அவன் பெயர் தனஞ்சய் ராய். 22 வயது. அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து எல்லை பாதுகாப்பு படையில் பணி புரிய தகுதி பெற்று நான் பணிபுரியும் ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் கடந்த மூன்று மாதமாக பயிற்சி பெற்று வந்தான்.எனது கம்பெனியில் எனது அணியில் இருந்த அவனது NO 104.பயிற்சியில் பெயர் சொல்லி அழைப்பது கிடையாது.
![]() |
| FIRING RANGE |
துப்பாக்கி சுடும் பயிற்சி பகல் இரவு பயிற்சியாக கடந்த 2ம் தேதி முதல் ஆரம்பிக்க..ராஜஸ்தானின் கோரமான வெயில் தனது உச்ச பட்ச உக்கிரத்தை காட்ட ஆரம்பித்தது.3ம் தேதி இரவு 1130 மணி அளவில் தனது அறையில் வாந்தியும் காய்ச்சலுமாக HEAT STROKEகினால் வாட ஆரம்பித்த அவன் REFERENCE HOSPITAL என்று கிண்டலும் வேதனையுமாக அழைக்கப்படும் எ பா படை மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்து செல்லப்பட அங்கிருந்த செவிலியால் அழைக்கப்பட்ட எ பா படை மருத்துவர் அவனை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு(மகாத்மா காந்தி மருத்துவமனை. ஜோத்பூர்) அனுப்பி வைத்தபோது இரவு மணி 1.30 மணிக்கு மேலாகியது.எனக்கு தகவல் கிடைத்து 2.30 மணிக்கு நான் சென்ற போது எமர்ஜென்சி பிரிவில் அவனது வாயில் இரண்டு குழாய்கள் பொருத்தபட்டிருந்தன.ஆக்சிஜன் கொடுக்க பட்டிருக்கும் போல..இன்னொரு குழாய் வழியாக ரத்தமா ஏதோ ஒன்று வெளி வந்து கொண்டிருந்தது.தன்னை அறியாமல் கழியும் மலம் தொடர்ந்து கொண்டிருக்க மருத்துவர்கள் நிலைமை மிக கவலைக்கிடமானது என்று சொல்லி சென்றார்கள்.
![]() |
| DHANANJAI ROY |
மோசமான நிலையிலும்3.00 மணிக்கு மேல் வார்டுக்கு அவன் மாற்றபட்டான்.அங்கு பணியில் இருந்த மருத்துவர் அநேகமாக பயிற்சி மருத்துவராக இருக்க வேண்டும்.அவரும் நிலைமை கவலைக்கிடம் என்றாலும் தொடந்து கண்காணித்து கொண்டார்.தொடர்ந்து தூக்கி வாரி போடும் அவனது உடல் எனக்கு பயத்தை தந்தது.வாயில் உள்ள குழாயினை மீறி வெளிவரும் ரத்த வண்ண நுரை தெறித்து வர வர சில நேரம் உடலை முறுக்கி கொண்டு திமிரும் அவனை கட்டுப்படுத்த முடிந்த அளவு உயிரை கட்டுப்படுத்த முடியவில்லை.பயிற்சி மருத்துவரால் அழைக்கபட்ட மூத்த மருத்துவர் கடைசி வரை வராமலேயே இருந்து விட காலை 9.25க்கு தன் 22 வயதோடு மூச்சை நிறுத்தி கொண்டான் தனஞ்சய்.
![]() |
முதல் மாத சம்பளம் இட பட்டு அதை எடுக்கவோ பார்க்கவோ பெருமிதப்படவோ முடியாமல் போய்விட்டான் அவன்.முதல் சம்பளத்தில் அவன் அம்மாவுக்கு என்ன வாங்கி அனுப்புவதாய் சொல்லியிருந்தானோ?தன் காதலிக்கு என்ன என்ன சொல்லியிருந்தானோ?வரும் வாரம் நடக்கவிருக்கும் முதல் இடைதேர்வுக்கு கஞ்சி இட்டு தயாராக உள்ள அவன் சீருடை எதுவும் அறியாமல் காத்து கிடக்கிறது.
பொது சனத்தில் ஒருவன் உணர்ச்சி வசப்பட்டு மருத்துவரை தாக்கியவுடன் 'ருத்ர' தாண்டவமாடும் மருத்துவ மாமனிதர்கள் தனது பணிக்கு கூட வராமல் வீட்டிலும்,வெளியேயும் ஆணீ புடுங்கும் மருத்துவர்களை கண்டிக்க,பேச மறுப்பது மறுப்பது ஏன்?
அங்கு வந்த ஊடகம் CHANNEL24ன் நிருபரிடம் சொன்னபோது, தட்டி கேட்கவே ஊடகம்... நீங்க தைரியமா சொல்லுங்க என்ற போது மருத்துவர் அலட்சியத்தை பற்றி நான் சொன்னேன்.இறந்த தனஞ்சய் உடலின் புகைப்படம் கேட்டபோது அதையும் தருவதாக சொன்னேன்.இரண்டு நாளாகி எந்த செய்தியும் எந்த ஊடகத்திலும் வராமால் இன்று நேரிடையாக ஊடகத்து அலுவலகத்தில் புகைப்படம் கொடுத்த போது புகைப்படம் போதாது காணொளி வேண்டும் என்றனர்.அது தவிர எ பா படையில் இருந்து இது குறித்து அரசு மருத்துவமனைக்கு விசாரணை கோரி கடிதம் வரும் பட்சம் நாங்கள் அந்த கடிதத்தை மூலமாக வைத்து அனைவரிடமும் பேட்டி..விசாரணை செய்து செய்தி தருவோம் என்றனர்.ஊடகம் எனது மூத்த அதிகாரிகள் என்னிடம்.. ஊடகம் மிக கவனமான ஒன்று..உன்னிடம் செய்தி வாங்கி சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து பேசி பரஸ்பர புரிதலில்,மிரட்டலில் காரியம் சாதிப்பார்கள் என்ற போது எனக்கு நம்பிக்கை வரவில்லை.ஆனால் மேல் கண்ட இரு புகைப்படத்தை கூட வாங்காமல் எ பா படையின் நடவடிக்கை பொறுத்தே எங்கள் செய்தி வெளியாகும் என்பது ஊடகத்தையும் சந்தேகிக்க தூண்டுகிறது.
அரசு மருத்துவர்களின் அலட்சியத்தினால் மட்டுமே இந்த உயிரிழப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.கைப்பையில் இருந்து விழும் ஒரு வேண்டாத காகிதத்தை போல ஒரு மிக சாதாரணமாக ஒரு உயிரை,இளமையை,வீரனை,தொலைத்தது மிக கொடுமையான ஒன்று..
சரியான முறையான சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறக்கும் பட்சம் மனசுக்கு இவ்வளவு வேதனை இருந்திருக்காது.இன்றும் நேற்றும் அவனது மதிப்பெண் பட்டியலில் ----- குறி இடும்போது கண்களில் நீர் கட்டுகிறது.
| Tweet | |||||



மனதை நெகிழ வைக்கும் பதிவு.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ..எனக்கு கோவம் வருகிறது..ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நீக்குkanneere muttiyathu....
பதிலளிநீக்குnanpaa!
thuppu kettu vittomo. naam!
உண்மைதான் சகோ..கோழைத்தனமும் இயலாமையும் சகிப்புத்தன்மை என்று மாற்றப்பட்டுவிட்டது.நேர்மையாக சொன்னால் துப்புகெட்டு விட்டோம் என்று நீங்கள் சொல்வதுதான் சரி.
நீக்கு//முதல் மாத சம்பளம் இட பட்டு அதை எடுக்கவோ பார்க்கவோ பெருமிதப்படவோ முடியாமல் போய்விட்டான் அவன்.முதல் சம்பளத்தில் அவன் அம்மாவுக்கு என்ன வாங்கி அனுப்புவதாய் சொல்லியிருந்தானோ?தன் காதலிக்கு என்ன என்ன சொல்லியிருந்தானோ?வரும் வாரம் நடக்கவிருக்கும் முதல் இடைதேர்வுக்கு கஞ்சி இட்டு தயாராக உள்ள அவன் சீருடை எதுவும் அறியாமல் காத்து கிடக்கிறது. //
பதிலளிநீக்குநெஞ்சை உலுக்க வைத்த பதிவு ...
நித்தியானந்த கவர்ச்சி போன்ற விஷயங்கள் என்றல் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் ஊடகம் இதில் எல்லாம் கவனம் செலுத்தாது காக மட்டுமே உழைக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துவிட்டது
உங்கள் முயற்சிக்கு ஒரு சபாஷ்
அந்த ஊடகம் எங்கள் எ பா படை இடத்திற்கு வந்து உயரதிகாரிகளிடம் பேசுவதாய் சொன்னார்கள்.பார்க்கலாம்...மற்றபடி சீனு என்னால் அவ்வளவு சீக்கிரமாக இதை விட மனசில்லை.என்ன செய்யலாம் என்றும் தெரியவில்லை.
பதிலளிநீக்குவீர மரணத்திற்கஞ்சாதவனுக்கு இப்படி ஒரு கோர மரணமா? படித்த எங்களுக்கே உள்ளம் குமுறுகிறது சகோ.
பதிலளிநீக்குஇன்னும் என்னால் தாங்க முடியவில்லை சகோ...
நீக்குபடிக்கிறப்பவே நெஞ்சு பதறுது பாஸ்...நாட்டைக் காப்பவர்களுக்கு சேவை செய்யாமல் பின்ன என்ன டாக்டர்?
பதிலளிநீக்குபணத்துக்கு முன்னாடி சுகங்களுக்கு முன்னாடி தன் பிள்ளைகளை கூட கவனிக்க மாட்டார்கள் நண்பரே...
நீக்குpadikkave kastama irukuu.its very hard to digest the matter of the content.but what can v do?like this incidents happened in mostof the govt hospitals in india.because of u this news/incident comeoutin to blogspot/web.otherwise it wont comeout.i think still we follow very old law and order,its need to reveiw and reshape to modern india.especially medical and law department.if at all any mistakes found in any hospitals the entire team should be punished with out any compliments. (AIMS hospital DESAI case still in pending)i know itis not possible in our country.because v r all INDIAns.Here money only speak/write the history of the citizen.
பதிலளிநீக்குLet we pray god(?????????)for dhananjey family for better life.
//பயிற்சியில் நான் செய்யும் தவறுக்கு தண்டனை கொடுக்கும் நீங்கள் வேலைக்கே வராத அந்த மருத்துவருக்கு என்ன தண்டனை தருவிர்கள்?//
பதிலளிநீக்குநெஞ்சை உலுக்கும் கேள்வி. படை வீரர்கள் எத்தனை தியாகங்கள் வெளியே தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்! எம் எல் ஏ / எம் பி ஆக முதல் தகுதி அவர் வீட்டில் ஒருவர் ராணுவத்தில் இருக்க வேண்டும் என்பது போன்ற ரூல் வந்தால் தான் படை வீரர்கள் நிலைமை முன்னேறும்!