Translate

புதன், 8 ஏப்ரல், 2015

வேலியே உயிரை மேய்கிறது -செம்மரக்கொலைகள்

மரம் வெட்டியதுக்குலாம் மனுசனை சுடலாம்னா சுடுவதற்கு துப்பாக்கிகள் மட்டும்தான் மிஞ்சும்.அத்தனை மனிதரும் மரணதண்டனைக்கு தகுதியானவர்களே.

வழக்கம்போலவே காக்கிச்சட்டையின் கிட்டப்பார்வை தூரத்துப்பார்வை கோளாறால் கிடைத்தவரை சுட்டும், பெரும் பணம் படைத்தவரை விட்டும் தனது கடமையை(!) நிலைநாட்டி காடு கடந்து நாடு கவனிக்க வைத்துள்ளது.

இத்தகைய கொலைகள் இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல என்பதை போலவே அதன் மீதான அரசியலும் புதிதல்ல.தமிழக தொழிலாளிகள் சுட்டுக்கொலை என்று பத்திரிக்கைகளும்,அதையே அரசியல்வாதிகளும் பரபரப்பாக அறிக்கைகள் அளித்து  தங்கள் தொழில் வித்தையை மொத்தமாக இறக்கி கொண்டிருக்கின்றனர்.

இந்திய பங்களாதேஷ் எல்லையில் கடத்தல் மற்றும் ஊடுருவல் காரணத்தால் இதுவரை கொல்லப்பட்டவர்கள் 600ஐ தொடும்.பங்களாதேசிகள், இந்தியர்கள் என இருபக்கமும் செத்து விழுந்தவர்கள் யாரும் நாடு பிடிக்க போர் முரசு கொட்டியவர்கள் அல்ல.வயித்துப்பாடுக்கு மாடு,சீனி கடத்தியவர்களும் நாடு கடந்து ஓடி வந்தவர்களும்தான்.

இந்திய இலங்கை எல்லையில் போதைப்பொருள் கடத்துவதால் மீனவர்கள் சுடப்படுகிறார்கள் என்று செய்திகள் வாசிக்கிறார்கள்.அந்த கடலோடி மீனவனும் எட்டு மணி வேலை முடித்து வீட்டோடு வாழாமல் கடலோடு மடிவது  செங்கோட்டையை விலைக்கு வாங்கும் முயற்சியாக இருக்க வாய்ப்பில்லை. 

ஆக தமிழக ,பங்களா தேஷ் இலங்கை எல்லையில் சுடப்பட்டு விழும் அத்தனை உயிர்களுக்கும் ஒரே ஒற்றுமை தமது வாழ்வாதாரத்தை நிலைப்படுத்திக்கொள்ள ஓடும் சாதாரண மனிதர்கள்தான் அன்றி அம்பானிகள் அல்ல.

இதை தமிழராக வைத்து அரசியல் செய்வதும் உணர்ச்சிவசப்படுவதும் ஒரு வகையிலும் நன்மை தரப்போவதில்லை.வாழ்வாதாரம் ஏதுமன்றி இருக்கும் கொல்லப்பட்டவர்களின்  கிராமங்கள் கிட்டத்தட்ட 270 இருக்கும்.ஆனால் பள்ளிகளோ பத்து விரல்களில் அடக்கி கொள்ளலாம் என பத்திரிக்கையாளர் வினி சர்பனா குறிப்பிடுகிறார்.

இங்கு வந்து வேலை பார்ப்பவனை வந்தேறி என வசைபாடி விரட்டும் டம்ளர்கள் அடுத்த ஊரில் போய் வேலை பார்ப்பதும், பிரச்சனையானால் குமுறுவதும் அப்பட்டமான அரசியல் பிழைப்புத்தனம்.பிரச்சனையின் மைய தேவையான வாழ்வாதாரத்துக்கான திட்ட முன்னெடுப்பகளை மடை திருப்பி உணர்ச்சியாக்கும் அரசியலால்  ஒரு பயனும் இருப்பதாக தெரியவில்லை.

சுட்டுத்தள்ளும் காவல்துறையின் காவலனும் சாதாரண குடும்பத்திலிருந்து வேலைக்கு சேர்ந்தவன்தான். அதிகார கூட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட  கூலியைப்போலதான் அவனும்.காவலர்களை வைத்து மரம் வெட்டுபவர்களையும் ,மரம் வெட்டுபவர்களை வைத்து காவலர்களையும் கொல்ல  வைத்து கொள்ளையடித்து கொண்டிருக்கிறது அதிகார வர்க்கம்.

சாவுன்னு தெரிந்துதானே போனான் மரம் வெட்ட..அப்ப செத்துத்தான் ஆகணும்னு சிலர் சொல்றாங்க.நல்லவேளையா இத அவங்க கேட்க உயிரோட இல்லை.இந்த மாதிரி மனதுடைய விமர்சனங்கள் துப்பாக்கி குண்டுகளை விட மோசமானவை.

இருபக்க வீட்டில் உள்ள குழந்தைகளின் சொப்பனம் விசேச நாட்களில் என் தந்தை புது உடுப்பு வாங்கி தருவார் என்ற ஒரே கனவாகத்தான் இருக்கும்.அவ்வளவுதான் அவர்களின் உச்ச பட்ச எதிர்பார்ப்புமாக கூட இருக்கும். அந்த கனவைத்தான் நனவாக்க உயிரை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த தந்தைமார்கள்.

நல்லவேளையாக கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியராக இல்லை என்றே கருதுகிறேன்.இலையெனில் இந்நேரம் தப்பிக்க முயன்ற அல் ஊ பா தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்னு வியாபாரம் களை கட்டியிருக்கும்.

வேலியே உயிரை மேய்கிறதுன்னு சொன்ன தம்பி சீனுவின்  இந்த ஒற்றை வரியில் வேலி மேய்கிறதோ இல்லையோ வேலி போட்டு மேய்கிறார்கள் பணம்படைத்தவர்களும் அதிகார வர்க்கமும்.சட்டீஸ்கர் ஜார்கண்ட் மலைப்பகுதிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கையளித்து விட்டு வறிய மக்களை  குவியலாக கொன்று போடுவதை வேறு எப்படி சொல்ல?


வேலியே உயிரை மேய்கிறது- தலைப்பிற்கு நன்றி திடங்கொண்டு போராடு சீனு








10 கருத்துகள்:

  1. ////மரம் வெட்டியதுக்குலாம் மனுசனை சுடலாம்னா சுடுவதற்கு துப்பாக்கிகள் மட்டும்தான் மிஞ்சும்.அத்தனை மனிதரும் மரணதண்டனைக்கு தகுதியானவர்களே.///

    அட்டகாசமான வலியுடன் எழுதிய வரிகள். வாழ்க! மிக மிக நல்ல பதிவு. இப்படி பலருக்கும் உரைக்கும் மாதிரி எழுதிய உங்கள் பதிவுக்கு நன்றி!

    அன்புள்ள,
    உங்கள் வாந்தி பேதி வருண்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வருண் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும்

      நீக்கு
  2. நல்ல நியாயமான கருத்தை முன் வைத்து எழுதியமைக்கு நன்றி நண்பரே...
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. human rights shield terrorist and rapist from death(hang) sentence but failed to save innocent. what a shame ;'(

    பதிலளிநீக்கு
  4. இது இத்துடன் நிக்காது, இனவெறிம ொழிவெறி என்று மக்கள் மனிதில் நஞ்சை கலந்து சமத்துவத்தை கேள்வி.குறி ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைத்தான் அரசியல்வாதிகள் முன்னெடுக்கிறார்கள் ..தவறு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்.இனவெறி எனில் அது துகிலுரிக்கப்பட வேண்டும்.மக்களுக்கு உண்மை தெரியட்டும்.ஆனால் பதிலுக்கு பதில் தெலுங்கரை அடிப்போம் உதைப்போம் எனில் அது முட்டாள்தனமே.வருகைக்கு நன்றி மருதாச்சலம் நண்பரே

      நீக்கு
  5. அவர்களின் குழந்தை நிலை நினைத்தால்... மனம் கனக்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் வலிதான் ...ஆனால் பாழாப்போன ஆட்சியும் அரசும் நியாய தர்மமாக நடப்பதில்லையே

      நீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....