‌‌ர்களுக்கு தியத்தை உயர்த்தியது. இதனா‌‌ல் செவி‌‌லியர்கள் ங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ந்தநிலையில் திய உயர்வு கோரி சென்னை வடபழனியில் ள்ளவிஜயா மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.விஜயா குழும செவிலியர்கள் 
 குறைந்த பட்சம் ரு.15000 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும், அடிப்படை  
ஊதியத்தில் 15விழுக்காடு ஊதிய உயர்வு ஆண்டு தோறும் வழங்க வேண்டும். பணியில் சேர்ந்த உடன் சரிபர்ப்புக்கு பின்னர் செவிலியர்களின் படிப்பு சான்றிதழ்களை  வழங்க வேண்டும், ரிஸ்க் படியை உயர்த்த வேண்டும், விடுதி கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கைகளை நிர்வாகத்திடம் கோரி வருகின்றனர்.

இது தொடர்பான கோரிக்கை மனுவை 20 நாட்களுக்கு முன்னரே நிர்வாகத்திடம் முறையாக அளித்துள்ளனர்

ஆனால் வழக்கமான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள் செவிலியர்களின் மீது  

ஏவி விடப்பட்டு உள்ளன. செவிலியர்களை மிரட்டியும் பழிவாங்கும் நோக்கத்தோடு சங்க நிர்வாகி பேபி சபீனாவை பணி நீக்கம் செய்தும் உள்ளனர்

எனவே இது போன்ற அடக்கு முறைகளை எதிர்த்து போராட வேண்டிய கட்டாய  சூழலில் உள்ள செவிலியர்கள் 28.05.2012 அன்று காலை 6.00 மணி முதல் வேலை நிறுத்தம் செய்ய ஏக மனதாக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது.

 

இதனை தொடர்ந்து  இன்று விஜயா மருத்துவமனை, சம்பள உயர்வு கேட்டு போராடிய  150க்கும் மேற்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் மற்றும் விடுதியிலிருந்து வெளியேற்றம் செய்தது என்ற செய்தியை காணும் போது முதலாளித்துவத்தின் கோரமுகம் இளிப்பு காட்டுவதாய் தோணுகிறது.நான்காம் கட்ட பேச்சு வார்த்தை நடை பெறும் முன்பே செவிலியர்களை நீக்கியது விஜயா மருத்துவமனையின் அகங்காரத்தையும் ஆணவத்தையுமே காட்டுகிறது.பேச்சுவார்த்தையின் போதே பணி நீக்கம் செய்வதன் மூலம் செவிலியர்களை பயமுறுத்தி பார்க்கிறது விஜயா மருத்துவமனை.
                                 இந்தியாவில் மிக சிறப்பான செவிலியர் பயிற்சி தரும் மாநிலங்கள் தமிழ் நாடும் கேரளாவும் மட்டுமே.தனியார் கல்லூரிகளில் பல லட்சம் செலவு செய்து படிப்பை முடிக்கும் செவிலியர்களுக்கு மற்றமாநிலங்களில் தரும் சம்பளத்தை ஒப்பிடும் போது தமிழ் நாட்டில் கிடைக்கும் சம்பளம்  மிக குறைவே.Bsc(N) முடித்து வடக்கு மாநில கல்லூரிகளில் வேலை பார்க்கும் TUTORகளுக்கு குறைந்தது 12,000 ரூபாய் சம்பளமும்,Msc(N) முடித்தவர்களுக்கு 30000ரூபாய்க்கு மேலும் சம்பளம் கிடைக்கிறது என்ற நிலையில் வெளிநாடுகளில் இன்னும் அதிகமாகவே சம்பாதிக்க முடிந்தாலும் நமது மாநிலத்தில் மேற்சொன்ன சம்பளத்தில் பாதி மட்டுமே கிடைக்கும் நிலையிலும் மலையாளிகள் போல இல்லாமல் நம் மக்கள் வெளி மாநிலங்களுக்கு குறைவாகவே செல்கின்றனர்.
                                 இதன் பொருட்டே சற்று வசதியான குடும்பத்தில் உள்ள செவிலியர்கள் வெளி நாடுகளுக்கு செல்வதும்  வெளிநாட்டு மாப்பிளையோடு திருமணம் முடித்தும் செட்டிலாகி விடுகின்றனர்.மீதி உள்ள நடுத்தர மற்றும் ஏழ்மையான செவிலியர்கள் மட்டுமே மூவாயிரத்திற்கும் நாலாயிரத்திற்கும் இரவு பகல் என்று பணி புரிகின்றனர்.கடன் வாங்கி படித்த படிப்பிற்கும்  செய்யும் பணிக்கும் ,வேலைப்பளுக்கும் இடையே அரசு வேலை கிடைக்குமா என்றால் அதுவும் கிடையாது.
                               அரசு செவிலியர் பயிற்சி கல்லூரிகளில் படித்த செவிலியர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வேலை உண்டு என்பதால் தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்கள்  தனியார் மருத்துவ மனைகளை நம்பியே இருக்க வேண்டிய சூழ்நிலை.அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில்  லட்சங்கள் செலவழித்து படித்தாலும் தனியார் மருத்துவமனைகள்  சென்னையில் 7000, 8000 சம்பளமும் சிறு நகரங்களில் 4000-6000 சம்பளமும் மட்டுமே கொடுக்கின்றன.
                         
                              பிரபல தனியார் மருத்துவமனைகளில் வரும் சில பணக்கார விடலைகளின் பாலியல் தொந்திரவு முதற்கொண்டு பல பிரச்சனைகளை எதிர்கொண்டு நிற்கும் செவிலியர்களுக்கு கிடைக்கும்  ஊதியம் மிக சொற்பமே.சென்னை அப்போல்லோவில் பாக்க பாக்க பிடிக்கும்  நடிகர் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை பார்க்க தன் நண்பர்களுடன் குடித்து விட்டு வந்தவர், அங்கு பணியில் இருந்த செவிலியர் தன்னையும் தன் நண்பர்களையும் பார்த்து சிரித்து வரவேற்கவில்லை என்று நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார்.இப்படி பல சின்ன சின்ன பிரச்சனைகள் ஒரு பக்கம் என்றால் முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற முட்டாள்தனமான வாதத்தை போல  செவிலியர் என்றால் "ஒரு மாதிரி
'யாக சித்தரிக்கப்படும் முட்டாள் சமூகத்தில் அதே சமூகத்திற்கு மனம் கோணாமல் பணி புரியும் செவிலியர்களுக்கு விஜயா மருத்துவமனை போன்ற முதலாளித்துவ மருத்துவமனைகளின் செயல்கள்  மிக மிக அநியாயமானது.பலவித மறைமுகமான மிரட்டல்கள் வரும் என்று தெரிந்தும் போராடும் பெண்செவிலியர்களின் மனஉறுதியை பாராட்டத்தான் வேண்டும்.
                           
                        
                        சமீப காலமாக நாடெங்கும் எழுந்துள்ள செவிலியர் போராட்டம் பெரிய மருத்துவமனைகளுக்கு சவாலாகவே உள்ளது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றே தோன்றுகிறது.அப்போல்லோ முதல் சில மருத்துவமனைகள் INTERNATIONAL NURSING COUNSIL சான்றிதழுக்காக(இந்த சான்றிதழுக்காகத்தான் 2000ம் ஆண்டில் அப்போல்லோவில் ஊதிய உயர்வும்,பணி நேர குறைப்பும் மேற்கொள்ளப்பட்டது)வழிக்கு வந்தாலும் ஆணவம் பிடித்து திரியும்   பல மருத்துவமனைகளுக்கு கடிவாளம் இட்டு செவிலியர்களுக்கு தக்க வருமானத்தையும் பாதுகாப்பையும் தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
                       செவிலியர்களின்  போராட்டத்திற்கு ஆதரவாக அரசியல் தலைவர்களில் தா.பாண்டியன் மட்டுமே குரல் கொடுத்ததாக தெரிகிறது.செவிலியர் பணியில் அதிக விழுக்காடு பெண்கள் என்பதாலே அலட்சியம் காட்டுபவர்களுக்கு இது போன்ற போராட்டங்கள் சரியான அதிர்ச்சி வைத்தியமாக அமைய வேண்டுமெனில் அரசு தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வை தர வேண்டும்.இது ஒரு செவிலியர் போராட்டம் மட்டுமில்லாமல் பெண்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வு போராட்டமாகவும் கருதலாம்.
                    நண்பர்கள் தங்களால் குறைந்த பட்சம் முகநூல் வலைபூ மூலம் இந்த போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவையும் மருத்துவமனைகளுக்கு எதிர்ப்பையும் பதிவு செய்யவும்.ஊடங்களின் கவனத்தில் தீவிரமடையும்போது மட்டுமே நம்மை கொள்ளையடித்து அப்பாவி செவிலியர்களையும் கசக்கி பிழிந்து ரத்தம் குடிக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு குறைந்த பட்ச பயமாவது உண்டாகும்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற சூழ்நிலையில் உண்டாகும் போராட்டங்கள் ஒரு நாளும் தோற்றதில்லை.