Translate

அஜீத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஜீத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஜூலை, 2012

பில்லா-II "புழுத்த சாணி கொளுத்த பணம்"

ஒரு அவசர வேலையா எங்க ஆபிசருட்ட லீவு வாங்கிட்டு சென்னை கிளம்பினா வழில டெல்லில ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலை.பொன்னான தலைநகரில் பொத்திகிட்டு செவனேன்னு ஸ்டேஷனில் கெடந்தவனை  பில்லா  ஆவ் ஆவ்னு கூப்பிட உள்ளே DON DONனு யுவன் சங்கர் ராஜா பக்க வாத்தியத்தில் பட்டய கிளப்ப என் வாழ்க்கையிலே முதல் முறையாக 250 ரூபாய்க்கு ஒரு படத்துக்கு மொய் வைத்து பார்த்தா...பக்கி மாதிரி ஒரு படம்..அதுக்கு பக்கத்துக்கு பக்கம் வெளம்பரம்."அரைப்படி அன்னதானம் விடியும் மட்டும் மேள தாளம் "
ஓபனிங் கொடுமை.

ஒரு மொக்கையான அஜீத் அறிமுகத்திலேயே படத்தோட லட்ச்சணம் புரிஞ்சி போச்சு.அகதியாக அறிமுகம் ஆகி பெரிய தாதாவாகிற கதைல லாஜிக் வேண்டாம்...ஆனா நான் கொடுத்த 250க்கு ஒரு மதிப்பு வேண்டாமா?கதை என்னானா...விமர்சனம்கிற பேரில் கதையை சொல்ல கூடாதுன்னு அன்பு தம்பி சீனு வேண்டுகோள் வைக்க..நீயென்ன சொல்றது நான் கதையே வைக்க மாட்டேன்னு டைரக்டரே  சொல்லிட்டா நாம என்ன பாஸ் செய்ய ?அதனால நீங்க என் 250ரூபாய திருப்பி கொடுத்தாலும் என்னால கதை சொல்ல முடியாது.இல்லை சொல்லித்தான் ஆகணும்னா.....லுங்கி கட்டிய ரவுடி கோட் போட்ட DON னா மாறுவதுதான் கதை.இயக்குனர்ட்ட கேட்டா இது ஒரு கேங்ஸ்டர் படம்னு அள்ளி விடுவாரு..புலம் பெயர் தமிழன் பெருமை உலகத்துலேயே தமிழ் திரை உலகத்துக்கு மட்டும்தான் தெரியுது.நல்லா சம்பாதிக்கிறாங்க....


ஆரம்பத்தில்  இருந்து கடைசி வரை அஜீத் சந்திப்பவர்கள் அனைவரும் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் வந்து தொலைப்பதால் குத்துபட்டும் குண்டடிப்பட்டும் சாகிறாங்க.கூடவே நம்மளையும் சாகடிக்கிறாங்க.விஜய் படத்துல வில்லங்க எல்லாரும் சத்தம் போட்டு சாகடிப்பாங்க.அஜீத் படத்துல அவர் முதல் அனைவரும் தமிழ் பேஷி கொல்றாங்க.இடுப்புக்கு மேலே காலை தூக்கி சண்டை போட சிரமப்படுகிறார் அஜீத்.தொப்பை தடுக்குதா இல்லை எப்படியும் பக்கி பசங்க விசிலடிப்பாங்ககிற தெகிரியமா?வாய்க்கு வாய் ஆரம்பம் முதலே நாடகம் மாதிரி  டேவிட்டு....,அப்படியா...,வாங்க....,உட்காருங்கனு வேறு மாநில நடிகர்களின் உச்சரிப்பும் வசனமும் ஹிந்தி சீரியல் எபெக்ட்.
அஜித்துக்கென்று மட்டும் பொறுக்கியெடுத்து   பஞ்ச் வசனங்கள்  தந்த வசனகர்த்தாக்கள் இரா.முருகன்,முகம்மது இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஹெலிகாப்டரில் நடக்கும், ஓடும், தொங்கும், கடைசி சண்டை காட்சிகளை எம்ஜிஆர் நம்பியார் சண்டை படம் பாக்காதவங்க போய் பார்க்கலாம்.பியர் பாட்டில்கள் உடையும் சண்டைக்காட்சி அருமை.

காமோ சோமோன்னு டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு ஒரு நாயகி?தரைய  விட தண்ணிலதான் புள்ளைய மிதக்க விட்டுருக்காங்க.ஒன்னு நீச்ச குளத்துல குளிக்கிறாங்க... இல்லைனா குடிக்கிறாங்க.வாழும்போது உள்ள அழகை விட சாகும்போது சரியான கில்மா அழகு அந்த பா(ர்)ட்டி .வேறென்ன எதிர்பார்க்க முடியும்?இன்னொரு நாயகி பார்வதி மாமா மாமான்னு படத்துக்கும் உடைக்கும் சம்பந்தம் இல்லாமல் நம்மை சாகடித்து தானும் செத்துபோகிறார்.நல்ல வேளையாக இவரின் அசட்டுத்தனமான கொஞ்சல்கள் சிணுங்கல்கள் பாடல்கள் எதுவும் இல்லாதது யாம் செய்த புண்ணியம்.


டிமிட்டிரி 
வில்லன் டிமிட்டிரி...அறிமுக சீனுக்கு தாராளமாக ஏராளமாக விசில் அடிக்கலாம்.ஆனா டிமிட்டிரிங்கிற பேருக்கெல்லாம் விசில் அடிக்க மாட்டாங்களாம்.வில்லனின்  சிக்ஸ் பேக் உடம்பை காட்டியிருந்தால்   அஜித்தின் ஸ்கூல் பேக் அருமை  தெரிந்திருக்கும்.டிமிரிட்டிரிங்கிற வில்லனின் சாகசத்தை இந்தி படமான FORCEல பாக்கலாம்.தன்னால விசில் அடிப்பீங்க.

எதுவுமே நல்லா இல்லைன்னு சொல்லி கிளம்புற நேரம் கட்ட கடைசியில் யுவன் சங்கர் ராஜாவின் DON DON  பாட்டு பட்டய கிளப்புது.இந்த ஒரு பாட்டே போதும் என்று நினைத்தது தப்பு  ராசா...

.
உச்ச கட்ட ஆபாசம்

ஆபாச அரங்கேற்றங்கள்,வன்முறை ரத்தங்கள்.நாலு பக்கமும் நம்முள் பாயும் கத்தி குத்துக்களும்,தோட்டாக்களும்,அழகான அஜித்தை விட அதிகமாக உள்ளது மாபெரும் மன்னிக்க முடியா குற்றமாகும்.விறு விறு படம் தருகிறேன் என்று  நினைத்து கடித்து  குதறியுள்ளார்கள்.பில்லாவின் ஸ்டைலிஷ் இல்லை,மங்காத்தாவின் திருப்பங்கள் இல்லை.முழுக்க முழுக்க இயக்குனர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய படம்."வளக்க தெரியா இடையன் ஆடு வளக்க போயி நூறு ஆடும் ஆறு ஆடு ஆச்சு".

காமெடி இல்லைனா என்ன பாஸ் ?நாங்க இருக்கோம்ல...அஜித்தின் அடிப்பொடிகளும்,விசிலடிச்சான் குஞ்சுகளும் காத்து கெடந்து விசில் அடிச்சதுதான் காமெடி.இது போக ..த்தா தல மேலேயே கை வைக்கிரியா/ தலனா சும்மாவா? தல... போடு தல அவனை...யாருகிட்ட?தல பின்னாடி பாரு தல...சூப்பர் தல..இப்படி நெறைய நெறைய வசனங்கள் .டெல்லி SAKET PVR தியேட்டரில் மொத்தமா 175 சீட் இருக்கும்.முதல் நாள் முதல் ஷோவில் 40 சீட் காலி.டெல்லி தமிழன் புத்திசாலி.என் வீட்டு அஜீத் ரசிகை இடை இடையே தலை வலி மாத்திரை தேடிவிட்டு கடைசியில் 60% படம் நல்லா இருக்குன்னு சொன்னப்போ ஒன்னு புரிந்தது "இமைக்குற்றம் கண்ணுக்கு தெரியாது"

உமி குத்தி கை நோகலாமா? எனக்கு நோகுது மக்களே...மிச்ச மீதியை நீங்களே குத்துங்க எசமான் குத்துங்க.இனிமே எவன் பேரை சொல்லியும் படம் ஓட கூடாது..அவன் பேரை சொல்லி யாரும் சொம்பெடுத்து ஆடவும் கூடாது.

டிஸ்கி:பத்து ட்ரைலரை ஒரு படமா பார்த்தா எப்படி இருக்கும்?அதுதான் பில்லா II.அஜீத் ரசிகர்கள்,என்னை போல முதல் காட்சி பைத்தியங்கள்,வேறு படங்கள் இல்லாத காரணங்களால் பில்லா II "புழுத்த சாணி கொழுத்த பணம்".

மொக்கை படம் பார்த்த மக்கள் இந்த மொக்கை பதிவுக்கு எதாவது எழுதி போட்டு போங்களேன்...காசா பணமா?அஜீத் ரசிகர்கள் மேள தாளத்தோடு வரவேற்கப்படுகிறார்கள்.