Translate

கம்யூனிஸ்ட். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்யூனிஸ்ட். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 மே, 2012

கடத்தப்பட்ட நானும் கம்யூனிஸ்ட்தான்-அலெக்ஸ் பால் மேனன் அதிரடி பேச்சு

கடத்தப்பட்ட நானும் கம்யூனிஸ்ட்தான்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நேற்று நெல்லை மாவட்டத்தில் தமது சொந்த ஊருக்குவந்தார். காலையில் ரயிலில் வந்தவர், தமது கிராமமான சமாதானபுரத்திற்கு சென்று உறவினர்களை சந்தித்தார். மாலையில் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது: நான் கடத்தப்பட்டபோது எனக்காக குரல் கொடுத்த நெல்லை மாவட்டத்து மக்களை நினைக்கும்போது நெகிழ்வாக உள்ளது. நான் ஆறு ஆண்டுகள் அங்கு பணியாற்றியுள்ளேன். அப்போதெல்லாம் பத்திரிகை, மீடியாவின் வெளிச்சத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன். தற்போது அதற்கெல்லாம் சேர்த்து தெரிய ஆரம்பித்துள்ளேன். இருப்பினும் நான்மேற்கொண்ட மக்கள் பணிக்காக நான் தெரிந்துகொண்டால் மகிழ்ச்சியடைவேன். கடத்தப்பட்ட கலெக்டர் என்ற அடையாளம் எனக்கு தேவையில்லை. சுக்மாவிற்கு முன்னதாக இன்னொரு மாவட்டத்தில் பணியாற்றியபோது அங்கு சுயஉதவி பெண்கள் குழுக்களுக்காக பணியாற்றியுள்ளேன்.

நான் கடத்தப்பட்ட சுக்மா மாவட்டம் மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களிலும் மக்கள் என்னை விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த அளவு மக்கள் என் மீது அன்பு வைத்திருந்தார்கள். அரசியல்வாதிகள் கடத்தப்பட்டபோதெல்லாம் மக்களிடம் ஏற்படாத எழுச்சி நான் கடத்தப்பட்டபோதும் இன்னொரு கலெக்டர் கிருஷ்ணா கடத்தப்பட்டபோதும் மட்டுமே இத்தகைய எழுச்சி ஏற்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தில் தமிழர்களான பாரதிதாசன், பிரசன்னா, அன்பழகன், ஆர்.பிரசன்னா உள்பட ஐந்து பேர் கலெக்டர்களாக உள்ளோம். நேர்மையுடனும், உள்ளத்திடத்தோடும் பணியாற்றுவதில் தமிழர்களுக்கு நிகர் எவரும் இல்லை என்பதை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

என்னை கடத்தியதும் கம்யூனிஸ்ட்கள்,மீட்க உதவியதும் கம்யூனிஸ்ட்கள்தான் என்றார்கள். நான் சொல்கிறேன்..கடத்தப்பட்ட நானும் கம்யூனிஸ்ட்தான். நான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். சக மனிதனின் துக்கம் கண்டு பொங்குகிற, போராடுகின்ற யாருமே கம்யூனிஸ்ட்தான்.




இந்த  உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும்வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள்- சே
      
முக நூலில் இந்த செய்தியை தந்து எனக்கும் வலைப்பூவில் வெளியிட அனுமதி கொடுத்த TNFISHERMAN VOICESக்கு நன்றி.நன்றி.

Tnfishermen Voices (தமிழக மீனவர்கள்)